இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரில் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இந்தச் சம்பவம் திங்கள்கிழமை (செப்.19) மாலை நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி மத சின்னங்களை சேதப்படுத்திய நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லெய்செஸ்டரில் என்ன நடக்கிறது?
இங்கிலாந்தின் கிழக்கு லாய்செஸ்டரில் இந்த மோதல் முதன் முதலில் வெடித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் அப்பகுதி சுயேச்சை எம்.பி., கிளாடியா வெப், “அனைவரும் அமைதியாக கலைந்து அவரவர் வீட்டுக்கு செல்ல வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்தப் பிரச்னை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பெரிதாகி, திங்கள்கிழமை வன்முறையாக வெடித்துள்ளது என இங்கிலாந்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற வன்முறை மற்றும் குழப்பங்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்த காவலர்கள் இந்தப் பிரச்னையில் இருவரை கைது செய்துள்ளோம் என்றும் கூறினர்.
நகரில் அமைதியின்மை ஏன்?
துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய கிழக்கு லாய்செஸ்டரில் எதிரொலித்தது. அங்குள்ள இந்தியர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர்.
அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என ஒலிக்கப்பட்டது. மறுபுறம் எதிர் தரப்பினர் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்துக்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான காணொலி காட்சிகளை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். இதில் இந்துக்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன என்று அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இந்து சமூகத்தை சேர்ந்த ஒருவர், “எங்களின் கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க காவல்துறை தவறிவிட்டது” என்று குற்றஞ்சாட்டினார்.
மறுபுறம் தங்களின் வழிபாட்டு தலமும் தாக்கப்பட்டது என இஸ்லாமியர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல்கள் வழக்கத்துக்கு மாறானதா?
இங்கிலாந்தில் கால்பந்து போட்டியின் போதும் இதே போன்று வன்முறைகள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. , ஜூலை 2021 இல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பிற்காக இங்கிலாந்து இத்தாலி விளையாடும் ஸ்டேடியத்தை டிக்கெட் இல்லாமல் ரசிகர்கள் முற்றுகையிட்டதால் வெம்ப்லியில் குழப்பம் ஏற்பட்டது.
இது கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் வேறுபட்டவை, ஏனெனில் அவை பெரும்பாலும் வலுவான வகுப்புவாத சுயவிவரத்தைக் கொண்டுள்ளன.
இரு தரப்பிலும் உள்ள ரசிகர்களும் அணிகளுக்கிடையே உள்ள நல்லுறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை, மேலும் இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் அனைத்தும் இரு நாடுகளிலும் அமைதியின்மை மற்றும் வன்முறைக்கு சாத்தியமுள்ள பதட்டமான விவகாரங்களாகும்.
சமூகத் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்?
இரு சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை அச்சமூக தலைவர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் இளைஞர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
சம்பவ பகுதியில் இன்னமும் பதற்றம் நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள ஜெயின் மற்றும் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் வன்முறை எதற்கும் தீர்வல்ல. சமூக ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு மக்கள் பலியாக வேண்டாம். தற்போது நமக்கு தேவை அமைதி. இது அமைதிக்கான நேரம் என பட்டேல் என்பவர் கூறினார்.
லெய்செஸ்டரின் மக்கள்தொகை விவரம்
இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான அளவில் வாழ்கின்றனர். இவர்களின் மக்கள் தொகை 7.4 மற்றும் 7.2 சதவீதம் ஆக உள்ளது.
அடுத்தப்படியாக சீக்கியர்கள் 2.4 சதவீதம் பேர் உள்ளனர். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் ஆக உள்ளது. அதேநேரத்தில் இங்கு சொல்லிக் கொள்ளும்படி யூதர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.