முஹம்மது அல் மஸ்ரி யார்? அல்கொய்தாவின் அடுத்த தலைவர்

தி நியூயார்க் டைம்ஸ் அல்கொய்தா அமைப்பின் 2ம் நிலை தலைவர் அபு முஹம்மது அல் மஸ்ரி, தெஹ்ரானில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. ஆனால், ஈரான் இதனை மறுத்துள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் அல்கொய்தா அமைப்பின் 2ம் நிலை தலைவர் அபு முஹம்மது அல் மஸ்ரி, தெஹ்ரானில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. ஆனால், ஈரான் இதனை மறுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Explained Global, அமெரிக்கா, அல்கொய்தா, Express Explained, tamil indian express, usa

தி நியூயார்க் டைம்ஸ் அல்கொய்தா அமைப்பின் 2ம் நிலை தலைவர் அபு முஹம்மது அல் மஸ்ரி, தெஹ்ரானில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. ஆனால், ஈரான் இதனை மறுத்துள்ளது.

Advertisment

அபு முஹம்மது அல் மஸ்ரி யார்?

அபு முஹம்மது அல் மஸ்ரி, அப்துல்லா அகமது அப்துல்லா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். இவர் அல்கொய்தாவின் எகிப்திய நிறுவன உறுப்பினராக இருந்தார். இவர் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவின் தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரிக்கு அடுத்தபடியான தலைவர் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் அவர் தெஹ்ரானில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானில் அல்-கொய்தாவின் எந்தவொரு உறுப்பினரும் கொல்லப்படவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. மேலும், அந்த செய்தியை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளால் ஹாலிவுட் ஸ்டைல் காட்சிகளை உருவாக்குதல் என்று கூறி நிராகரித்தது.

நியூயார்க் டைம்ஸ், பெயர் குறிப்பிடாமல் சில உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக மேற்கோள்காட்டி, அவர் தெஹ்ரானில் ஈரானிய இராணுவத்தின் ஒரு உயரடுக்கு பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படைப் படையினரின் பாதுகாப்புக் காவலில் வசித்து வருவதாகக் கூறியது. ஏமனில் அல்-கொய்தாவால் கடத்தப்பட்ட ஈரானிய தூதருக்கு ஈடாக, 2015இல் ஈரானால் வெளியிடப்பட்ட ஐந்து அல்-கொய்தா செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவராக இருந்தார். ஈரானியர்களின் பிடியில் இருந்தபோதும், அவர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் பாகிஸ்தானுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.

Advertisment
Advertisements

எஃப்.பி.ஐ முகவர் அபு சௌஃபான் எழுதிய அதிகாரப்பூர்வ சுயவிவரத்தில், வெஸ்ட் பாயிண்டில் உள்ள போர் பயங்கரவாத மையத்தால் வெளியிடப்பட்ட சி.டி.சி சென்டினல் என்ற பத்திரிகையின் நவம்பர் 2019 இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ அகாடமி, அபு முஹம்மதுவின் ஜிகாதி பயணத்தை ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற காலத்திலிருந்தே, ஒசாமா பின்லேடனின் சோவியத்துகளுக்கு எதிரான “அரபு ஆப்கானியர்களில்” ஒருவராக, பதின்ம வயதினரின் பிற்பகுதியில் அல்லது 20களின் முற்பகுதியில் கண்டறிந்தது.

1988-89ல் சோவியத் படைகளை திரும்பப் பெற்ற பிறகு, அந்த ஜிஹாத்தில் போராடிய எகிப்து குடிமக்கள் நாடு திரும்புவதை எகிப்து தடுத்தது. அபு முஹம்மது அவரைப் போன்ற பலருடன் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தார். அவர் அல்-கொய்தாவின் 170 உறுப்பினர்களின் பட்டியலில் ஒருவராக இருந்தார். ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா வசதிகளைப் பெற்று காணப்பட்ட பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தார். அவர் 1990களில் பின்லேடனுடன் சூடானுக்குச் சென்றார். சோமாலிய உள்நாட்டுப் போரில் பங்கேற்றார்.

அவர் பின்லேடனின் நெருங்கிய வட்டத்தில் இருந்தார். அமெரிக்காவிற்கு எதிரான முதல் பெரிய அல்கொய்தா தாக்குதல்களின் மூளையாகவும் இருந்தார். கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998ல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு பின்லேடனுக்கு விசுவாசத்தை நிரூபித்தார். ஒரே நேரத்தில் நடந்த தாக்குதல்களில் நைரோபியில் 213 பேரும், டார் எஸ் சலாமில் 11 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களின் 22 வது ஆண்டு நினைவு தினமான இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி அபு முஹம்மது கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

“2000 ஆம் ஆண்டின் இறுதியில், அவர் அல்-கொய்தாவின் ஷூரா கவுன்சிலின் 9 உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த அமைப்பின் நிர்வாக குழுவில் (10 வது உறுப்பினர் பின் லேடன்) இருந்தார். இந்த கவுன்சிலின் இராணுவக் குழுவில் அவர் முக்கியத்துவம் வாய்ந்தவர். அதாவது அக்டோபர் 2000-ல் யு.எஸ்.எஸ். படைகளை அழிக்க ஆப்கானிய தலைநகரான காபூலில் உள்ள அனைத்து அல்-கொய்தா படைகளுக்கும் அவர் கட்டளையிட்டார். வடக்கு கூட்டணிக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட துனிசியரான அபு அட்டா அல் துனிசி என்பவருக்கு பதிலாக அமைப்பின் முக்கிய பயிற்சி முகாம்களின் பொறுப்பில் அவர் வைக்கப்பட்டார்.

பின் லேடனுக்கு ஓட்டுநராக இருந்த சாலிம் ஹம்தான் இந்த எழுத்தாளர் விசாரித்தபோது கூறுகையில் “அவர் முகாம்களின் தலைவராக இருந்து அபு முஹம்மது குறிப்பாக செயல்பாட்டாளர்களை அடையாளம் காண்பதிலும், வெடிபொருட்கள் மற்றும் நகர்ப்புற போர் போன்ற நுட்பங்களில் சிறப்பு பயிற்சிக்கு பரிந்துரைப்பதிலும் திறமையானவர் என்பதை நிரூபித்தார்” என்று அபு சௌஃபான் எழுதினார். மேலும் அவர், “விமானங்கள் இயக்கங்களுக்கு எதிராக அபு முஹம்மது ஆலோசனை வழங்கியதையும் குறிப்பிட்டார். அல்லது அமெரிக்காவில் 9/11 தாக்குதல்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: