மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் ஆப்பிரிக்க சிறுத்தைகள் விடப்பட்டுள்ளன. இந்தியாவில், இந்த வகை சிறுத்தைகள் அழிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இந்தப் பெரிய பூனைகள் (சீட்டா) இந்திய நிலப்பரப்பில் குடியேறி வாழ முடியுமா என்ற கவலை எழுந்துள்ளது. இதற்கிடையில், 2018 இல் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தேசிய பூங்காவாக மேம்படுத்தப்பட்ட குனோ, அதன் விளைவாக சில மாற்றங்களைக் காண உள்ளது.
அந்த வகையில் சீட்டா மித்ராக்கள் என்ற செயல்திட்டமும் உள்ளது.
சிறுத்தை மித்ராக்கள் என்றால் யார்?
இந்த சீட்டா மித்ராக்கள் (சிறுத்தை நண்பர்கள்) என்பவர்கள் உள்ளூர் மக்களுடன் சிறுத்தையை பழக்கப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
ஏனெனில், திய விலங்கு அறிமுகப்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்களை அருகிலுள்ள கிராமங்கள் அறியாமல் இருக்கலாம்.
இந்த நிலையில், சிறுத்தை மற்றும் அதன் குணாதிசயங்களைப் பற்றி உள்ளூர் மக்களுக்கு மேலும் புரிய வைப்பதற்காக, பள்ளி ஆசிரியர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் தலையாரி உட்பட 51 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 பேருக்கு வன அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளனர். இவர்கள் சீட்டா மித்ராக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இவர்களின் பணி என்ன?
பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசத்தின் குனோவில் சிறுத்தைகளை விடுவித்த நாளில், சிறுத்தை மித்ராக்களுடன் தனது தொடர்புகளின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அவர் ஒரு குழுவிடம் அவர்களின் வேலை என்ன என்று கேட்பதைக் காணலாம், மேலும் குழுவைச் சேர்ந்த ஒருவர், "சிறுத்தைகளின் பாதுகாப்பு" என்று பதிலளித்தார்.
மேலும் அந்த வீடியோவில், விலங்குகள் பூங்காவிற்கு வெளியேயும் கிராமங்களுக்கும் செல்லாமல் பார்த்துக் கொள்வதாகவும், தேவைப்பட்டால் அதிகாரிகளை எச்சரிப்பதாகவும், மற்ற வழிகளை விட சிறுத்தைகளுக்கு மனிதர்களிடமிருந்து பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் விளக்குகிறார்கள்.
அப்போது, 2007 ஆம் ஆண்டு இதேபோன்ற முயற்சி குஜராத்தில் ஆசிய சிங்கங்களைப் பாதுகாக்க உதவியது என்று மோடி கூறினார்.
இந்த நிலையில் சிறுத்தை மித்ரா ஒருவர் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. சம்பந்தபட்ட நபர் ஒரு காலத்தில் கொள்ளைக்காரராக இருந்தார்.
1970-1980களில் சம்பல் நதி பகுதியில் மறைந்து வாழ்ந்துவந்த அவர் பெயர் ரமேஷ் சிகர்வார்.
இவர், சீட்டா மித்ராக்களின் முக்கிய பணி தகவல் கொடுப்பதும், சிறுத்தைகளை வேட்டையாடுவதில் இருந்தும் தடுப்பதும் என்றார்.
1952-ல் இந்தியாவில் ஆசிய சிறுத்தைகள் அழிந்து போனதற்கு காரணம் வேட்டைதான்.
ஆனால் இன்று சிறுத்தைகளைப் பாதுகாக்க இரண்டு ஆளில்லா விமானப் படைகள் தயார் செய்யப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் கொண்ட ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 24 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சிறுத்தைகளை பொதுமக்கள் எப்போது பார்க்க அனுமதிக்கப்படும்?
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் அதிகாரி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இந்தச் சிறுத்தைகள் ஒரு மாத காலம் பாதுகாப்பில் தங்க வைக்கப்படும்.
பின்னர் அவை வேட்டையாட தொடங்கியதும் பூங்காவில் விடப்படும். முதலில் அவை இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளல் வேண்டும். அதற்காக தற்போது பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
முன்னதாக செப்டம்பர் 25ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பேசும்போது, “சிறுத்தைகள் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தயாராக சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும்” என்றார்.
தொடர்ந்து, “அதன்பின்னர் வன அதிகாரிகள் கொண்ட குழுவினர் பூங்காவை மதிப்பீடு செய்வார்கள். அதன் பின்னர் பொதுமக்கள் விலங்குகளை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.