Who is leena Maria Paul Malayalam actress arrest Tamil News : ஷூஜித் சிர்காரின் ‘மெட்ராஸ் கஃபே’ எனும் படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லீனா மரியா பால், பல ஆண்டுகள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் பரபரப்பை உருவாக்கி வருகிறார். கடந்த திங்களன்று இந்த மலையாள நடிகையை 15 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. யார் இந்த லீனா மரியா? இவர் செய்த குற்றம் என்ன?
மோகன்லால் நடித்த ‘ரெட் சில்லீஸ்’ (2009) திரைப்படத்தில் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய பால், அதன் பிறகு ‘ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா’ (2012), ‘கோப்ரா’ (2012) மற்றும் ‘பிரியாணி’ (2013) போன்ற பல படங்களில் தோன்றினார். ஒரு செய்தி அறிக்கையின்படி, அவர் பெங்களூருவில் பல் மருத்துவராகப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பின்னாளில் சினிமா மீதான ஆசை, அவரை திரைத்துறையிலேயே கட்டிப்போட்டது. இருப்பினும், தன்னுடைய வேலையை விட, அவர் தனது பார்ட்னர் சுகேஷ் சந்திரசேகருடன் பல மோசடி வழக்குகளில் ஈடுபட்டபிறகே அதிக கவனத்தை ஈர்த்தார்.
முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து பணம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்திரசேகர், ரூ.200 கோடி கொள்ளை மோசடியில் MCOCA-ன் கீழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரியா பால் கைது செய்யப்பட்டார். பிரபல தேர்தல் கமிஷன் லஞ்ச வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்திரசேகர் தற்போது தேசிய தலைநகரின் ரோகிணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய மற்ற இரண்டு கூட்டாளிகள், வெளியிலிருந்தபடி சந்திரசேகரின் கட்டளைப்படி வேலை செய்தனர்.
அதிமுக தலைவர் டிடிவி தினகரனின் இடைத்தரகராக சந்திரசேகர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர், சசிகலா பிரிவினருக்குக் கட்சியின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தைப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
மோசடிகள் மற்றும் பல கைதுகள்
சென்னை வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்ததாக சந்திரசேகருடன் சேர்ந்து 2013-ல் பால் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், கைது செய்வதிலிருந்து சந்திரசேகர் தப்பித்தாலும் ஒரு வாரம் கழித்து, அவரும் பிடிபட்டார். மரியா பால் கைது செய்யப்பட்ட போது, ஒன்பது விலையுயர்ந்த கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை போலீசார் மீட்டனர்.
முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனாகக் கூறிக்கொண்டு தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா முழுவதும் 15 கோடி ரூபாய்க்கு மேல் சந்திரசேகர் மோசடி செய்ததாகவும், அவர்களுக்கு அரசு ஒப்பந்தம் அளிப்பதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியது.
இருப்பினும், இருவரும் ஜாமீன் பெற்று மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். 2015-ம் ஆண்டில், ரூ .10 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி கோரேகானில் இருந்து மேலும் இரண்டு கூட்டாளிகளுடன் இந்த தம்பதியினர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
"ஒவ்வொரு மாதமும் தங்கள் முதலீடுகளில் குறைந்தபட்சம் 20 சதவிகித வருவாயைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து தனிநபர்களின் குழு, 5000 முதல் 5 லட்சம் வரை பணம் செலுத்தும்படி மக்களை சமாதானப்படுத்துவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் அதிகபட்சமாக 300 சதவிகித வருமானத்தைக் கூட உறுதியளித்துள்ளனர். சில நாட்களுக்குள் அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நாங்கள் அவர்களைக் கைது செய்துள்ளோம்” என்று அப்போதைய இணை போலீஸ் கமிஷனர் (EOW) கூறினார்.
டிசம்பர் 2018-ல், மரியா பால் மீண்டும் கொச்சியில் உள்ள தனது அழகு நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாகத் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார். பிரபல டான் ரவி சூலியா பூஜாரி, 2019-ல் கைது செய்யப்பட்டார். இவரும் இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
தான் எந்தவொரு வழக்கிலும் ஈடுபடவில்லை என்று மரியா பால் கூறுகிறார். கடந்த திங்களன்று, மரியா தரப்பு வழக்கறிஞர், “முக்கிய குற்றவாளி இத்தனை ஆண்டுகளாக திகார் சிறையில் இருந்தார். இந்த வழக்கில் இரண்டு எஃப்ஐஆர்கள் உள்ளன மற்றும் இரண்டு வழக்குகளிலும் எங்களுடைய பங்கு இல்லை. லீனா அனுபவித்து வந்த அனைத்து சொத்துகளும், சீல் வைக்கப்பட்டுள்ளன. அறிவிப்பு இல்லாமல் என்னை டெல்லிக்கு வந்து விசாரணையில் சேரும்படி கேட்கப்பட்டுள்ளது. நான் அதைப்பற்றி கேள்வி கேட்கவில்லையே" என்று வாதிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.