ஆந்திராவில் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கும் தனித்தனியே வாரியம் அமைக்க காரணம் என்ன?

க்ரூப் இ-ல் ஷேக் கார்ப்பரேசன், சமூக ரீதியில் பின் தங்கி இருக்கும் இஸ்லாமியர்களுக்காக உருவாக்கப்பட்டது.

By: October 20, 2020, 2:17:46 PM

Why Andhra Pradesh is setting up separate bodies for each backward class : 139 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரே ஒரு பேக்வர்ட் க்ளாசஸ் கார்ப்பரேச்சன் செயல்பட்டு வந்தது. இதனை மாற்றி, பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் இருக்கும் பெரும்பான்மையான 56 வகுப்புகளுக்கு தனித்தனி கார்ப்பரேசனை உருவாக்க திட்டமிட்டுள்ளது ஆந்திர அரசு.

ஆந்திரா ஏன் இது போன்ற முடிவினை மேற்கொண்டது?

மே 2019 தேர்தலுக்கு முன்பு பாதயாத்திரை மேற்கொண்டார் ஜெகன் மோகன் ரெட்டி. அப்போது சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையாக அரசின் நலத்திட்டங்கள் சேரவில்லை என்ற புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து 30 ஆயிரம் மக்கள் தொகைக்கும் அதிகமாக இருக்கும் பிரிவினருக்கு தனியாக வாரியம் அமைத்து தருவதாக ஒப்புதல் அளித்தார். அந்த வாரியம், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தேவைகளை நிவர்த்தி மேற்பார்வையிடும். அரசிடம் இருந்து இந்த வாரியத்திற்கு, அரசின் திட்டங்களையும் உதவிகளையும் திறம்பட செய்ய நிதி அளிக்கப்படும். மெட்ரிக் பள்ளி கட்டணங்களை திருப்பிச் செலுத்துதல், சிறு தொழில்களைத் தொடங்க 45-60 வயதுடைய பெண்களுக்கு ரூ .18,750 நிதி உதவி, முதியோர் ஓய்வூதியம், பி.டி.எஸ் மூலம் ரேஷன்கள், சுகாதார நலன்கள் போன்றவை இந்த திட்டங்களில் அடங்கும். ஒவ்வொரு கார்ப்பரேசனிடமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனாளிகள் மட்டும் இருப்பதால், அவர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு உட்பிரிவுகளுக்கு தனியாக கார்ப்பரேசன்கள் இருந்ததா?

இல்லை. பின்தங்கிய வகுப்பின் கீழ் இருக்கும் உட்பிரிவுகளுக்கு முதன்முறையாக இப்போதுதான் இது போன்ற திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. பிற்படுத்தபப்ட்டோர் நலனுக்காக பி.சி. வெல்ஃபேர் கார்ப்பரேசன், அதன் கீழ் உள்ள 139 உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒன்று உருவாக்கப்பட்டது. தனி சாதி அடிப்படையிலான கூட்டுறவு சங்கங்கள் இதற்கு முன்பு இருந்தது. தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் போது கபூஸ் மற்றும் பிராமணர்களுக்கு தனித்தனியாக கார்ப்பரேசன்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் உட்பிரிவுக்கு இது உருவாக்கப்படவில்லை. 49.55% பின்தங்கிய வகுப்பினரை கொண்டுள்ள மாநிலத்தில் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் தனித்தனி கார்ப்பரேசன் அமைப்பது அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவது உறுதி செய்யப்படும் என்று நம்புகிறது இன்றைய அரசு.

இப்போது ஏன் இந்த கார்ப்பரேசன்கள் உருவாக்கப்பட்டது? அதன் செயல்பாடுகள் என்ன?

தேர்தலில் ஜெகன் மோகனுக்கு வாக்களித்தால், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் உட்பிரினருக்கு நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க தனித்தனி வாரியங்கள் அமைக்கப்படும் என்று தேர்தலில் வாக்களித்தார் ஜெகன் மோகன். தங்களின் விசுவாசத்தை பெரும் அளவில் வாக்குகளாக செலுத்தி ஜெகன்மோகனின் மகத்தான வெற்றிக்கு இவர்கள் உதவினார்கள். தனது அரசாங்கத்தை அமைத்த பின்னர், முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நலனில் தனது அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும், ஐந்து ஆண்டுகளில் பின்தங்கிய வகுப்பினருக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்காக அவருடைய அரசாங்கம் ரூ .75,000 கோடி வரை செலவிடும் என்றும் அறிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தற்போது இந்த வாரியங்களை அவர் அமைத்துள்ளார். இது பின்தங்கிய வகுப்பினரின் வளர்ச்சியை உறுதி செய்யும். ஒவ்வொரு கார்ப்பரேசனிலும் ஒரு தலைவரும் 12 இயக்குநர்களும் இருப்பார்கள். இவர்கள் 13 மாவட்டங்களின் பிரதிநிதிகளாக செயல்பட்டு, தகுதியான பயனாளர்களை அடையாளம் காண்பதும் ,அவர்களுக்கு முறையாக நிதி உதவிகள் சென்று சேர்ந்ததா என்பதையும் உறுதி செய்வதே இவர்களின் பணியாகும்.

ஆந்திராவில் பின் தங்கிய வகுப்பினர் யார்?

சமீபத்திய அரசு கணக்கெடுப்பின் படி, 2,14,97,500 அல்லது 49.55% ஆந்திர மக்கள் தொகையினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வருகின்றனர். ஏ,பி,சி,டி,இ என்ற பிரிவுகளில் 139 உட்பிரிவுகள் உள்ளது. க்ரூப் சி என்பது கிறித்துவர்களாக மாறிய பட்டியல் இனத்தவர்கள். அதே நேரத்தில் குரூப் இ என்பது சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பின் தங்கிய இஸ்லாமியர்கள். இந்த உட்பிரிவில் 15 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை மக்கள் இருக்கின்றனர். யாதவர்கள், துர்பு கபூஸ், குறுமா, பலிஜா, அக்னிகுல சத்திரியா ஆகியோர் ஆதிக்கம் செலுத்தும் உட்பிரிவினர். க்ரூப் இ-ல் ஷேக் கார்ப்பரேசன், சமூக ரீதியில் பின் தங்கி இருக்கும் இஸ்லாமியர்களுக்காக உருவாக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Why andhra pradesh is setting up separate bodies for each backward class

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X