பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு நேற்று (மார்ச் 11) கொரோனா வைரசை 'உலகளாவிய தொற்றுநோய்’ என்று அறிவித்தது.
"கொரோனா வைரஸ் தீவிரத்தன்மை, அதை கட்டுப்படுத்துவதற்கான நமது செயலற்ற தன்மை ஆகியவற்றில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். எனவே கொரொனா வைரசை (கோவிட் 19 ) உலகளாவிய தொற்றுநோயாக (Pandemic ) வகைப்படுதியுள்ளோம்,”என்று உலக சுகாதார அமைப்பு ட்வீட் செய்துள்ளது.
.@WHO is deeply concerned by the alarming levels of the #coronavirus spread, severity & inaction, & expects to see the number of cases, deaths & affected countries climb even higher. Therefore, we made the assessment that #COVID19 can be characterized as a pandemic. https://t.co/97XSmyigME pic.twitter.com/gSqFm947D8
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) March 11, 2020
உலகளாவிய தொற்று (பேன்டிமிக்) என்றால் என்ன? உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பேன்டிமிக் என்பது ஒரு நோயின் உலகளாவிய பரவலாகும்.
ஒரு பகுதியில் உள்ள குறிப்பிட்ட மக்கள் தொகையில், பொதுவாக எதிர்பார்க்கப்படுவதை விட, ஒரு நோயின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தால், அது உலகளாவிய தொற்று என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.
எனவே, உலகளாவிய தொற்றுநோய் மதிப்பீடு, நோயின் தீவிரத்தை விட, நோயின் பரவலைத் தான் கணக்கில் கொள்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தானது என்று கூறி வந்த உலக சுகாதார அமைப்பு, அதை உலகளாவிய தொற்று என்று சமீப காலம் வரையில், அறிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
மார்ச் 5 ம் தேதி, உலக சுகாதரா அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில் : “ஒரு சில நாடுகளில் அதிக எண்ணிக்கை இருந்தாலும், 115 நாடுகளில் கொரொனா வைரசால் எந்த பாதிப்பும் இல்லை. 21 நாடுகளில் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும், கொரொனா வைரஸ் கண்டரியப்பட்ட ஐந்து நாடுகளில், கடந்த 14 நாட்களாக புதிய வழக்குகள் பதிவாகவில்லை” என்று தெரிவித்தார்.
சரி இனி என்ன நடக்கும்?
ஒரு வகையில் பார்த்தல், எந்த மாற்றமும் இல்லை. இந்த அறிவிப்பினால், உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதியோ (அ) அதிக அதிகாரமோ கிடைக்க வாய்ப்பில்லை.
எவ்வாறாயினும்,கொரொனா வைரசின் தாக்கம் ஒரு புதிய மட்டத்தை அடைந்துள்ளதால், அந்த மட்டத்தை உலக சுகாதார அமைப்பு முறையாக மதிப்பிட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
மார்ச் 11 அன்று, டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில் : “உலகளாவிய தொற்றுநோய்" என்ற சொல் லேசானதல்ல, அதை நாம் கவனக்குறைவாக பயன்படுத்த முடியாது. இது தவறாகப் பயன்படுத்தப்பட்டால், நியாயமற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும். இது போன்ற அறிவிப்பு நமது போரட்டத் தன்மையை குறைக்கும்(உதாரணமாக, கொரொனா வைரசைவலுவானதாக தோற்றமளிக்கும்)
இது தேவையற்ற துன்பத்திற்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.
'உலகாளவிய தொற்றுநோய்' என்ற இந்த அறிவிப்பு, கொரோனா வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டை மாற்றாது. அமைப்பின் கடமையை மாற்றாது, மேலும் நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இது மாற்றாது. ” என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.