தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் 18ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அவர் மே 15, 2022 அன்று வாட்டிக்கனால் புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் சாமானிய இந்தியர் ஆவார். தேவசகாயம் பிள்ளை 'லாசரஸ்' என்ற பெயரைப் பெற்றார். 1745ம் ஆண்டில், 2020ம் ஆண்டு பிப்ரவரியில் முதன்முதலில் புனிதராக அங்கீகரிக்கப்பட்டார். அவர் கிறிஸ்தவத்தைத் தழுவ முடிவு செய்த பிறகு, அதிகரிக்கும் கஷ்டங்களைத் தாங்கியதாக வாட்டிக்கன் கூறியுள்ளது.
தேவசகாயம் கிறிஸ்துவ மதத்திற்கு மாற முடிவு செய்த பின்னர் கடுமையான துன்புறுத்தல் மற்றும் சிறைவாசத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இறுதியில் அவர் 1752-ல் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு அவர் புனிதர் பதவிக்கு தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை விழா தேதியை வாட்டிக்கன் அறிவித்துள்ளது.
தேவசகாயம் பிள்ளையைப் பற்றி தெரிந்தவை
தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் கிராமத்தில் ஏப்ரல் 23, 1712 ல் பிறந்த தேவசகாயம், திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் அரசவையில் பணியாற்றினார். இங்குதான் அவர் ஒரு டச்சு கடற்படைத் தளபதியைச் சந்தித்தார். அவர் கத்தோலிக்க நம்பிக்கையைப் பற்றி அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
1745ம் ஆண்டில், அவர் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே, அவர் ‘லாசரஸ்’ என்ற பெயரைப் பெற்றார். அதாவது ‘கடவுள் என்னுடைய உதவி’ என்று பொருள். ஆனால், அவர் மதமாற்றத்திற்கு எதிராக திருவிதாங்கூர் அரசின் கோபத்தை எதிர்கொண்டார்.
“அவருடய மதமாற்றம் அவருடைய சொண்த ஊரின் மதத்தின் தலைவர்களுடன் ஒத்துப் போகவில்லை. அவர் மீது தேசத்துரோகம் மற்றும் உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் அரசு நிர்வாகத்தில் இருந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார்” என்று பிப்ரவரி 2020ல் வாட்டிக்கன் வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானார்.
“பிரசங்கம் செய்யும் போது, சாதி வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார். இது உயர் வகுப்பினரின் வெறுப்பைத் தூண்டியது. மேலும், அவர் 1749-ல் கைது செய்யப்பட்டார்” என்று வாட்டிக்கன் கூறியது.
ஜனவரி 14, 1752-ல், அவர் கத்தோலிக்கராக ஆன ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தேவசகாயம் ஆரல்வாய்மொழி காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, அவர் தென்னிந்தியாவில் கத்தோலிக்க சமூகத்தால் பரவலாக ஒரு தியாகியாகக் கருதப்பட்டார். அவரது உடல் தற்போது கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் உள்ளது.
அவர் ஏன் புனிதராக அங்கீகரிக்கப்பட்டார்?
2004-ம் ஆண்டில், கன்னியாகுமரியில் உள்ள கோட்டார் மறைமாவட்டமும், தமிழ்நாடு பிஷப்ஸ் கவுன்சிலும் (டி.என்.பி.சி) மற்றும் இந்திய கத்தோலிக்க பிஷ்ப்களின் மாநாடு (சி.சி.பி.ஐ) ஆகியவையும் இணைந்து தேவசகாயத்தை வாட்டிகனுக்கு முக்தியடைந்தவராகப் பரிந்துரைத்தன. அவர் புனிதர் பதவிக்கு தகுதியானவர் என கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாட்டிக்கன் அறிவித்தது.
அவர் பிறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ல் கோட்டார் மறைமாவட்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். அன்றைய தினம் வாட்டிக்கனில் நண்பகல் ‘ஏஞ்சலஸ்’ பிரார்த்தனையின் போது, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தேவசகாயத்தை ‘உண்மையுள்ள சாமானியர்’ என்று நினைவு கூர்ந்தார். “இந்தியாவில் உள்ள திருச்சபையின் மகிழ்ச்சியில் சேருமாறும், புதிய ஆசீர்வதிக்கப்பட்டவர் அந்த பெரிய மற்றும் உன்னதமான நாட்டின் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்றும் அவர் கிறிஸ்தவர்களை வலியுறுத்தினார்.
அவருடைய பெயரைப் பற்றிய சர்ச்சை என்ன?
தேவசகாயம் புனிதராக ஆனதில் சர்ச்சை இல்லாமல் இல்லை. 2017ம் ஆண்டில், இரண்டு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அப்போது வாட்டிக்கனின் புனிதர்களின் காரணங்களுக்கான சபையின் தலைவராக இருந்த கார்டினல் ஏஞ்சலோ அமடோவுக்கு கடிதம் எழுதி, தேவசகாயத்தின் கடைசிப் பெயரான ‘பிள்ளை’ என்பதை ஜாதிப் பட்டம் என்பதால் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், அந்த நேரத்தில் வாட்டிக்கன் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது.
பிப்ரவரி 2020-ல், வாட்டிக்கன் அவரை புனிதர் பதவிக்கு அனுமதித்தபோதுதான், அவருடைய பெயரிலிருந்து ‘பிள்ளை’ என்பதை நீக்கி, அவரை ‘ஆசீர்வதிக்கப்பட்ட தேவசகாயம்’ என்று குறிப்பிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.