Advertisment

வெள்ளை அறிக்கை: காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளை மட்டும் குறிப்பிட்டுள்ளதா? பாஜக: மறைக்கப்பட்ட புள்ளி விவரங்கள்

இந்த வெள்ளை அறிக்கையானது, காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாக குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் மோசமான கடன் முதல் பணம் வீக்கம் வரையும், அதிகபடியான ஊழல் மற்றும் மோசமான பொருளாதார கொள்கைகள் போன்றவற்றை இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஜக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய அரசின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய நிதி அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கை, அரசியல் உள்நோக்கங்களை கொண்டதாக உள்ளது. “ நாங்கள் ஆட்சி செய்யத் தொடங்கிய போது “ என்ற வாக்கியத்துடன்  வெள்ளை அறிக்கை தொடங்கிறது. வழக்கமாக ஒரு வெள்ளை அறிக்கை இப்படி அமைவதில்லை என்று  இரண்டு முன்னாள் நிதி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெள்ளை அறிக்கையானது, காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாக குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் மோசமான கடன் முதல் பணம் வீக்கம் வரையும், அதிகபடியான ஊழல் மற்றும் மோசமான பொருளாதார கொள்கைகள் போன்றவற்றை இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த வெள்ளை அறிக்கையானது பா.ஜ.க.வின் 2024ம் தேர்தலுக்கான பிரச்சாரங்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2004 முதல் 2009 வரை காங்கிரஸ் ஆட்சியில் ஜி.டி.பி ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி 8.8 % ஆக இருந்தது. இந்த சாதனையை மத்திய அரசின் வெள்ளை அறிக்கை தவிர்த்துள்ளது.

2004 முதல் 2008ம் ஆண்டில் உள்ள இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முந்தைய பாஜக ஆட்சியின் கொள்கை சீர்திருத்தங்கள்தான் காரணம் என்று வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

மத்திய அமைச்சகத்தின் தேர்வு செய்யப்பட்ட புள்ளி விவரங்கள், காங்கிரஸ் ஆட்சியின் வெற்றிகளை குறிப்பிடாமல் தோல்விகளை மட்டும் குறிப்பிடுகிறது.

மோர்கன் ஸ்டான்லி என்ற நிதி சேவைகள் வழங்கும் நிறுவனம் 2013ம் ஆண்டு, வலுவற்ற பொருளாதாரம் கொண்ட 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் 2004 முதல் 2014 வரை உள்ள காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் வலுவற்ற நிலையில் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பலன் தரும் பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி, வங்கியின் கடன் இருப்பு நிலைகளில் முக்கியத்துவம் கொடுத்து அதற்கு தீர்வு காணப்பட்டது. இதுபோல வேலை வாய்ப்புகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 2017 முதல் 2018 வரை 6 % இருந்தது, தற்போது 2022 முதல் 2023ம் வரை 3.2 % ஆக குறைந்துள்ளதாக வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தகவல் ‘ Periodic Labour Force Surveys’ எடுக்கப்படுள்ளது.

அதேநேரத்தில், சம்பளம் இல்லா ஊழியர்களின் சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று ’Periodic Labour Force Surveys’ தகவல் தெரிவிக்கிறது. இந்த சதவிகிதம் 2017 முதல் 2018ல் 13.6 % ஆக இருந்தது. இதுவே 2022 முதல் 2023-ல் 18.3 % ஆக அதிகரித்து உள்ளது. சம்பளம் பெறும் ஊழியர்களின் சதவிகிதம் 2017-2018-ல், 22.8% ஆக இருந்தது. தற்போது இது 2022-2023-ல் 20.9 % குறைந்துள்ளது.

 Read in English 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment