Advertisment

ஜில் பிடன்: அமெரிக்காவின் அடுத்த முதல் பெண்மணி ?

அன்பு, புரிதல், அடிப்படையான தயவு மூலம் நாம் ஒரு தேசத்தை ஒன்றினைக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
ஜில் பிடன்: அமெரிக்காவின் அடுத்த முதல் பெண்மணி ?

2008 ஆம் ஆண்டில், கணவர் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்பதற்கு முன்பு வரை, டாக்டர் ஜில் பிடென் டெலாவேர் மாகாணத்தில் மிகவும் அறியப்படாத ஒருவராகத் தான் இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது.

Advertisment

வெள்ளை மாளிகையின்  அதிகார வட்டத்திற்குள்  நுழைந்த பின்புதான்,  69 வயது நிரம்பிய சமுதாயக் கல்லூரி பேராசிரியரை இந்த உலகம் உற்று கவனிக்க ஆரம்பித்தது.  ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் மனைவியான இவர்,  ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமாக நம்பத்தகுந்த அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

சுமார், 30 ஆண்டுகளுக்கு முன்பு, டெலாவேர் வில்மிங்டனில் உள்ள பொது பள்ளியில் ஆங்கில பேராசிரியராக பாடம் எடுத்த வகுப்பறையில் இருந்துக் கொண்டு, அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் மெய்நிகர் மாநாட்டில் (கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது) ஜோ பிடனுடன் கலந்து கொண்டார்.

உங்களைப் பற்று உங்களிடம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களை ஒரு நிமிடம் நினைவில் கொள்ளுங்கள்....   இதுதான் முதல் பெண்மணி ( ஜில் பிடன்)… ஜில் பிடன் அவ்வாறு தான் இருப்பார், ”என்று ஜோ பிடன் பல்லாயிரக்கணக்கான மக்களிடம்  வாக்காளர்களிடம் ஜில் பிடனை அறிமுகப்படுத்தினார்.

ஜில் பிடனின் ஆரம்பகால வாழ்க்கை

நியூ ஜெர்சியில் பிறந்த இவர், தனது  குழந்தை பருவத்தின் பெரும்பகுதியை பென்சில்வேனியாவின் வில்லோ க்ரோவ் நகரில் கழித்தார். இவருக்கு நான்கு தங்கைகள் உள்ளனர். அவரது தந்தை டொனால்ட்  வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணிபுரிந்தார்.  அவரது தாயார் போனி ஒரு இல்லத்தரசி.

 

 

உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, ஆடை வர்த்தகத்தில் பட்டம் பெற்றார். பின்னர், டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற முடிவு செய்தார். அவரின் முதல் கணவர் பெயர் பில் ஸ்டீவன்சன். கல்லூரி நாட்களின் போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும்,1975 இல் பில் ஸ்டீவன்சனை  ஜில் பிடன் விவாகரத்து செய்தார்.

பிடன்ஸ்:  

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய போது , ஜோ பிடனின் பல நற்பண்புகளை எடுத்துரைத்த அவர்,  அமெரிக்காவை ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்ல ஜோ பிடனை தேர்ந்தேடுப்பது ஏன் இன்றியமையாது என்றும் எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இழக்க நேரிட்ட பல விஷயங்களையும், தூய்மையான அன்பையும் வகுப்பறையில் இருந்தவாறே வெளிபடுத்தினர். இவரின், பேச்சுக்கள் மக்களை வெகுவாக கவர்ந்தது. அந்த நாட்டின் செய்தித் தாளில் தலைப்பு செய்தியாகவும் வலம் வந்தன.

" பிரிந்த குடும்ப உறவுகளை நாம் எவ்வாறு ஒன்றிணைப்போம். அது போலவே, அன்பு, புரிதல், அடிப்படையான தயவு மூலம் நாம் ஒரு தேசத்தை ஒன்றினைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

1972 ஆம் ஆண்டில், டெலாவேர் செனட்டராக இருந்தார்  ஜோ பிடன். அப்போது, ஏற்பட்ட மோசமான கார் விபத்து ஒன்றில் அவரின் மனைவி நீலியாவும், ஒரு வயது மகள் நவோமியும் பரிதாபமாக உயர் இழந்தனர். மோசமான காயங்களுடன் விபத்தில் இருந்து உயிர் தப்பிய பியூ மற்றும் ஹண்டர் ஆகிய இரு மகன்களை பராமரிக்க  ஜோ கிட்டத்தட்ட தனது அரசியல் வாழ்க்கையை  துறக்க எண்ணினார். இருப்பினும், நண்பர்களின் வற்புறுத்தல்கள் காரணமாக  பிடன் அந்த முடிவை கைவிட்டார்.

 

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜில்லை சந்தித்தார். 2007 ஆம் ஆண்டில் 'Promises to Keep: On Life and Politics' எனும் புத்தகத்தில், " அவள் (ஜில்) என் வாழ்க்கையை எனக்குத் திருப்பிக் கொடுத்தாள். என் குடும்ப வாழ்க்கை  முழுமையடையக்கூடும் என்ற நம்பிக்கை கிடைத்தது” என்று ஜோ பிடன் எழுதினர். இவர்கள், 1977 இல்  மறுமணம் செய்து கொண்டனர்.1980 இல் இவர்களுக்கு முதல் குழந்தை பிரந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டில், ஜோவின் மூத்த மகன் பியூ மூளை புற்றுநோயால் மரணமடைந்தார். பியூவின்  மனைவி பெயர் ஹல்லி பிடென். இரண்டு இளம் குழந்தைகளை பியூ  விட்டு சென்ற சம்பவம் ஜோ பிடனுக்கு மீளமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   “ எங்களது வாழ்க்கை ஒரு நொடியில் மாறியது. நாங்கள், எங்கள் நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடவில்லை, ”என்று ஜில் கடந்த ஆண்டு யுஎஸ்ஏ டுடேக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

 

சர்ச்சைகள்

ஜோ பிடன் மீது முன்வைக்கப்படும் மோசமான குற்றச்சாட்டுகளுக்கும், ஜில் தனது கணவரை கண்மூடித்தனமாக ஆதரித்து வருத்கிறார் என்று குற்றச்சாட்டு அமெரிக்கா மக்களிடம்  காணப்படுகிறது.

அனிதா ஹில் எனும் சட்ட பேராசிரியர், 1991 ஆம் ஆண்டு நீதிபதி கிளாரன்ஸ் தாமஸுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போதைய செனட் நீதிபதிகள் உறுதிப்படுத்தும் குழுவின் தலைவராக இருந்த ஜோ பிடன் இந்த வழக்கை கையாண்ட விதம் அமெரிக்கா அரசியலில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

NPR உடனான ஒரு நேர்காணலில் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரவித்த, ​​ஜில் " எதிர்காலத்தை நோக்கி செல்ல  வேண்டிய நேரம் இது" என்று கூறினார்.

ஜோ பிடன் தகாத முறையில் தொட்டார், அசவுகரியத்தை ஏற்படுத்தினார் என்ற பல பெண்களின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளை அவரால் முற்றிலும் நிராகரிக்கமுடியவில்லை.  இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜில், "மற்றவர்களின் மனநிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை தனது கணவர்  கற்றுக்கொண்டதாக"  கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
America Donald Trump President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment