ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI), 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ராணுவ செலவினங்களின் போக்குகள் குறித்த தனது அறிக்கையில், உலகில் ராணுவத்திற்கு அதிக செலவும் செய்யும் நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா, இந்த பெருந்தொற்று காலகட்டத்திலும், 2019 உடன் ஒப்பிடும்போது அவர்களின் ராணுவச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.
கடந்த ஆண்டு, அமெரிக்கா மொத்தம் 778 பில்லியன் டாலர்களையும், சீனா 252 பில்லியன் டாலர்களையும், இந்தியா 72.9 பில்லியன் டாலர்களையும் ராணுவத்திற்காக செலவிட்டுள்ளன. 2019 முதல் இந்தியா ராணுவத்திற்கு செய்யும் செலவினம் 2.1 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் அதிகரிப்பு 1.9 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா தனது 2019 செலவினங்களை விட 4.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மொத்தத்தில், உலகளாவிய ராணுவ செலவினம் கடந்த ஆண்டு 1981 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 2019 ஐவிட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அக்டோபர் 2020ன் கணிப்புப்படி, கொரோனா பெருந்தொற்று பெரிய அளவில் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தால், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவிகிதம் சுருங்கியபோதும், ஒரு வருடத்தில் உலக ராணுவ செலவினங்களில் 2.6 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SIPRI என்பது என்ன?
ஸ்வீடனை தளமாகக் கொண்ட SIPRI என்பது ஒரு சர்வதேச தன்னாட்சி அமைப்பாகும், இது மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு பற்றிய ஆராய்ச்சிகளை செய்கிறது. இது ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தின் முடிவின் அடிப்படையில் நிறுவப்பட்டது மற்றும் SIPRI அதன் நிதித் தேவையின் கணிசமான பகுதியை ஸ்வீடிஷ் அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர மானிய வடிவில் பெறுகிறது.
1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SIPRI, தரவு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகள் போன்றவற்றை சட்ட உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
2020 SIPRI அறிக்கை என்ன சொல்கிறது?
2020 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ராணுவச் செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் சீனாவுக்கு 1.7 சதவீதமாகவும் மற்றும் இந்தியாவுக்கு 2.9 சதவீதமாக இருந்தது.
2011 முதல் 2020 வரை, அமெரிக்க ராணுவச் செலவு 10 சதவீதம் குறைந்தது, ஆனால் சீனாவில் 76 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், இந்தியாவின் ராணுவச் செலவும் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆசியா மற்றும் ஓசியானியாவில் ராணுவச் செலவு, 2019 ஐ விட 2020 ல் 2.5 சதவீதம் அதிகமாகவும், 2011ஐ விட 47 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. மேலும், 1989 முதல் ராணுவச் செலவு தடையின்றி மேல்நோக்கிச் செல்லும் போக்கைத் தொடர்கிறது, என்று SIPRI கூறியதுடன், இவ்விரு கண்டங்களில் செலவினங்களின் அதிகரிப்புக்கு முதன்மையான காரணம் சீனாவும் இந்தியாவும் இணைந்து 2020 ஆம் ஆண்டில் இப்பகுதியில் மொத்த ராணுவ செலவினங்களில் 62 சதவீதத்தை கொண்டிருந்ததுதான்.
ரஷ்யா 61.7 பில்லியன் டாலர், இங்கிலாந்து 59.2 பில்லியன் டாலர், சவுதி அரேபியா 57.5 பில்லியன் டாலர், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை தலா 53 பில்லியன் டாலருக்கும் குறைவாக என ராணுவச் செலவினங்களில் அடுத்த இடங்களில் இந்த நாடுகள் உள்ளன.
சமீபத்திய தரவுகளை வெளியிட்ட SIPRI, மொத்த உலகளாவிய ராணுவச் செலவு கடந்த ஆண்டு 1981 பில்லியன் டாலராக உயர்ந்ததுள்ளது. இது 2019 ஆம் ஆண்டை விட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்றும் 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ராணுவ செலவுகளில் ஐந்து பெரிய நாடுகள் 62 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருந்ததன் விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக ராணுவச் செலவு அல்லது ராணுவச் சுமை 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரியான 2.4 சதவீதத்தை எட்டியது, இது 2019 ல் 2.2 சதவீதமாக இருந்தது. மேலும், 2009 ல் உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ராணுவச் சுமையில் ஆண்டுதோறும் மிகப்பெரிய உயர்வு இருந்து வருகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ராணுவச் செலவுகள் உலகளவில் உயர்ந்துள்ள நிலையில், சில நாடுகள் சிலி மற்றும் தென் கொரியா போன்றவை, திட்டமிட்ட ராணுவ செலவினங்களின் ஒரு பகுதியை தொற்றுநோய் தடுப்புக்கு வெளிப்படையாக மறு ஒதுக்கீடு செய்தன. மேலும் பிரேசில் மற்றும் ரஷ்யா உட்பட பல நாடுகளும் 2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப ராணுவ வரவு செலவுத் திட்டங்களை விடக் குறைவாகவே செலவிட்டன என்று அறிக்கை கூறுகிறது.
2020 ஆம் ஆண்டில் இந்த தொற்றுநோய் பாதிப்பு உலகளாவிய ராணுவச் செலவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும், என்று SIPRI ஆயுதங்கள் மற்றும் ராணுவச் செலவுத் திட்டத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் டியாகோ லோபஸ் டா சில்வா கூறியுள்ளார். மேலும், தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டிலும் இதே அளவிலான ராணுவ செலவினங்களை நாடுகள் கடைபிடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியா பற்றி SIPRI கூறியது என்ன?
முன்னதாக மார்ச் மாதத்தில் வெளிவந்த ஒரு SIPRI அறிக்கை, இந்தியாவின் ஆயுத இறக்குமதி 2011-2015 மற்றும் 2016-2020 க்கு இடையில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது, அதே நேரத்தில், பாதுகாப்பு தளங்கள் மற்றும் ஆயுதங்கலின் இறக்குமதிச் சார்புநிலையைக் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்று கூறுகிறது.
இருப்பினும், சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது அதிக இறக்குமதியாளராக இருந்து வருகிறது. அதேநேரம், 2016-2020 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள், முதல் ஐந்து உலகளாவிய ஆயுத ஏற்றுமதியாளர்களாக இருந்தனர்.
இந்தியாவின் ஆயுத இறக்குமதி 2011–15 மற்றும் 2016–20 க்கு இடையில் 33 சதவீதம் குறைந்துள்ளது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சப்ளையர் ரஷ்யாதான், அதேநேரம் இந்தியாவின் அமெரிக்க ஆயுதங்களின் இறக்குமதியும் 46 சதவீதம் சரிந்துள்ளது என SIPRI ஆய்வு கூறுகிறது.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியா சுயச்சார்பு உற்பத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உந்துதல் மட்டுமல்லாமல், மாறாக ரஷ்ய ஆயுதங்களை நம்பியிருப்பதைக் குறைப்பது மற்றும் சிக்கலான கொள்முதல் நடைமுறை உள்ளிட்ட காரணிகளே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று அறிக்கை கூறுகிறது.
இந்திய ஆயுத இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, முக்கியமாக அதன் சிக்கலான கொள்முதல் செயல்முறைகள் மற்றும் ரஷ்ய ஆயுதங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியால் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
SIPRI ஆயுத மற்றும் ராணுவ செலவுத் திட்டத்தின் ஆராய்ச்சியாளரான அலெக்ஸாண்ட்ரா குய்மோவா கூறுகையில், ரஷ்யா 2011–15 மற்றும் 2016–20க்கு இடையில் சீனா, அல்ஜீரியா மற்றும் எகிப்துக்கான ஆயுதப் பரிமாற்றங்களை கணிசமாக அதிகரித்தது, ஆனால் இது இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியை ஈடுசெய்யவில்லை.
ரஷ்ய மற்றும் சீன ஆயுத ஏற்றுமதியைக் குறைப்பதன் மூலம், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய முதல் ஐந்து ஆயுத ஏற்றுமதியாளர்களில் மூன்று பேரின் பரிமாற்றங்களில் கணிசமான அதிகரிப்பு, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் பரிமாற்றங்களில் கணிசமான அதிகரிப்பு என பெரும்பாலும் முக்கிய ஆயுதங்களின் சர்வதேச பரிமாற்றங்கள் 2011–15 மற்றும் 2016–20 க்கு இடையில் ஒரே மட்டத்தில் இருந்தன என்று அறிக்கை கூறியுள்ளது. இந்த காலகட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் ஆயுத இறக்குமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் சவுதி அரேபியாவில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், எகிப்து 136 சதவீதம் மற்றும் கத்தார் 361 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அதற்கு முன்னர், SIPRI தனது 2019ஆம் ஆண்டு புத்தகத்தில், 2018 முதல் உலகளவில் அணு ஆயுதங்கள் குறைத்துள்ளதைக் கண்டறிந்தது, ஆனால் நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை நவீனமயமாக்குகின்றன. மேலும் இந்தியா உட்பட ஒன்பது அணு ஆயுத நாடுகளில் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொத்தம் 14,465 ஆக இருந்த அணு ஆயுதங்களில் 600 அணு ஆயுதங்களை குறைத்து, 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொத்தம் 13,865 அணு ஆயுதங்கள் இருந்தன என்று கூறியுள்ளது.
இந்த அறிக்கை தனித்தனியாக “பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்” (ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள அல்லது செயல்பாட்டு தளங்களில் அமைந்துள்ள) மற்றும் “பிற போர்க்கப்பல்கள்” (ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது காத்திருப்பில் இருக்கும் போர்க்கப்பல்கள் மற்றும் அகற்றப்படுவதற்கு காத்திருக்கிற ஓய்வுபெற்ற போர்க்கப்பல்கள்) என எண்ணிக்கையை அளித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது 2019 ஆம் ஆண்டில் 130-140 “பிற போர்க்கப்பல்கள்” இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil