கர்நாடகா அரசியல் குழப்பங்கள், கொறடாவின் பணி குறித்து விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. நாடாளுமன்ற சட்டமன்ற விவகாரங்களில் கொறடா என்றால், கட்சியின் உறுப்பினர்கள் முக்கியமான வாக்கெடுப்பில் ஆஜராகி வாக்களிக்க வேண்டும் என்றோ அல்லது அவர்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் வாக்களிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவிடுதல் ஆகும்.
சட்டமியற்றுபவர்கள் கட்சியின் வழியைப் பின்பற்றுவதற்கு கொறடா (Whip) என்பது பழைய பிரிட்டிஷ் நடைமுறையிலிருந்து இந்த சொல் உருவானது. இந்தியாவில் அனைத்து கட்சிகளும் அவர்களுடைய உறுப்பினர்களுக்கு ஒரு கொறடாவை வழங்க முடியும். கட்சிகள் தங்களுடைய நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒரு மூத்த உறுப்பினரை கொறடாவாக நியமிக்க முடியும். அந்த உறுப்பினர் தலைமை கொறடா என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு துணை கொறடா உதவி செய்வார்.
கொறடாவின் முக்கியத்துவத்தை ஒரு உத்தரவு எத்தனை முறை அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது என்பதிலிருந்து ஊகிக்கலாம். கொறடா ஒரு வரியை ஒருமுறை அடிக்கோடிட்டு கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. ஒருவேளை உறுப்பினர்கள் கட்சியின் வழியைப் பின்பற்ற மறுத்தால் அவர்களை கொறடா தடுக்க அனுமதிக்கப்படுகிறது.
இரண்டு வரி கொறடா உத்தரவு வாக்களிப்பின்போது, உறுப்பினர்களை ஆஜராகுமாறு வழி காட்டுகிறது. மூன்று வரி கொறடா உத்தரவு மிகவும் வலிமையானது. இது ஒரு மசோதாவை இரண்டாவதாக தாக்கல் செய்தல் போன்ற நடவடிக்கைகளின்போதும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கட்சியின் வழியில், உறுப்பினர்கள் கடமையை நிறைவேற்ற வைக்கிறது.
கொறடாவை மீறுதல்
கொறடாவின் உத்தரவை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. இங்கிலாந்தில் கொறடா உத்தரவை மீறும் எம்பிக்கள் தங்களுடைய கட்சியின் உறுப்பினர் பதவியை இழப்பார்கள். ஆனால், அவர்கள், நாடாளுமன்றத்தில் சுதந்திர உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தியாவில், உறுப்பினர்கள் கொறடாவின் 3 வரி உத்தரவுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தால், சட்டமன்றத்தில் உறுப்பினரின் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதன்படி, அத்தகைய உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் அனுமதிக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரு உத்தரவுக்கு எதிராக வாக்களிக்கும் போது, கட்சியை திறம்பட பிரிக்கும் போது விதிவிலக்குகள் உள்ளன. இவையே கொறடா பணி ஆகும்.