Advertisment

ஒரு எம்.பியால் ஏன் இரு அவைகளிலும் செயல்பட இயலாது? இந்திய அரசியல் சாசனம் கூறும் காரணங்கள் இதோ

அவர் தன்னுடைய முடிவினை 10 நாட்களுக்குள் எடுத்துவிட்டு அதனை முறையே இந்திய தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Why an individual cannot be a member of both Houses of Parliament? Rajya Sabha, Lok Sabha, Parliamentary session

S K Mendiratta

Advertisment

2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வதோதரா மற்றும் வாரணாசி என்று இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று வதோதராவின் எம்.பி. பதவியை பிறகு ராஜினாமா செய்தார். ரே பரேலியில் இருந்து கொண்டே சிக்மங்களூரில் போட்டியிட்டார் இந்திரா காந்தி. அமேதியில் போட்டியிட்டுக் கொண்டு மங்களூரிலும் வேட்பளராக களம் இறங்கினார் சோனியா காந்தி.

இது இன்று நேற்றல்ல. தேர்தல் காலங்களில் என்றும் நடைமுறையில் இருக்கும் ஒன்று. ஆனால் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டால், நிச்சயமாக ஒரு தொகுதியை கைவிட்டே ஆக வேண்டும். நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் ஒரே நபரை தேர்வு செய்தாலும் நிலை இதே தான். ஒன்றை காலி செய்தே ஆக வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக இருந்த கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார், மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்ட கனிமொழியும் தத்தம் பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றார்கள். காரணம் என்ன?

மேலும் படிக்க : மும்மொழிக் கொள்கை திருத்தப்பட்ட வரைவிற்கு 2 உறுப்பினர்கள் எதிர்ப்பு! காரணம் என்ன?

Why an individual cannot be a member of both Houses of Parliament?

புதிதாக அமைக்கப்பட்ட அரசின் கீழ் வருகின்ற 17ம் தேதி லோக்சபா கூடுகிறது. மூன்று நாட்கள் கழித்து ஜூன் 20ம் தேதி ராஜ்யசபா கூடுகிறது. இரண்டு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு 10 நாட்ட்கள் அவகாசம் வழங்கப்படும். அவருக்கு தேவையான ஒரு அவையை அந்த 10 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும். எதை முடிவு செய்கிறாரோ, அதுவே இறுதியான முடிவாக இருக்கும். இதனை இந்திய அரசியல் சாசனம் 101 (1), பிரிவு 68(1), மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951 உறுதி செய்கிறது.

அவர் தன்னுடைய முடிவினை 10 நாட்களுக்குள் எடுத்துவிட்டு அதனை முறையே இந்திய தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும்.  ராஜ்யசபாவில் இருக்கும் ஒரு நபர் தற்போது மக்களவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார் என்றால், அவருடைய மேலவை இருக்கை தானாக காலி ஆகிவிடுவதை இந்திய அரசியல் சாசனம் பிரிவு 67A, மக்கள் பிரதிநிதிச்சட்டம் 1951 உறுதி செய்கின்றது.

தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமித் ஷா (பாஜக, காந்திநகர்), ரவிஷங்கர் பிரசாத்(பாஜக, பாட்னா சாகிப்), ஸ்மிரிதி இரானி (பாஜக, அமேதி), கனிமொழி (திமுக, தூத்துக்குடி), மற்றும் அனுபவ் மோகண்டி (பி.ஜே.டி, கேந்திரபாரா) ஆகியோரின் மேலவை இருக்கைகள் தற்போது காலியாகிவிட்டன.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்ட உடனே அவர்கள் மேலவை உறுப்பினர்கள் என்ற பதவியில் மே 24 அன்று வெளியேறியதாக அறிவிக்கப்படுகிறது.  25ம் தேதியே அவர்கள் கீழவை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். 24ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்களாக செயல்பட இயலாது.

மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால்?

இம்முறை இப்படி யாரும் வெற்றி பெறவில்லை. மோடி வாரணாசியில் மட்டுமே போட்டியிட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் வயநாடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஒரு வேளை இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றிருந்தால் தன்னுடைய ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 14 நாட்களுக்குள் இவர் அந்த முடிவை எடுக்காமல் இருந்தால் அவரின் இரண்டு தொகுதிகளிலும் எம்.பிக்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தொகுதிகளாக பாவிக்கப்படும். இந்த சட்டத்தினை உறுதி செய்கிறது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 70, 1951 மக்கள் பிரதிநிதி சட்டம்.

சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால்?

இரண்டு இடங்களிலும் ஒருவர் உறுப்பினராக செயல்படுவதை தடை செய்யும் விதிமுறைகள் இந்திய அரசியல் சாசனச் சட்டம் 101(2)ல் இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற அவைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை இந்திய அரசிதழில் வெளியிட்ட 14 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும். இல்லையென்றால் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்படும்.

Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment