Advertisment

இலங்கை புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே யார்? முழுப் பின்னணி

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவிருக்கும் கோத்தபய ராஜபக்சே (வயது 70) தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் அழித்தவர் என்று அறியப்பட்டவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sri lanka presidential elections, sri lanka presidential elections 2019, gotabaya rajapaksa, கோத்தபய ராஜபக்சே, இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019, who is gotabaya rajapaksa, sajith premadasa, sri lanka presidential elections results, இலங்கை, மஹிந்த ராஜபக்சே, sri lanka presidential elections results 2019, sri lanka presidential election result, sri lanka presidential election results 2019, sri lanka presidential elections news, sri lanka presidential elections 2019 news

sri lanka presidential elections, sri lanka presidential elections 2019, gotabaya rajapaksa, கோத்தபய ராஜபக்சே, இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019, who is gotabaya rajapaksa, sajith premadasa, sri lanka presidential elections results, இலங்கை, மஹிந்த ராஜபக்சே, sri lanka presidential elections results 2019, sri lanka presidential election result, sri lanka presidential election results 2019, sri lanka presidential elections news, sri lanka presidential elections 2019 news

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவிருக்கும் கோத்தபய ராஜபக்சே (வயது 70) தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் அழித்தவர் என்று அறியப்பட்டவர்.

Advertisment

ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியான கோத்தபய ராஜபக்சே அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். கோத்தப ராஜபக்சே 2007 மற்றும் 2009 ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவப் பிரசாரத்திற்கு தலைமை தாங்கினார். இது புலிகளின் இறுதி தோல்வி மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொலையில் முடிவடைந்தது.

ராஜபக்சே சகோதரர்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்தோம் என்றும் மேலும், அவ்வாறு செய்ததில் வெற்றி பெற்ற உலகின் ஒரே நாடு என்ற பெருமை கூறி வருகின்றனர்.

ராஜபக்சே சகோதரர்களின் நால்வரில் கோத்தபய ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சேவைத் தவிர, பசில் ராஜபக்சே மஹிந்த ராஜபக்சே 2005 ஆம் ஆண்டு முதல் 2015 அவர் பதவியில் இருந்தபோது, ஜனாதிபதியின் ஆலோசகராக பணியாற்றினார். மேலும், 2007 முதல் 2015 வரை நாடளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2010 முதல் 2015 இடையே இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்தார்.

கோத்தபய ராஜபக்சே கடினமான இலக்குகள் கொண்ட வலிமையான நற்பெயர் இவருக்கு உண்டு. எல்.டி.டி.இ உடன் கொடூரமான போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து வந்துள்ளன.

இந்த போர் நாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறப்புக்கு வழிவகுத்தது. தமிழ் கிளர்ச்சியாளர்களின் தோல்வியடைந்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் இலங்கை தேசிய சொற்பொழிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் ஒரு கதையை உருவாக்கியது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை கிளர்ச்சி செய்த பொது பல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பின் பின்னால் உள்ள சக்தியாக கோத்தபய ராஜபகேசே தனிப்பட்ட முறையில் பார்க்கப்படுகிறார். மேலும், 2014 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களில் ஒரு பங்கைக் கொண்டிருந்தார். பொது பல சேனா 2018 இல் கண்டியில் முஸ்லீம்-விரோத வன்முறையைத் தூண்டியது.

கோத்தபய ராஜபக்சே இலங்கை, ஐரோப்பா, அமெரிக்காவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். ஒரு காலத்தில் அமெரிக்க குடிமகனாக இருந்த அவருக்கு அந்த நாட்டில் ஒரு வீடு இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் கோட்டாபயாவுக்கு எதிராக இரண்டு சிவில் நீதிமன்ற வழக்குகள் கொண்டுவரப்பட்டன. அவர் மீது சித்திரவதை மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நாட்டில் ராஜபக்சேக்களின் ஆட்சிக்காலத்தில் எதிர்ப்பாளர்கள் காணாமல் அடிக்கப்பட்டனர், சுதந்திரமான பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் என பல நிகழ்வுகளைக் கண்டது.

கோத்தபய ராஜபக்சேவுக்கு மறைந்துவைக்க முடியாத அளவுக்கு ஒரு ஆவேசம் உள்ளது. அவர் தேசிய பாதுகாப்புடன் ஒரு வழக்கமான ஜனாதிபதியை விட தன்னை ஒரு தேசிய பாதுகாப்பு ஜார் என்று கருதுகிறார்.

இலங்கைத் தேர்தலுக்கு முன்னதாக, பல வர்ணனையாளர்கள் அவருக்கு கிடைத்த வெற்றி பெரும்பான்மையான வாக்காளர்களைக் குறிக்கும் என்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். சிவில் உரிமைகள் குறைக்கப்படுவதற்கும், அரசியல் ஒழுங்கிற்கு திரும்புவதற்கும், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும் இடையில் ஒரு பரிமாற்றத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்தனர்.

ராஜபக்சேக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதால் சீனாவுடனான உறவில் இலங்கை எடுக்கும் பாதையை இந்தியா உன்னிப்பாக கவனிக்கும். மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தபோது சீனாவுக்கு பெரும் சலுகைகள் கிடைத்தன. பெய்ஜிங் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை அளித்தது. அது இலங்கையில் துறைமுகங்களையும் நெடுஞ்சாலைகளைகளையும் உருவாக்க உதவினாலும் நாட்டை கடனில் ஆழமாக மூழ்கடித்தது.

கடன் பொருளாதாரத்தை கீழே இழுத்துச் சென்றது. மேலும், 2017 ஆம் ஆண்டில் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமப்பட்ட இலங்கை அரசாங்கம் ஹம்பன்டோட்டா துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் 99 ஆண்டுகளுக்கு சீனர்களிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் சீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படாத வருகைகளை மேற்கொண்டன.

இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் இருந்தபோது, இலங்கையில் சீன நீர்மூழ்கிக் கப்பல் அடிக்கடி வருவதை எதிர்த்து புது டெல்லி எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்கு கொழும்பு இதில் அசாதாரணமானது எதுவுமில்லை என்று கூறியதுடன், பல நாடுகளின் இராணுவக் கப்பல்கள் பல ஆண்டுகளாக இலங்கைக்கு நல்லெண்ண வருகைகள், எரிபொருள் நிரப்புதல் மற்றும் குழு புத்துணர்ச்சி ஆகியவற்றிற்காக வந்துள்ளன என்றது.

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment