நடுநிலையை உறுதி செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணையரை (சிஇசி) தேர்வு செய்வதற்கான நியமனக் குழுவில் இந்திய தலைமை நீதிபதியை சேர்க்க வேண்டும் என்ற யோசனையை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
Advertisment
மறைந்த டி.என் சேஷனைப் போன்ற வலுவான குணாதிசயமுள்ள தலைமை தேர்தல் ஆணையரை விரும்புவதாக செவ்வாய்கிழமை (நவம்பர் 22) உச்ச நீதிமன்றம் கூறியது. இது தொடர்பான வழக்கு, நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் இந்த யோசனையை கூறியது.
யார் இந்த டி.என். சேஷன்
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட டி.என். சேஷன் டிசம்பர் 12, 1990 முதல் டிசம்பர் 11, 1996 வரை இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தார். இவரது இயற்பெயர் திருநெல்வேலி நாராயண ஐயர் சேஷன் ஆகும்.
Advertisment
Advertisements
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த சேஷன், இந்திய தேர்தல்களின் முகத்தை மாற்றிய தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்ததற்காக பரவலாக புகழ் பெற்றார். இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஆவதற்கு முன்பு, சேஷன் அணுசக்தி ஆணையத்தின் செயலாளர் மற்றும் விண்வெளித் துறையின் இணைச் செயலாளர் உட்பட பல அதிகாரத்துவ பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
1996ல் தேர்தல் ஆணையர்கள் எம்.எஸ்.கில் மற்றும் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தியுடன் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்
இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான அரசியலமைப்பு அதிகாரம் 1950இல் நிறுவப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் 1990 வரை தேர்தல்களைக் கவனிப்பவராக இருக்கவில்லை. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது சாதாரணமாக இருந்த நேரத்தில், சேஷன் EC இன் அதிகாரத்தை அமல்படுத்தினார்.
அரசியலமைப்பில் அதன் அதிகாரங்களின்படி. நாட்டில் தேர்தல் நடத்தும் முறையை மாற்றி, மது விநியோகம், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, சுவரில் எழுத தடை, தேர்தல் பேச்சுகளில் மதத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 150 முறைகேடுகளின் பட்டியலைத் தேர்தல்களின் போது அறிமுகப்படுத்தினார். வாக்காளர் அடையாள அட்டை, மாதிரியை அறிமுகப்படுத்தினார். நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவுகளுக்கு வரம்பு அமல்படுத்தப்பட்டது.
இந்த செயல்பாட்டின் போது, ஆளும் அரசாங்கத்துடன் சேஷனுக்கும் பல விரிசல்கள் ஏற்பட்டன. 1993 ஆம் ஆண்டில், பி வி நரசிம்ம ராவ் தலைமையிலான அப்போதைய அரசாங்கம் இந்திய அரசியலமைப்பின் 342 (2)<3> இன் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து EC களின் எண்ணிக்கையை இரண்டாக நிர்ணயித்தது. மேலும், எம்எஸ் கில் மற்றும் ஜி வி ஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை இரண்டு தேர்தல் ஆணையங்களாக நியமித்தது. இதை எதிர்த்து, தனது அதிகாரத்தை குறைக்க இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறி சேஷன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
அவரது மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.எனினும் அவரின் போராட்டம் தொடர்ந்தது. தற்போதைய தேர்தல் முறைகளுக்கு அவர் முன்மாதிரியாக திகழ்கிறார்.
இந்நிலையில், 1996 ஆம் ஆண்டில், நாட்டில் தேர்தல் செயல்முறையைச் சுத்தப்படுத்தியதற்காக சேஷன் ராமன் மகசேசே விருதைப் பெற்றார். 1997 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கே ஆர் நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். நவம்பர் 10, 2019 அன்று சென்னையில் தனது இறுதி மூச்சை விடுத்தார்.