நடிகை கங்கனா ரனாவத்துக்கு இந்திய உள்துறை அமைச்சகம் மத்திய படை பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான அனைவருக்கும், மத்திய அரசின் பாதுகாப்பு கிடைக்கின்றதா?
இல்லை. இத்தகையாக பாதுகாப்பு பொதுவாக “விஐபி (முக்கிய பிரமுகர்) பாதுகாப்பு” என்று அழைக்கப்படுகிறது. மேலும், அரசாங்கம் மற்றும் சிவில் சமூகத்தில் உயர் நிலை அடைந்ம்த ஒருவருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பொதுவாக, மத்திய அரசு இத்தகைய பாதுகாப்பை தனிநபர்களுக்கு வழங்குவதை தவிர்த்து வருகிறது. உண்மையில், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதப்படும் பல முக்கிய பிரமுகர்களுக்கு, மாநில உளவுத்துரையின் அச்சுறுத்தலின் மதிப்பீட்டில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில காவல்துறையினர் பாதுகாப்பை வழங்குகின்றனர்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை யார் தீர்மானிக்கின்றார்கள்?
இந்திய உளவுத் துறை (ஐபி) ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW) உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பை தீர்மானிக்கிறது.
புலனாய்வு அமைப்புகள் பெரும்பாலும், தங்கள் ஆதாரங்கள் மூலம், பயங்கரவாதிகள் அல்லது பிற குழுவினரால் ஏற்படும் அச்சுறுத்தலை முதலில் அளவிடுகின்றன. தொலைபேசி உரையாடல்கள், மனித நுண்ணறிவு அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்கள் ஆதாரங்களாக விளங்குகின்றன.
அரசாங்கப் பதவிகளில் இருப்பதால் சிலருக்கு தானாகவே மத்திய அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. பிரதமர் மற்றும் அவரது உடனடி குடும்பமும் இதில் அடங்கும். உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்றோருக்கும் அவர்கள் வகித்து வரும் பதிவிகள் காரணமாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தீபிகா படுகோனுக்கு ஏன் பாதுக்காப்பு வழங்கவில்லை?
பத்மாவத் எதிர்ப்பின் போது, நடிகை தீபகா படுகோனின் தலை துண்டிக்கப்படும் என்று கர்னி சேனா அமைப்பு வெளிப்படையாக அச்சுறுத்தியது.
இந்தியாவில் செயல்படும் புலனாய்வு அமைப்புகள் எந்தவொரு சட்டரீதியான அமைப்பிற்கும் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை வெளிபடுத்த அவசியமில்லை. உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் மேற்பார்வைக்கு மட்டுமே அவை உட்பட்டவை. இந்த அமைப்புகள் உருவாக்கும் ரகசிய உளவுத் தகவல்கள், குறிப்பாக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்த தககவல்கள் பொது களத்தில் வெளியிடப்படவில்லை.
வெளிப்படையற்ற தன்மை, அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களைத் தவிர வேறு எவருக்கு பொறுப்புணர்வை வெளிபடுத்த அவசியமற்ற தன்மை போன்ற காரணத்தால், விஐபி பாதுகாப்பு பணிகள் தவறாக வழிநடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில், அரசியல் மற்றும் சமூக கவுரவம் போன்ற காரணங்களுக்காக பலருக்கும் விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நடிகை கங்கனா ரணாவத்துக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு:
எக்ஸ் (X), ஒய் (y), ஒய்-பிளஸ்(y+ ) , இசட் (Z ), இசட்-பிளஸ் (Z +) மற்றும் எஸ்.பி.ஜி (S.P.G)(சிறப்பு பாதுகாப்பு குழு) ஆகிய 6 பிரிவுகளில் விஐபி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
எஸ்.பி.ஜி பிரிவினர் பிரதமருக்கான பாதுகாப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்வார்கள். மத்திய அல்லது மாநில அரசுகள், அச்சுறுத்தல் உள்ள எவருக்கும் மற்ற பிரிவு பாதுகாப்பை வழங்க முடியும். ஒவ்வொரு பிரிவிலும் படை வீரர்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. எக்ஸ் வகை பாதுகாப்பு மிக அடிப்படையான நிலை.
தனிநபர் பாதுகாப்பு பணிகளில் சமத்துவம் மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அந்தப் பணிகளில் என்.எஸ்.ஜி வீரர்கள் ஈடுபடுத்தப்படுவதை தவிர்த்து சி.ஆர்.பி.எஃப் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்த அரசு முடிவு செய்தது.
என்.எஸ்.ஜி வீரர்கள் தற்போது ஜம்மு காஷ்மீரில் சவாலான சூழல்களீல் பணியாற்றி வருவதாககும், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு விஐபி களுக்கு பாதுகாப்பு வழங்குவது அவர்களது கடமை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது.