ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது செயலுக்கு, “நிபந்தனையற்ற மன்னிப்பு” கோர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
யூ-டியூப் வீடியோவில் ஜக்கி வாசுதேவ், சத்ரபதியின் குரு சமர்த் ராம்தாஸ், சிவாஜிக்கு காவி துணி வழங்கினார் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் இதுபோன்ற சர்ச்சைகள் எழுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் வலதுசாரிகள், சிவாஜியின் ஆட்சியில் சமர்த் மகாராஜ் முக்கிய பங்காற்றினார் என்றும் மாமன்னர் சிவாஜியின் அரசியல் குரு இவர்தான் என்றும் கூறிவருகின்றனர்.
இருப்பினும் இந்தக் கூற்றுகளை மராட்டிய குழுக்கள் மறுத்து வருகின்றன. அவர்கள், சிவாஜிக்கு பிராமண குரு இல்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு, மகாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும் இதே கோரிக்கையை முன்வைத்து சிக்கலில் சிக்கினார்.
ஜக்கி வாசுதேவ் வீடியோவில் கூறியது என்ன?
11.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட தனது யூடியூப் சேனலில் ஜத்குரு, மராத்திய அரசர் சிவாஜி, சமர்த் ராமதாஸ் தொடர்பு குறித்து பேசுகிறார்.
மேலும் அந்த வீடியோவில், ““அவருக்கு ஒரு குரு இருந்தார், அதன் பெயர் ராமதாஸ். ஒரு நாள், சிவாஜி தனது அரண்மனையின் பால்கனியில் நின்று கொண்டிருந்தார். தன் குரு வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பதைப் பார்த்தார்.
அப்போது அவர் நினைத்தார், என் குரு தெருக்களில் என்ன பிச்சை எடுக்கிறார். நான் ஒரு ராஜா, என் குரு தெருக்களில் பிச்சை எடுப்பதை பார்த்து வருந்தினார்.
தனது ராஜ்ஜியம் முழுமையையும் அவருக்கு வழங்க முன்வந்தார். தொடர்ந்து, இந்த ராஜ்ஜியத்தை இழந்து விட்டு நீ என்ன செய்ய போகிறாய் என குரு கேட்டுள்ளார்.
அதற்கு சிவாஜி, தங்களுக்கு சேவை செய்யப் போவதாக கூறி அவருடன் இணைந்து யாசகம் பெற்றார் என ஜக்கி கூறுகிறார்.
தொடர்ந்து சமர்த் ராமதாஸ் சிவாஜியிடம் ஓர் காவித் துணியை கொடுத்தார். அந்தத் துணியை பயன்படுத்தக் கூறினார். இந்த ராஜ்ஜியம் உங்களுக்கு சொந்தமானது அல்ல என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
இது மக்களுக்கான அரசு. மக்களுக்கு முடிந்ததை செய்யுங்கள்” எனக் கூறினார். சிவாஜி தொடர்ந்து அந்த துணியைப் பயன்படுத்தினார் என ஜக்கி இறுதியாக கூறுகிறார்.
தேசியவாத காங்கிரஸ் எரிச்சல் கொள்வது ஏன்?
ஜக்கி வாசுதேவின் இந்தக் கதை தேசியவாத காங்கிரஸ் கட்சியை எரிச்சலடைய செய்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ. மான ஜிதேந்திரா அவாத், “இது சத்ரபதி சிவாஜியை இழிவுப்படுத்துவது போல் உள்ளது.
இது சிவாஜி மகாராஜுக்கு மட்டும் அல்ல மகாராஷ்டிராவுக்கே அவமானம். சத்குரு விரைவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், சிவாஜிக்கு ஒரு பிராமண குரு இருந்ததாக மராட்டிய அமைப்புகள் வரலாற்று ரீதியாக மறுப்பு தெரிவித்துள்ளன.
முன்னதாக, ஆளுநர் கோஷ்யாரியும் இதே கூற்றை முன்வைத்தபோது, சத்ரபதி சிவாஜியின் நேரடி வழித்தோன்றலான பாஜக எம்பி உதயனராஜே போசலே இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
மராட்டிய மன்னரின் தாய் சத்ரபதி சிவாஜி மகாராஜின் குரு” என்றும் ராமதாஸ் அல்ல என்றும் கூறினார்.
இதைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
சமர்த் ராம்தாஸை சத்ரபதி சிவாஜியின் குரு என்று அழைப்பது பிராமண மேலாதிக்கத்தைப் பேணுவதுடன் தொடர்புடையது என்றும், உண்மையைச் சரிபார்க்க எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்றும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து வரலாற்றாசிரியர் ஸ்ரீமந்த் கோகடே, “சிவாஜி மகாராஜின் பணிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிராமண அமைப்பு ராமதாஸை சிவாஜி மகாராஜின் குருவாக நியமித்தது. ஆனால் சமகால முக்கியமான வரலாற்று நூல்கள் அவரைக் குறிப்பிடவில்லை.
சிவாஜி ராஜ் போன்ற பெரிய மனிதர் நம் ஜாதியில் இல்லை என்ற குறை பிராமண அமைப்புக்கு உண்டு. எனவே, மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக, அவர்கள் சிவாஜின் பெருமையைப் பெற ராமதாஸைக் கொண்டு வந்துள்ளனர்” என்றார்.
சிவாஜி மகாராஜும் சமரத் ராம்தாஸும் சமகாலத்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் சந்தித்ததாகக் காட்டும் எந்தப் பதிவுகளும் நூல்களும் இல்லை என்று கோகடே மேலும் கூறினார்.
எனவே, பிரச்சினை மற்றவர்களை விட பிராமணர்களின் மேலாதிக்கத்தைப் பற்றியது, வேறு ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார்.
வரலாற்றாசிரியர் சஞ்சய் சோனாவானி 2022 இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், சிவாஜி மகாராஜ் உண்மையில் சமர்த் ராம்தாஸின் கோவில்களுக்கு நன்கொடை அளித்ததாக பதிவுகள் காட்டுகின்றன.
ஆனால், மகாராஜ் பிற மக்கள் மற்றும் மதங்களின் கோயில்களுக்கு நன்கொடை அளித்துள்ளார் என்பதையும் பதிவுகள் காட்டுகின்றன. அது யாரையும் மகாராஜின் குருவாக மாற்றாது” என்றார்.
சமர்த் ராமதாஸ் யார்?
சமர்த் ராம்தாஸ் சுமார் 1608 – 1681 காலகட்டத்தில் வாழ்ந்த ஆன்மிக குரு. இவர் ஒரு இந்து துறவி, தத்துவஞானி, கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.
ராமர் மற்றும் அனுமனின் பக்தரான அவர், இந்திய துணைக் கண்டம் முழுவதும் 12 ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்தார், அந்த சமயத்தில் பல்வேறு ஆன்மீக ஆசிரியர்களையும், பல்வேறு மத மரபுகளையும் சந்தித்தார்.
ராமதாஸ் பல ஆண்டுகளாக இந்து தேசியவாத சிந்தனைகளை பரப்பினார். லோகமான்ய திலக், ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெட்கேவார் மற்றும் வி.டி. சாவர்க்கர் போன்றவர்கள் அனைவரும் 17 ஆம் நூற்றாண்டின் இந்தத் துறவியால் ஈர்க்கப்பட்டனர்.
ஹனுமானுக்கு அவர் பாடிய மாருதி ஸ்தோத்திரம், மகாராஷ்டிரா முழுவதும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மல்யுத்த வீரர்களால் இன்னும் பொதுவாக வாசிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“