அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் 2040க்குள் 10 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைப் பெறுவதற்காக முயற்சியில் உள்ளது. புதுப்பிக்கத்தக்க பொருட்களில் கனிம முதலீட்டின் சாத்தியங்களை ஓஎன்ஜிசி பார்க்கிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஏன் முதலீடு செய்கின்றன?
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும்.
காலநிலை மாற்றம் காரணமாக கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்வதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைக்க முயற்சித்து வருகின்றன.
அரசுக்கு சொந்தமான அப்ஸ்ட்ரீம் மற்றும் டவுன்ஸ்ட்ரீம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைய உதவும் முதலீடுகளில் பங்கேற்கின்றன.
வெப்ப மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பதையும், மாசுபாட்டைக் குறைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை தற்போதைய 100 ஜிகாவாட்டில் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் ஆக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய நிறுவனங்களின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீடுகள்
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி 2040 க்குள் 10ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை இலக்காகக் கொண்டுள்ளது. இது 2020 நிதியாண்டின இறுதியில் 178 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் கொண்டுள்ளது. ஓஎன்ஜிசி தலைவர் சுபாஷ் குமார் சமீபத்தில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைய உதவுவதற்காக கையகப்படுத்துதல்களைப் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
இந்தியாவின் முன்னணி இயற்கை எரிவாயு நிறுவனமான கெயில், அதன் 130 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போர்ட்ஃபோலியோவை அதிகரிக்க கையகப்படுத்தல்களைப் பார்க்கிறது. நிறுவனம் 3 முதல் 4 வருடங்களுக்குள் 1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
(மூலப்பொருட்களை அடையாளம் காணும், பிரித்தெடுக்கும் அல்லது உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் அப்ஸ்ட்ரீம் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நடத்தப்படுகிறது. டவுன்ஸ்ட்ரீம் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோருக்கு நெருக்கமாக உள்ளன. இது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.)
டவுன்ஸ்ட்ரீம் நிறுவனங்கள் கூட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார மின்னேற்றி உள்கட்டமைப்பில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், 2021 நிதியாண்டின் இறுதியில் மொத்தமாக 233 மெகாவாட் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்டது. இது 29 சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களில் 257 எலெக்ட்ரிக் சார்ஜிங் மற்றும் பேட்டரி இடமாற்று நிலையங்களையும் அமைத்துள்ளது.
IOCL அதன் பேட்டரி இடமாற்றநிலையங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் சன் மொபிலிட்டியுடன் இணைந்து எதிர்காலத்தில் பெரிய அளவில் பேட்டரி பரிமாற்றத்தை வழங்க முடிவு செய்துள்ளது. ஐஓசி இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மதுராவில் நிறுவுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த பேட்டரி தொழில்நுட்ப தொடக்க நிறுவனமானஃபைனெர்ஜியுடன் இணைந்து மின்சார வாகனங்கள் மற்றும் நிலையான சேமிப்பிற்காக அலுமினியம்-காற்று தொழில்நுட்பம் சார்ந்த பேட்டரி அமைப்புகளை உருவாக்க உள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் டாடா பவர் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங்கை அமைக்க உள்ளது. இது சுமார் 133 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அமைத்துள்ளது. இதில் சுமார் 100 மெகாவாட் காற்றாலை ஆற்றல் திறன் உள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 2020ஆம் நிதியாண்டின் இறுதியில் 43 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை நிறுவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.