Advertisment

யோகி ஆதித்யநாத் அழிப்பேன் என சபதம்… கொலைக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி; யார் இந்த அட்டிக் அகமது?

மாஃபியா தலைவனாக இருந்து அரசியல்வாதியான அட்டிக் அகமது, புல்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி., உ.பி.யில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முலாயம் சிங் யாதவ் கட்சித் தலைவராக இருந்தபோது, சமாஜ்வாடி கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவர். ஆனால், அகிலேஷ் யாதவ் விலகி இருந்தார்.

author-image
WebDesk
New Update
Atiq Ahmed, who is Atiq Ahmed, Yogi Aditaynath on Atiq Ahmed, criminal Atiq Ahmed, Atiq Ahmed crimes, indian express, express explained

தற்போது சிறையில் உள்ள மாஃபியா தலைவனாக இருந்து அரசியல்வாதியான அட்டிக் அகமது, புல்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி., உ.பி.யில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முலாயம் சிங் யாதவ் கட்சித் தலைவராக இருந்தபோது, சமாஜ்வாடி கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவர். ஆனால், அகிலேஷ் யாதவ் விலகி இருந்தார்.

Advertisment

2005 ஜனவரியில் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) எம்.எல்.ஏ ராஜு பால் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த உமேஷ் பால் மற்றும் அவரது போலீஸ் காவலரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் எம்.பி அட்டிக் அகமது மற்றும் மனைவி சஹிஸ்தா பர்வீன், அவர்களது இரண்டு மகன்கள், அவரது இளைய சகோதரர் காலித் அசிம் என்ற அஷ்ரப் மற்றும் பலருக்கு எதிராக மீது போலீசார் சனிக்கிழமை (பிப்ரவரி 25) வழக்குப் பதிவு செய்தனர்.

சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது குற்றவாளிகளை ஊக்குவித்ததாக முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் உத்தரபிரதேச சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகமது போன்ற மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகளை அழிப்போம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சபதம் செய்தார்.

யார் இந்த அட்டிக் அகமது?

2016-ம் ஆண்டு பிரயாக்ராஜில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகமது, முன்னாள் எம்.பி-யாகவும், ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர். 1989-ல் அலகாபாத் மேற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அவரது அரசியல் பயணம் தொடங்கியது. அடுத்த இரண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட பிறகு, அகமது சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996-ல் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அப்னா தளத்தின் ஒரு பகுதியாக மாறி 2002-ல் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றார்.

அடுத்த ஆண்டு, அவர் மீண்டும் சமாஜ்வாடி கட்சிக்கு திரும்பினார். 2004-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெற்றி பெற்றிருந்த புல்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி ஆனார்.

ராஜு பால் கொலை வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட்டபோது இந்த அரசியல்வாதிக்கு முதல் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. வெளியான செய்திகளின்படி, அலகாபாத் மேற்கு தொகுதிக்கு 2005-ல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ராஜு, அகமதுவின் சகோதரர் அஷ்ரப்பை தோற்கடித்த பிறகு இந்த சம்பவம் நடந்தது. “2004 பொதுத் தேர்தலில் அலகாபாத்திலிருந்து மக்களவைத் தொகுதியில் அட்டிக் வெற்றி பெற்ற பிறகு, அந்த இடம் காலியாகியதால் அகமது குடும்பத்திற்கு இது ஒரு பெரிய இழப்பு” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியது.

ஜனவரி 25, 2005 அன்று ராஜு தனது கூட்டாளிகளான சந்தீப் யாதவ் மற்றும் தேவி லால் ஆகியோருடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவரது வீட்டின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜுவின் மனைவி அளித்த புகாரின் பேரில், கலவரம் செய்தல், கொலை முயற்சி, கொலை மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அட்டிக் அஷ்ரப் மற்றும் அடையாளம் தெரியாத 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரசியல் அழுத்தம் மற்றும் காவல்துறையின் அழுத்தம் காரணமாக, 2008-ல் சரணடைந்த அட்டிக் அகமது 2012-ல் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் 2014 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், தோல்வியடைந்தார். அகிலேஷ் யாதவ் அகமதுவின் குற்றப் பதிவு காரணமாக அவரிடம் இருந்து விலகியதால், சமாஜ்வாடி உடனான அவரது உறவு மோசமாகியது. இந்த நேரத்தில் அவருக்கு எதிராக விஷயங்கள் மோசமானது.

பிப்ரவரி, 2017-ல், பிரயாக்ராஜில் உள்ள சாம் ஹிக்கின்போத்தம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறி அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போதிலும், 2019-ம் ஆண்டு வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அகமது 855 வாக்குகளைப் பெற்றார்.

பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, 60 வயதான அரசியல்வாதி கொலை, கொலை முயற்சி, கிரிமினல் மிரட்டல் மற்றும் தாக்குதல் ஆகிய 70 க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொள்கிறார்.

உமேஷ் பால் கொலை வழக்கு என்றால் என்ன?

உமேஷ் பால் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) கொல்லப்பட்ட பிறகு, ராஜு பால் கொலை வழக்கில் அவர் நேரில் பார்த்த சாட்சி என்று அவரது மனைவி ஜெயா காவல்துறையிடம் கூறினார். இது மட்டுமின்றி, 2006-ம் ஆண்டு அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் தனது கணவரை கடத்திச் சென்று நீதிமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்குமாறு வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உமேஷ் மற்றும் அவரது பாதுகாப்பு காவலர்கள் பிரயாக்ராஜில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பும் போது சுடுக்கொல்லப்பட்டனர். அந்த செய்திகளின்படி, “அகமது மகன்கள் குட்டு முஸ்லீம் மற்றும் குலாம் மற்றும் மற்றவர்கள் பின்னால் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்கள் மீது கச்சா குண்டுகளை வீசினர்” என்று ஜெயா குற்றம் சாட்டினார். உமேஷ் மற்றும் பாதுகாப்பு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பாதுகாப்பு போலீசார் ஆபத்தான நிலையில் உள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Uttar Pradesh Yogi Adityanath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment