Advertisment

பாலியல் சர்ச்சை... இந்தியாவின் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி மீதான புகார் பின்னணி

எரிக் கார்செட்டியின் முக்கிய உதவியாளர் ரிக் ஜேகப்ஸ். காவல்துறை அதிகாரி மற்றும் எரிக் கார்செட்டியின் பாதுகாவலர் மேத்தியூ கர்சா, ரிக் ஜேகப்ஸ் மீது பாலியல் புகாரை முன்வைத்து, 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த புகாரில் ரிக் ஜேகப்ஸ், தன்னிடம் மிகவும் மோசமான முறையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று மேத்தியூ கர்சா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாலியல் சர்ச்சை... இந்தியாவின் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி மீதான புகார் பின்னணி

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இந்த பதவிக்காக இவரது பெயர் இரண்டரை வருடங்களுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர்  இப்போதுதான் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

எரிக் கார்செட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தீவிர விஸ்வாசி. 5 வருடங்களுக்கு முன்புவரை, அமெரிக்க ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கருதப்பட்டவர். கடந்த சில வருடங்களாக இவர் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் பைடன் அமைச்சரவையில் இவர் வகித்த பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

எரிக் கார்செட்டியை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக தேர்வு செய்ய அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்தாலும். அவருக்கு எதிராக வாக்களித்த காரணிகளை விவாதிக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக வாக்களித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த எரிக் கார்செட்டி

52 வயதான இவர்.  சான் பர்னாண்டோ வாலி -யில்(San Fernando Valley) பிறந்துள்ளார். பி.ஏ மற்றும் எம்.ஏ படிப்பை கொலம்பியா பல்கலைக்கழத்தில் முடித்துள்ளார். மேலும்  ஆக்ஸ்வர்டிலும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ்லும் படித்துள்ளார். இவர் அமெரிக்க கடல் படையில் 12 வருடங்கள் பணியாற்றி உள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரின் மனைவி பெயர் ஏமி எலைன் வேக்லாண்ட்.

அமெரிக்காவின் 100 வருட வரலாற்றில் இளம்வயதில் மேயரான முதல் நபர் இவர்தான். 2013-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸின் மேயாராக தேர்வு செய்யப்பட்டவர், 2022 வரை பதவியில் இருந்தார். அமெரிக்க மேயராகும் முதல்  யூதரும் இவர்தான். 2006 முதல் 2012 வரை லாஸ் ஏஞ்சல்ஸின் நகர கவுன்சிலின் தலைவரக இருந்தார்.

இவர் 15 டாலர் குறைந்தபட்ச கூலியாக வழங்கியதற்கு  பாராட்டப்பட்டார். மேலும் கொரோனா காலத்தில் இவரது சில பணிகள் மக்களுக்கு தேவையாக அமைந்தது. ஆனால்  வீடுகளற்ற மக்கள் அதிகமானது தொடர்பாக இவர் விமர்சிக்கப்பட்டார். கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யபட்டபோது, இவர் அமெரிக்க காவல்துறைக்கு ஆதரவாகவும், அவர்களை காப்பாற்றாவும் முயற்சிகள் எடுத்ததால், அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கபட்டார். மேலும் இவர் மீது ஊழல் புகார்களும் இருப்பதாக கூறப்படுகிறது.  

இவரின் உதவியாளர்மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டுகொள்ளாமல் கைவிட்டததுதான் இவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு.

ரிக் ஜேகப்ஸ் மீது முன்வைக்கப்படும் புகார் என்ன?

எரிக் கார்செட்டியின் முக்கிய உதவியாளர் ரிக் ஜேகப்ஸ்.  காவல்துறை அதிகாரி மற்றும் எரிக் கார்செட்டியின் பாதுகாவலர் மேத்தியூ கர்சா, ரிக் ஜேகப்ஸ் மீது பாலியல் புகாரை  முன்வைத்து, 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த புகாரில் ரிக் ஜேகப்ஸ், தன்னிடம் மிகவும் மோசமான முறையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று மேத்தியூ கர்சா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரிக் ஜேகப்ஸ் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். ஆனால் எரிக் கார்செட்டி, இது தொடர்பாக தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறுகிறார். ஆனால் இவர் தகவல் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மேத்தியூ கர்சா தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருக்கான தேர்வுக்கு செனேட் கமிட்டியால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எரிக் கார்செட்டி  தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அமெரிக்க செனட்டர்  சுக் கிரேஸ்லி, இவரின் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் இதற்கான காரணமாக ரிக் ஜேகப்ஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றத்தை சுட்டிகாட்டினார். மேலும்  சுக் கிரேஸ்லியின் அறிக்கையின்படி , ரிக் ஜேகப்ஸ் தொடர்ந்து பணியாளர்களை பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், இனவெறியோடு பேசியதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும் சுக் கிரேஸ்லி குடியரசு கட்சியை சேர்ந்தவர்.

இந்த சூழலில்தான் எரிக் கார்செட்டியின்  தேர்வு சுமார் இரண்டரை ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திவைக்கப்படிருந்தது.

இந்நிலையில் எரிக் கார்செட்டியின்  முன்னால் தகவல் தொடர்பு இயக்குநர் நயோமி செலிகன் கூறுகையில் “ தூதராக பதவியேற்க அவர் தகுதியற்றவர். இந்த உலகத்தில் உள்ள எந்த அரசியல் பதவிகளிலும் அவர் பணியாற்ற தகுதியற்றவர்” என்று சி.என்.என் என்ற ஆங்கில ஊடகத்திற்கு  அவர் பேட்டியளித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment