Advertisment

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் - தர்க்கமும், கேள்விகளும்

நிர்வாக தலைநகர் விசாகப்பட்டினம் - நீதித்துறை தலைநகர் கர்னூலில் இருந்து 700 கி.மீ தொலைவிலும், சட்டமன்ற தலைநகர் அமராவதியிலிருந்து 400 கி.மீ தொலைவிலும் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Andhra Pradesh Decentralisation and Equal Development of All Regions Bill, 2020

Andhra Pradesh Decentralisation and Equal Development of All Regions Bill, 2020

கடந்த திங்களன்று,'அனைத்து பிராந்தியங்களின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி 2020" என்ற மசோதாவை ஆந்திர பிரதேசம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களுக்கு வழி வகுப்பதாகும்.

Advertisment

விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

முன்னாள் முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு தனது கனவு நகரமாக கட்டியெழுப்பிய அமராவதி, தற்போது சட்டமன்ற தலைநகராக மட்டுமே இருக்கும். விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும்.

ஏன் மூன்று தலைநகரங்கள் :  

எங்களிடம் உள்ள அனைத்து நிதி ஆதாரங்களையும் பயன்படுத்தி ஒரு பகுதியை அபிவிருத்தி செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்த வகையான திட்டமிடலால் மாநிலத்தின் மற்ற பகுதிகள் புறகணிக்கப்படுகின்றன, நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன என்று முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற நாளிதழுக்கு தெரிவித்து இருந்தார்.

உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன:   

* வரலாற்று ரீதியாக பரிந்துரைக்கப்பட்டவை : அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஆந்திராவின் தலைநகருக்கு பொருத்தமான இடத்தை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட அனைத்து முக்கிய குழுக்களின் பரிந்துரைகளும் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை  மைய பொருளாக வாதிட்டது .

இராயலசீமையின் வால்டேர் (தற்போதைய விசாகப்பட்டினம்) மற்றும் அனந்தபூரில் பகுதிகளில் இரண்டு பல்கலைக்கழக மையங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் மற்றும் பெருநகரங்கள் கடலோர மாவட்டங்களில் அமைத்திட வேண்டும் என்று 1937ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி போடப்பட்ட  ஸ்ரீ பாக் ஒப்பந்தத்தில் (இராயலசீமை, கடலோர ஆந்திரா தலைவர்களுக்கு இடையே) ஒப்புக்கொள்ளப்பட்டதாக நிதி மற்றும் சட்டமன்ற விவகார அமைச்சர் பி.ராஜேந்திரநாத் தெரிவித்தார்

 

டிசம்பர் 2010 இல், தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக  அமைக்கப்பட்ட நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா குழு, இராயல்சீமை மற்றும் வட கடலோர ஆந்திரா பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவை என்று தெரிவித்து இருந்தது.  அனைத்து வளர்ச்சிகளும்  ஹைதராபாத்தை நோக்கி இருப்பதே  தனி மாநிலம் தேவைப்படுவதற்கான முக்கிய காரணம் என்றும் கூறியது.

ஆகஸ்ட் 2014 இல், ஆந்திராவின் புதிய தலைநகருக்கான இடங்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட கே.சிவராமகிருஷ்ணன் குழு, பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி வேண்டும் என்றும், ஒரு மெகா தலைநகரம் விரும்பத்தக்கதல்ல என்றும் கூறியது.

* ஜி.என் ராவ் குழு: ஒய்எஸ்ஆர் அரசாங்கத்தால் 2019ம் ஆண்டு அமைக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.என்.ரா குழு,  தனது அறிக்கையில் : வருங்கால ஆந்திராவின் சீரான வளர்ச்சிக்கு மூன்று தலைநகரங்களையும், நான்கு பிராந்திய ஆணையர்களையும் (கர்நாடகாவைப் போல்) பரிந்துரைத்தது.

* பி.சி.ஜி பரிந்துரை: உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சி குழுமத்திடமிருந்தும் ஒய்எஸ்ஆர்  அரசாங்கம் இது குறித்த கருத்தைத் தேடியது.

2020ம் ஆண்டு ஜனவரி 3 இந்த நிறுவனம் தனது அறிக்கையில் ,

விசாகப்பட்டினம் : ஆளுநர் அலுவலகம் , முதலமைச்சர் அலுவலகம் , அரசு துறைகள், உயர் நீதிமன்ற பெஞ்ச், அவசரகாலத்தில் பயன்படுத்த ஒரு சட்டமன்றம்.

விஜயவாடா /அமராவதி  : சட்டமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற பெஞ்ச் ;

கர்னூல் : உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள்

என்று கூறியிருந்தது.

*உயர் மட்டக்குழு: ஜி.என்.ராவ் கமிட்டி மற்றும் பி.சி.ஜி ஆகியவற்றின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உயர் மட்டக்குழு, மாநிலத்தை பல்வேறு மண்டலங்களாக பிரிப்பதற்கும், மண்டல வாரியான திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு வாரியங்களை நிறுவுவதற்கும் பரிந்துரைத்தது. இராயலசீமை மற்றும் வட கடலோர ஆந்திராவை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

நடைமுறை சிக்கல்கள் : 

பொதுவாக, சட்டமன்றம் பல மாத இடைவெளிகளுக்குப் பிறகுதான் கூடுகிறது என்றும், அரசாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேவைப்படும்போது அமராவதிக்குச் செல்ல முடியும் என்றும் அரசாங்கம் வாதிடுகிறது. எவ்வாறாயினும், தனித்தனி நகரங்களில் சட்டமன்றம் மற்றும் அரசு நிர்வாகம் என இரண்டு அமைப்பை  ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

ஆந்திராவில் புது தலைநகர் இடையில் இருக்கும் தூரங்கள் சாதாரணம் அல்ல. நிர்வாக தலைநகர் விசாகப்பட்டினம் - நீதித்துறை தலைநகர் கர்னூலில் இருந்து 700 கி.மீ தொலைவிலும், சட்டமன்ற தலைநகர் அமராவதியிலிருந்து 400 கி.மீ தொலைவிலும் உள்ளது. அமராவதி-கர்னூல் தூரம் 370 கி.மீ.

இதனால், அன்றாட பொதுமக்களுக்கு பயணத்தின் நேரம் மற்றும் செலவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

ஆந்திர காவல்துறை தலைமையிடம் மங்களகிரியில் அமைந்துள்ளது. விஜயவாடாவில் இருந்து கிட்டத்தட்ட 14 கி.மீ.  ஐ.பி.எஸ் அதிகாரிகள் விசாகப்பட்டினத்தில் அமைந்திருக்கும் தலைமை செயலகத்திற்கு வரவேண்டும் என்றால் 400 கி.மீ பயணிக்க வேண்டும். அதேபோல், அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றால் கர்னூலுக்கு 700 கி.மீ பயணிக்க வேண்டியிருக்கும். கர்னூலில்  விமான நிலையம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றம் அமர்வில் இருக்கும்போது அமைச்சர்களுக்கு உதவி செய்ய வேண்டிய அனைத்து அதிகாரிகளும் அமராவதியில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். விசாகப்பட்டினத்தில் தங்கள் மற்ற பொறுப்புகளை இவர்களால் கவனிக்க முடியாது.

உள்கட்டமைப்பு தேவைகள்: 

விசாகப்பட்டினத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட எந்த திட்டமும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. நகராட்சி நிர்வாக மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் போட்சா சத்தியநாராயண இது குறித்து தெரிவிக்கையில்,"காலியாக உள்ள அரசு அலுவலக இடம் போதுமானதாக உள்ளது" என்றார்.

ருஷிகொண்டா ஐடி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஹில் 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் தலைமை செயலகம், அரசு துறைத் தலைவர்கள் அலுவலகம் அமைக்கப்படும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

விஜயவாடா, குண்டூரிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு 14,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு  இடம் பெயரயிருக்கின்றனர். இவர்களுக்கு, மானிய விலையில் அரசு நிலங்களை ஒதுக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ஜெகன் மோகன் Vs சந்திரபாபு நாயுடு

ஏனெனில், 1995 முதல் 2004 வரை முதலமைச்சராக இருந்த காலத்தில் ஹைதராபாத்தை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றிய பெருமை என்.சந்திரபாபு நாயுடுவை சேரும். தெலுங்கானா உருவான பின்னர், துண்டிக்கப்பட்ட ஆந்திரா என். சந்திரபாபு நாயுடு மீது அதீத நம்பிக்கை வைத்தது.

2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனது தோழமை கட்சியான பாஜகவுடன் இணைந்து  வெற்றி பெற்றது. அமராவதியில் உலகத் தரம் வாய்ந்த தலைநகரைக் கட்டுவதில் கவனம் செலுத்தினார் சந்திரபாபு நாயுடு .

புதுமையான நிலம் திரட்டும் திட்டத்தின் (land pooling Scheme) மூலம், 29 கிராமங்களில் இருந்து 33,000 ஏக்கர் வளமான நிலங்கள் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.  நில உரிமையாளர்களுக்கு மாற்று இடங்கள் உறுதியளிக்கப்பட்டன.

இருப்பினும், நிதி பற்றாக்குறை மற்றும் மத்திய அரசின் உதவியின்மை காரணமாக, அவரால் தனது கனவு தலைநகரத்தை உருவாக்க முடியவில்லை;

எவ்வாறாயினும், இடைக்கால அரசு வளாகம், தற்காலிக உயர்நீதிமன்ற கட்டிடம், நிரந்தர சட்டமன்ற வளாகம் போன்றைவைகள அமைத்திருந்தார்.

நாயுடுவின் கடுமையான போட்டியாளரான ஜெகன் மோகன் ரெட்டி, இந்த திட்டத்தை கைவிட்டார்.ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த செயல் சந்திரபாபு நாயுடு கனவுகளை மறுப்பதை நோக்கமாகக் கொண்டது என்ற பரவலான கருத்தும் ஆந்திராவில் உள்ளது

Chandrababu Naidu Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment