வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கும் ஏன் சி.ஆர்.பி. சோதனை செய்ய வேண்டும்?

சி.ஆர்.பி (C-reactive protein) சோதனை என்பது நோய் கண்டறியும் சோதனை அல்ல. ஆனால் இது முன்கணிப்பு மதிப்பு.

சி.ஆர்.பி (C-reactive protein) சோதனை என்பது நோய் கண்டறியும் சோதனை அல்ல. ஆனால் இது முன்கணிப்பு மதிப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Why are doctors recommending CRP tests even for the patients in home isolation?

Anju Agnihotri Chaba

Why are doctors recommending CRP tests even for the patients in home isolation : மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சி.ஆர்.பி. பரிசோதனை கட்டாயமாக செய்ய வேண்டும் என்ற சூழல் இருப்பதை போன்றே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவிற்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சி.ஆர்.பி (C-reactive protein) சோதனை என்பது நோய் கண்டறியும் சோதனை அல்ல. ஆனால் இது முன்கணிப்பு மதிப்பு. பின்னர், மருத்துவர்கள் அதை வீட்டில் தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு ஏன் பரிந்துரைக்கிறார்கள்? என்பதை விளக்குகிறார் அஞ்சு அக்னிஹோத்ரி சப்பா.

சி.ஆர்.பி. சோதனை என்றால் என்ன?

Advertisment

இது ஒரு ரத்த பரிசோதனை ஆகும். உடலில் ஏதேனும் நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது உடலில் உருவாகும் அழற்சி அளவு மற்றும் தொற்றின் அளவு குறித்து நமக்கு தெரிவிக்கும். இந்த சோதனையை எந்த நோய்க்கும் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக இந்த அளவு இருப்பின் நோய் தொற்று தீவிரமாக உள்ளது என்று அர்த்தம். இந்த சோதனை கல்லீரலில் உற்பத்தியாகி இரத்தத்தில் இருக்கும் சி ரியாக்டிவ் ப்ரோட்டின் அளவை குறிக்க உதவுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு இது ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது?

மருத்துவமனையின் பராமரிப்பில் உள்ள ஆபத்தான நிலைமையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இதை கட்டாயமாக பரிந்துரைக்கிறார்கள், ஏனென்றால் இது தற்போதைய சிகிச்சையில் உடலின் எதிர்வினையைக் காட்டும் குறிகாட்டிகளில் ஒன்றாகும்.

கோவிட் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களில் பரிந்துரைக்கப்படும் சிஆர்பி இயல்பானதாக இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு சாதகமாக செயல்படுகிறது, மேலும் இது தேவையானதை விட அதிகமாக இருந்தால், உடலில் இருக்கும் தொற்று அளவை சி.டி.ஸ்கேன் போன்ற சோதனைகளில் அறிய வேண்டும் என்று ஜலந்தரில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க லெவல் -3 வசதியை கொண்ட மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் எஸ்.எஸ்.ஜோஹல் தெரிவித்துள்ளார். ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகும் கூட அவர்களின் அறிகுறிகளில் எந்த முன்னேற்றத்தையும் காட்டாவில்லை என்றால் வீட்டில் இருப்பவர்களும் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

Advertisment
Advertisements

வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் ஏன் மற்றும் எப்போது இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும்?

மிதமான மற்றும் லேசான நோய் அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களுக்கு 5 நாட்களுக்கும் மேலாக அந்த அறிகுறிகளில் மாற்றம் ஏதும் காணப்படவில்லை என்றால் இந்த சோதனை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிக்கலான நிலை குறித்து தீர்ப்பதற்கு இன்ஃபள்மேஷனை சரிபார்க்க 4-5 நாட்கள் இடைவெளியில் குறைந்தது இரண்டு முறை இந்த சோதனை நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நோயாளி தனது ஆக்ஸிஜன் அளவு 93 முதல் 97 வரை மாறுபாட்டில் வித்தியாசம் ஏற்படும் பட்சத்தில் அவருக்கு சி.ஆர்.பி. சோதனையை பரிந்துரை செய்கின்றோம். என்று டாக்டர் அஜய் பாகா கூறினார். இது மேலும் சிக்கல்களை அறிய மருத்துவர்களுக்கு உதவலாம் என்றார் அவர்.

மருத்துவர்களுக்கு இது எவ்வகையில் உதவுகிறது?

சிஆர்பி சோதனை சிடி ஸ்கேன் போல விலை உயர்ந்ததல்ல, எனவே நோயாளிகளுக்கு இதை பரிந்துரைக்கிறோம். இந்த பரிசோதனையை 4-5 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மேற்கொள்வது நோயாளிகளில் சிஆர்பி அளவை அறிய உதவும். இதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கையை மருத்துவர்கள் தீர்மானிக்க முடியும் ”என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசிய துணைத் தலைவர் டாக்டர் நவ்ஜோத் சிங் தஹியா கூறினார்.அறிகுறிகளில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை எனில், கோவிட் சிகிச்சைக்கு அவர்கள் ஸ்டெராய்டுகள் பரிந்துரைக்கப்படலாம், இது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதை தடுக்க வீட்டியேலே துவங்கலாம். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகின்ற நிலையில் ஆரம்பகட்டத்திலேயே இதன் மூலம் நோயாளிகளின் நோய் தீவிரத்தை அறிந்து கொள்ள மருத்துவர்களுக்கு உதவுகிறது. வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் அனைவருக்கும் இந்த சோதனை பரிந்துரைக்கப்படாது. மருந்துகள் எடுத்துக் கொண்ட போதும் முறையான முன்னேற்றம் காணப்படவில்லை என்றால் இந்த சோதனை கட்டாயம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: