Advertisment

சவூதியில் 6 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண்ணியவாதி: யார் இவர்?

சிறை காவலில் இருக்கும் போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டார் என்று அம்னாஸ்ட்டி இண்டெர்நேசனல் கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Who is Loujain al-Hathloul, the Saudi activist sentenced to nearly six years in prison?

Who is Loujain al-Hathloul, the Saudi activist sentenced to nearly six years in prison :  சவுதியின் சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் திங்கள் கிழமை அன்று அந்நாட்டின் மிக முக்கியமான பெண்கள் நலனில் அக்கறை செலுத்தும் செயற்பாட்டாளரான லௌஜைன் அல் ஹத்லௌலுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தேசிய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காகவும், நாட்டின் அரசியல் அமைப்பை மாற்ற முயற்சித்ததற்காகவும் சவுதி அரேபிய அதிகாரிகள் அரசின் பரந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர் என்று ரெய்ச்சர்ஸின் செய்தி குறிப்பிட்டுள்ளது.

Advertisment

தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு அவருடைய சகோதரி லீனா ட்விட்டர் பக்கத்தில், இந்த தண்டனை குறித்து கேட்ட பிறகு என்னுடைய சகோதரி அழுதார். ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தடுப்புக்காவல், சித்திரவாதை, தனிமை சிறைவாசம் என்று அனுபவித்த பிறகு தற்போது அவருக்கு தண்டனை அறிவித்துள்ளனர். மேலும் தீவிரவாதி என்று முத்திரைக் குத்தியும் உள்ளனர். ஆனால் லௌஜைன் இந்த தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்வார் என்றும், சித்திரவாதை தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கூறுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்படியிருந்தும், அல்-ஹத்லூலின் சிறைத் தண்டனை மார்ச் 2021 இல் முடிவடையும். ஆனாலும் நீதிமன்றம் அவருக்கு 34 மாத சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. சிறை தண்டனை தீர்ப்பை 2018 மே முதல் கணக்கிட்டுள்ளது.

2003ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு குற்றச்சாட்டுகள் ஏதும் இன்றி கைது செய்யப்பட்ட 1000 கணக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் சவுதியின் சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் என்று அமெரிக்கன் பார் அசோசியேசன் கூறுகிறது. பிறகு தீவிரவாதிகளில் துவங்கி, மத சிறுபான்மையினர், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அதிருப்தியாளர்கள் மீதான வழக்குகளிலும் பார்வையை செலுத்தியது.

யார் இந்த அல் ஹத்லௌல்?

சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட மறுக்கப்பட்ட உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கு நடைபெற்ற இயக்கத்திலும், பெண்களுக்கு ஆண் நபர்களின் பாதுகாப்பு முறையான விலாயாவையும் நீக்குவதற்கான இயக்கத்திலும் மிக முக்கியமானவராக இவர் இருந்தார். சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட கடந்த ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டார்கள். ஆண் பாதுகாப்பு இல்லாமல் ஒரு பெண்ணால் வெளிநாடு செல்லவும், அவர்களின் அனுமதி இன்று திருமணம், விவாகரத்து மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் கடந்த ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டனர்.

2014ம் ஆண்டு அமீரகத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் கொண்ட அல் ஹத்லௌல் சவுதியில் கார் ஓட்ட முயற்சி செய்து 73 நாட்கள் சிறை காவலில் வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, கார் ஓட்ட உரிமம் வழங்கப்பட்ட சில வாரங்களுக்கு முன்பு, சில பெண்கள் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர்களுடன் சேர்த்து அவர் கைது செய்யப்பட்டார்.

2015ம் ஆண்டு, சவுதி அரேபியாவில் தேர்தலின் போதும் குரல் கொடுத்தார். அப்போது தான் முதன்முறையாக சவுதியில் பெண்கள் வாக்களிக்கவும், தேர்தலில்களில் போட்டியிடவும் உரிமை அளிக்கப்பட்டது. அப்போதும் கூட அவருடைய பெயர் தபால் வாக்குகளில் சேர்க்கப்படவில்லை என்று அம்னாஸ்டி இண்டெர்நேசனல் கூறியுள்ளது.

அல்-ஹத்லௌல் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 2018ம் ஆண்உ தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். பொது ஒழுங்கு, மத விழுமியங்கள், பொது ஒழுக்கங்கள் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றிற்கு இடையூறாகக் கருதப்படும் பொருள்களின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத்திற்கு அபராதம் விதிக்கும் சைபர் கிரைம் எதிர்ப்பு சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது என்று ஐ.நா. மனித உரிமைகள் தரப்பு கூறியுள்ளது.

அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 10 மாதங்களுக்கு பிறகும் அவர் மீதும் குற்றம் ஏதும் சுமத்தப்படவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் மற்றும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டார் என்று அம்னாஸ்ட்டி இண்டெர்நேசனல் கூறியுள்ளது.

சவுதி அரேபியாவில் கருத்து சுதந்திரம் எந்த அளவில் உள்ளது?

2018 ஆம் ஆண்டில் பெண் ஓட்டுநர்கள் மீதான தடை நீக்கப்பட்டதோடு, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பெண்கள் தங்கள் ஆண் பாதுகாவலர்களிடமிருந்து அனுமதி தேவையில்லை, பெண்கள் உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட பல சம்பவங்கள் அடிப்படையில் சவூதி அரேபியா இன்னும் திறந்த சமுதாயத்தை நோக்கி முன்னேறி வருவதாகத் தோன்றுகிறது.

மேலும், கருத்துச் சுதந்திரம், சங்கம் மற்றும் சட்டசபை சுதந்திரத்தை அடக்குவதற்காக அரசு விமர்சிக்கப்பட்டுள்ளது, மேலும் சவூதி அரேபியா கருத்து வேறுபாட்டைப் பற்றி மங்கலான பார்வையை எடுத்துக்கொள்கிறது மற்றும் சமீபத்திய காலங்களில் பல அரசியல் ஆர்வலர்களை குறிவைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

2018 அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்ட முக்கியமான பத்திரிக்கையாளர் கஷோகி 2017ம் ஆண்டு சவுதியை விட்டு வெளியேறி வாசிங்டன்னில் வசித்து வந்தார். தன்னுடைய அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் அவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் யோசித்திருந்தார். 2018ம் ஆண்டு, அவர் கொலை செய்யப்படுவதற்கு சில காலங்களுக்கு முன்பு தி எக்கனாமிஸ்ட் என்ற பத்திரிக்கை அவர் அளித்த பேட்டியில் நான் எழுத தடை விதிக்கப்பட்டிருந்தது. நான் ட்வீட் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. என்னுடைய கருத்து சுதந்திரத்தை இழக்கும் நிலை ஏற்படலாம் என்பதால் நான் சவுதிக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கஷோகியை இளவரசர் முகமது பின் சல்மானே கொலை செய்ய உத்தரவிட்டார் என்று சி.ஐ.ஏ. அறிவித்திருந்தது.

கஷோகியின் கொலை வழக்கு மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாகுன், அதே போன்ற மற்ற நிகழ்வுகளும் உள்ளன. சவுதியின் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுத்த அறிஞர்களில் ஒருவரான அல் அவ்தாஹ் 2017ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அன்று ” "கடவுள் தங்கள் மக்களின் நலனுக்காக அவர்களின் இதயங்களுக்கு இடையே ஒத்திசைவை தரட்டும்” என்று ட்வீட் வெளியிட்டார். ஆனால் அது கத்தாருடன் இணைவதை சுட்டுவதாகவே இருந்தது என்று கருதப்பட்டது. அவர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மரண தண்டனையை எதிர் கொண்டுள்ளார்.

பிரிட்டனின் ரிப்ரைவின் படி சவுதி இளவரசரின் 5 ஆண்டுகள் ஆட்சியில் 800 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 184 பேர் மரண தண்டனையை பெற்றுள்ளனர் என்று ஆம்னாஸ்டி இண்டெர்நேசனல் கூறியுள்ளது.

2014ம் ஆண்டு இணையத்தில் எழுதி வந்த ரைஃப் பதாவிக்கு, இஸ்லாத்தை அவமதித்ததற்காகவும், தாராளாமயமான ஊடக மையத்தை அமைத்ததற்காகவும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் கசை அடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது. அவர் 2012 அன்று கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு 50 கசை அடிகள் ஜனவரி 9, 2015ல் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சவூதி அரேபியாவின் மாநில மனித உரிமைகள் ஆணையம், குற்றத்திற்கான தண்டனையாக ”அடிப்பதை” தடை செய்வதாக கூறியது. இது ஒழிக்கப்படுவதற்கு முன்பு, கொலை, அமைதியை சீர்குலைத்தல், ஓரினச்சேர்க்கை, மது அருந்துதல் அல்லது வைத்திருத்தல், விபச்சாரம், சிறுமிகளை துன்புறுத்துதல், எதிர் பாலினத்தவர்களுடன் நேரத்தை செலவிடுதல், இஸ்லாத்தை அவமதித்தல் மற்றும் மதுபானங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு தண்டனையாக அடிப்பது கட்டாயமாகும்.

2018 ஆம் ஆண்டில் பெண் ஓட்டுநர்கள் மீதான தடை நீக்கப்படுவதற்கு முன்பு, வாகனம் ஓட்டும் எந்தவொரு பெண்ணுக்கும் கசை அடிகள் தண்டனை விதிக்கப்படலாம். இந்த வகையான உடல் ரீதியான தண்டனையை நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி ஒரு மாற்றாக அல்லது பிற தண்டனைகளுக்கு கூடுதலாக வழங்கி வந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Saudi Arabia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment