ஆப்பிள் நிறுவனம் திங்களன்று (ஆகஸ்ட் 27) கெவன் பரேக்கை அதன் தலைமை நிதி அதிகாரியாக (CFO) நியமித்தது, நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லூகா மேஸ்ட்ரிக்கு பதிலாக ஜனவரி 1, 2025 அன்று முதல் கெவன் பரேக் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் செயல்படுவார்.
ஆங்கிலத்தில் படிக்க: Who is Indian-origin Kevan Parekh, the new CFO of Apple?
ஒரு அறிக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக், “ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, கெவன் பரேக் ஆப்பிள் நிறுவனத்தின் நிதித் தலைமைக் குழுவில் ஒரு தவிர்க்க முடியாத உறுப்பினராக இருந்து வருகிறார், மேலும் அவர் நிறுவனத்தை பற்றி முழுமையாக புரிந்துகொள்கிறார். அவரது கூர்மையான அறிவுத்திறன், புத்திசாலித்தனமான தீர்ப்பு மற்றும் நிதி புத்திசாலித்தனம் ஆகியவை அவரை ஆப்பிளின் அடுத்த தலைமை நிதி அதிகாரிக்கான சரியான தேர்வாக ஆக்குகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த கெவன் பரேக்?
1972 இல் பிறந்த கெவன் பரேக் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்ற மின் பொறியியலாளர் ஆவார்.
கெவன் பரேக் ஆப்பிளில் சேருவதற்கு முன்பு, தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸில் பல்வேறு மூத்த தலைமைப் பொறுப்புகளை வகித்தார்.
கெவன் பரேக் 11 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் இருக்கிறார், கெவன் பரேக் ஆப்பிள் நிறுவனத்தில் சில வணிகப் பிரிவுகளுக்கான நிதி உதவித் தலைவராக வேலையைத் தொடங்கினார். தற்போது, கெவன் பரேக் நிதி திட்டமிடல், முதலீட்டாளர் உறவுகள் மற்றும் சந்தை ஆராய்ச்சி செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் லூகா மேஸ்ட்ரியின் மற்ற உயர்மட்ட துணைத் தலைவர் சௌரி கேசி பதவி விலகியதும் கெவன் பரேக் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
"கடந்த பல மாதங்களாக லூகா மேஸ்ட்ரி தலைமை நிதி அதிகாரி பொறுப்பிற்காக கெவன் பரேக்கை சீர்படுத்தி வந்தார், மேலும்… ஆப்பிள் தனது அடுத்த நிதித் தலைவராக கெவன் பரேக்கை பெயரிட தயாராகி வந்தது. கெவன் பரேக், ஆப்பிள் நிதி ஆய்வாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகளிலும் அதிகளவில் கலந்துகொண்டார்,” என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியது.
ஆப்பிளின் தலைமை நிதி அதிகாரியாக, கெவன் பரேக், முக்கிய முதலீடு மற்றும் நிதி முடிவுகளை மேற்கொள்வதன் மூலமும், முக்கிய பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலமும், நிறுவனத்தின் நிதி மற்றும் மூலோபாயத்தை நிர்வகிப்பார்.
ஒரு அறிக்கையில், லூகா மேஸ்ட்ரி, "அவர் (கெவன் பரேக்) உண்மையிலேயே விதிவிலக்கானவர், ஆப்பிள் மற்றும் அதன் பணி மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர், மேலும் முக்கியமான தலைமை பொறுப்பு, தீர்ப்பு மற்றும் மதிப்புகளை உள்ளடக்கியவர் என்ற முறையில் கெவன் பரேக் இந்த பொறுப்பிற்கு மிகவும் பொருத்தமானவர்," என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நிறுவனங்களில் மூத்த நிர்வாகிகளாகி வரும் இந்திய வம்சாவளியினர் பட்டியில் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், அந்தப் பட்டியலில் கெவன் பரேக் இணைந்துள்ளார். பட்டியலில் மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா, ஆல்பாபெட் (கூகுள்) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் டெஸ்லா தலைமை நிதி அதிகாரி வைபவ் தனேஜா ஆகியோர் அடங்குவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“