எலான் மஸ்க் ட்விட்டரில் உயர்மட்ட அதிகாரிகளில் மாற்றங்களைச் செய்யும்போது, அவர் தன்னைச் சுற்றி ஆலோசகர்கள் குழுவைக் கூட்டிக்கொண்டார். இதில் துணிகரமான முதலீட்டாளர் டேவிட் சாக்ஸ் மற்றும் பல நெருங்கிய வணிக கூட்டாளிகள், ஸ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்திய அமெரிக்கர் ஆகியோரும் அடங்குவர்.
முன்பு ட்விட்டரில் பணிபுரிந்த கிருஷ்ணன், A16z என்றும அழைக்கப்படும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹோரோவிட்ஸ்-ஸில் (Andreesen Horowitz) பங்குதாரராக உள்ளார். இது சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்குவதில் முதலீடு செய்துள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் வெள்யியிட்டுள்ள செய்திப்படி, ஸ்ரீராம் கிருஷ்ணனும் மற்றவர்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) ட்விட்டரின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் கோட்டையை பிடித்தனர். அதே நேரத்தில் எலான் மஸ்க் நியூயார்க்கிற்கு பறந்து சென்றார். அக்டோபர் 31 ஆம் தேதி, ஸ்ரீராம் கிருஷ்ணன் அலுவலகத்தின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். மேலும் அவர் தற்காலிகமாக எலான் மஸ்க்குக்கு உதவுவதாகக் கூறினார்.
சென்னை பூர்வீகம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட இந்த தம்பதியினரின் விவரங்களின்படி, ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி இருவரும் சென்னையில் பிறந்தவர்கள். அங்கே அவர்கள் வழக்கமான நடுத்தர வர்க்க இந்திய குடும்பத்தின் வளர்ப்பில் வளர்ந்தவர்கள்.
2003-ம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்கும் போது, கல்லூரியில் இருவரும் சந்தித்ததாக ஆர்த்தி ராமமூர்த்தி கூறியதாக அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. அவர்கள் கிட்டத்தட்ட ஒரு Yahoo கோடிங் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட சாட் ரூமில் சந்தித்தனர். 37 வயதான இந்த தம்பதியினர், சான் பிரான்சிஸ்கோவின் நொயே பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர்கள் 2010 இல் அங்கே சென்றனர். அடுத்த ஆண்டு சியாட்டிலில் இருந்து பாலோ ஆல்டோவுக்குச் சென்றனர் என்று தி நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை கூறுகிறது.
மென்பொருள் ரசிகர்கள்
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த தம்பதியின் சுயவிவரங்களின் படி, ஸ்ரீராம் கிருஷ்ணன் ட்விட்டர் மட்டுமில்லாமல் யாஹூ, ஃபேஸ்புக், மற்றும் ஸ்னாப் ஆகியவற்றில் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். 2020 இல் வெளியிடப்பட்ட சமூக ஆடியோ பயன்பாடான கிளப்ஹவுஸில் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் நிறுவனத்தில் 2021-இல் அவர் சேர்ந்தார். அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பேஸ்புக்கில் பணிபுரிந்துள்ளார். மேலும், ட்ரூ அண்ட் கோ மற்றும் லுமோய்ட் என்ற ஸ்டார்ட்-அப்களை அறிமுகப்படுத்தினார்.
“நாங்கள் எப்போதும் மென்பொருள் ரசிகர்களாக இருந்திருக்கிறோம். வேறு என்ன சொல்ல முடியும்? நாங்கள் தொழில்நுட்பத்தை விரும்புகிறோம்” என்று ஸ்ரீராம் கிருஷ்ணன் நியூயார்க் டைம்ஸ் இடம் கூறினார்.
எலான் மஸ்க் உடன் தொடர்பு
பிப்ரவரி 2021 இல், க்ளப்ஹவுஸில் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் ஆர்த்தி ராமமூர்த்தியின் செல்வாக்குமிக்க நிகழ்ச்சியான 'தி குட் டைம்ஸ் ஷோ'வில் எலான் மஸ்க் தோன்றினார். கலிபோர்னியாவில் உள்ள ஹாவ்தோர்னில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்திற்குச் சென்றிருந்தபோது அவர்கள் முன்னதாக அவரைச் சந்தித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி கட்டுரை கூறியது. எலான் மஸ்க்கை மட்டுமல்ல, இந்த ஜோடி மார்க் ஜக்கர்பெர்க் மற்றும் மறைந்த ஆடை வடிவமைப்பாளர் விர்ஜில் அப்லோ ஆகியோரையும் தங்கள் நிகழ்ச்சிக்கு வரவேற்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”