யார் முகக்கவசம் அணிய வேண்டும், உலக சுகாதார அமைப்பின் புது வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

70 சதவீத மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவச உறை அணிந்தால், உடனடியாக நோய்த் தொற்று பாதிப்பை நிறுத்திவிட முடியும்

By: Updated: June 7, 2020, 04:27:29 PM

உலகளவில் கொரோனா பாதிப்பு 6.7 மில்லியனைத் தாண்டிய நிலையில் கோவிட்-19 பரவலைக் கட்டுபடுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தனது முகக்கவசம் பயன்பாடு வழிகாட்டுதல்களை மாற்றியமைத்தது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,” கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்தது. மேலும்,சர்வதேச வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டது. அதன், அடிப்படையில்  உலக சுகாதார அமைப்பு தனது வழிகாட்டலை புதிப்பித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய வழிகாட்டுதல்கள் என்ன சொல்கிறது?

முகக்கவசம் குறித்த தற்போதைய புதிய வழிகாட்டுதல்கள் உலக சுகாதார அமைப்பின் முந்தோய கூற்றிலிருந்து விலகிச் செல்கின்றன . ஆரோக்கியமான நபர்கள் முகக்கவசங்களை  கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், நோய்வாய்ப்பட்டவர்கள் (அ ) சுகாதார ஊழியர்கள் மட்டுமே மருத்துவ முகக்கவசங்களை பயன்படுத்த ஊக்குவிப்பதாக முந்தைய வழிகாட்டுதல்கள் தெரிவித்தன.

இப்போது, ​​திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் எல்லோரும் துணியால் நெய்யப்பட்ட முகக்கவசங்களை (மருத்துவமற்றவை) பொது இடங்களில் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இந்த வகையான முகக்கவசங்கள்  வெவ்வேறு பொருட்களின் குறைந்தது மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். மறுபுறம், கோவிட் -19 நோய் தொற்று  அறிகுறிகளைக் காட்டும் எவரும், தங்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொண்டு மருத்துவ முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் கட்டாயம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சமூகப் பரவல் இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை கட்டாயம் அணியபொது மக்களை ஊக்குவிக்குமாறு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமூக விலகல் நெறிமுறையைக் கடைபிடிப்பதற்கு கடினமான இடங்களில் (பொதுப் போக்குவரத்து, கடைகள்) முகக்கவசங்களை ஊக்குவிக்குமாரும் கேட்டுக் கொண்டது.

மேலும், கொரோனா பெருந்தொற்றால் அதிகமான பாதிப்படைந்த பகுதிகளில் அமைந்துள்ள சுகாதார மையங்களில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும்  மருத்துவ முகக்கவசங்களை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பின் புது வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகின்றன.

பொது மக்களை முகக் கவசம் அணிய ஊக்குவிப்பதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா?

நோய்த் தொற்று காணப்படாத பொது மக்கள் முகக் கவசங்களை பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. முகக்கவசங்களை தவறுதலாக கையாளும் போது சுய-மாசுபடுவதற்கான ஆபத்து, ஈரமான (அ) அழுக்கான  முகக்கவசங்கள பயன்படுத்துவதினால் ஏற்படும் ஆபது , தலைவலி (அ) சுவாசப் பிரச்சனை, தவறான பாதுகாப்பு உணர்வு, பிற தடுப்பு நடவைக்கைகளில் (சமூக விலகல், கை கழுவுதல்) ஏற்படும் கவனக்குறைவு உள்ளிட்ட ஆபத்துகளை அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இந்திய அரசின் வழிகாட்டுதல்கள்:  நோய்த் தாக்குதலுக்கு ஆளான நபரிடம் இருந்து நீர்த்திவலைகளாக வெளிப்பட்டு இன்னும் காற்றில் மிதந்து கொண்டிருந்தால், அந்த வைரஸ்கள், மனிதனின் சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை இந்த முகக்கவச உறைகள் குறைக்கும் என்று கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், புறஊதா வெளிச்சம், நீர், சோப்பு மற்றும் ஆல்கஹால் கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்ட, பாதுகாப்பு முகக்கவச உறை அணிவதன் மூலம் சுவாசத்தின் மூலம் வைரஸ் உள்ளே போகும் வாய்ப்பைக் குறைப்பது, இந்த நோய்த் தொற்று பரவுதலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று  முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்ட வீடுகளிலேயே முகக்கவச உறை தயாரிப்பதற்கான  கையேட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரங்கள் கூறுவது என்ன?  முகக்கவசத்தின் பயன்பாடு கொரோனா பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட  காலத்தில் விவாதத்திற்குரியதாக இருந்தாலும், தற்போதைய அறிவியல்  கண்ணோட்டம் முகக் கவசங்களை பய்னபாட்டை நன்கு விளக்குகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட எளிமையான முகக்கவசங்கள் கூட கொரோனா தொற்றுக்கு எதிரான ஒரு பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கிறது.  உதாரணமாக, அரிசோனா, ஹார்வர்ட் சிட்னி பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், நியூ யார்க் நகரின் 70 சதவீத மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவச உறை அணிந்தால், உடனடியாக நோய்த் தொற்று பாதிப்பை நிறுத்திவிட முடியும் என்றும் அதில் தெரிய வந்தது.

சமூக அளவிலான பரவலைத் தடுக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவச உறைகளைத் பயன்படுத்துவது  போதுமானது என்று மற்றொரு ஆய்வு சுட்டிக்காட்டியது.  இருப்பினும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஜெர்மி ஹோவர்ட், முகக்கவசம் அணிந்த மக்கள் உடல் ரீதியான சமூக விலகல் விதிகளை புறக்கணிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு தனது புதிய வழிகாட்டுதல்களில், , “ நோய் தொற்று இல்லாத மக்களுக்கும் (பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்) அல்லது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட மக்களுக்கும் ( பிறருக்கு நோய்த் தொற்றை பரவாமல் இருக்க ) முகக் கவசம் பயனுள்ளதாக இருக்கும் ” என்று தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Who new guidelines about face mask covid 19 india facemask guidelines

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X