Advertisment

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பது ஏன்?

Why are petrol, diesel rising in India: கலால் வரி மற்றும் சிறப்புக் கூடுதல் கலால் வரி விகிதங்களை அதிகரிப்பதனால், அதன் பலன்கள்  நுர்வோர்களைச் சென்று அடையவில்லை

author-image
WebDesk
New Update
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பது ஏன்?

நாடு முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன.  டெல்லியில் திங்களன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ .89க்கு விற்பனை செய்யப்பட்டது, மும்பையில் டீசல்  ஒரு லிட்டருக்கு ரூ .86.30 என்ற புதிய உயர்வை எட்டியது.

Advertisment

அக்டோபர் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 63.3 அமெரிக்கா டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக  பெட்ரோல்  சில்லறை விற்பனையாளர்கள் (பெட்ரோல் பம்ப்ஸ்) விலையை அதிகரித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த வாதத்தில் சில உண்மைகள் மட்டுமே எடுத்துரைக்கப்படுகிறது.

உதாரணமாக, தற்போதைய கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த நிலையை எட்டாத போதும், நுகர்வோர் கடந்தண்டு ஜனவரியில் செலுத்தியதை விட மிக அதிகமாக செலுத்துகின்றனர்.

அநேக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்  கொரோனா பொதுமுடக்கத்துக்கு முந்தைய அளவை எட்டிய நிலையில், இந்திய நுகர்வோர் அதையும் தாண்டி அதிகபடியான விலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏன் இந்த நிலை: 

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கோட்பாட்டளவில் தான் சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகள் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. எனவே,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்தால் இந்திய நுகர்வோருக்கு இயல்பாகவே பலனளிக்கும்.

ஆனால், இந்தியாவில் சந்தைக்கு உட்பட்ட பெட்ரோல், டீசல் நிர்ணயம் ஒரு வழிப்பாதையாகவே உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரிக்கும் போது, இந்திய நுகர்வோருக்கு இயல்பாகவே கூடுதல் சுமை ஏற்படுகிறது. அதே நேரத்தில், சர்வதேச சந்தையில் விலை குறையும் போது, பெட்ரோல், டீசல் மீது அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்புக் கூடுதல் கலால் வரி விகிதங்களை அதிகரிப்பதனால், அதன் பலன்கள் மக்களை சென்று அடையவில்லை. விலைகளில்  குறுக்கிடுவதன் மூலம் அரசு தன்னிச்சையாக பயனடைகிறது.

 

கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கநிலை  ஆரம்ப நாட்களில், சர்வதேச கச்சா எண்ணையின் விலைகள் சரிந்தது. இருப்பினும், அரசுக்கு சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 82 நாட்கள் விலை மாற்றத்தை அறிவிக்கவில்லை. இந்தியா நுகர்வோர்கள் தொடர்ச்சியாக இரண்டு கடுமையான அடியை சந்திக்க வேண்டியதாயிற்று. நிதியாண்டின் முதல் பாதியில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியின் எந்தப் பலன்களையும்  அனுவவிக்கவில்லை. இரண்டாம் பாதியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஓரளவு மீளும் போது, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீது போடப்பட்ட  கூடுதல் வரி காரணமாக முன்னெப்போதும் இல்லாத விலை ஏற்றத்தை கண்டனர்.

 

 

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு என்ன காரணம்?  

உலகளாவிய கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு பின் ஒட்டுமொத்த பயன்பாடு குறைந்த காரணத்தினால்,  2020, ஏப்ரல்-ல் விலைகள் கடுமையாக சரிந்தன. அதன்பொன், அநேக நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு,    தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்த காரணத்தினால் கச்சா எண்ணெய் விலைகள் மீளத் தொடங்கின.

ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே 40.00 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை நவம்பரில் 60 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது

சவூதி அரேபியா, 1 மில்லியன் பீப்பாய் என்ற தனது சராசரி தினசரி உற்பத்தியை, வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 8.125 மில்லியன் பீப்பாய்களாக குறைக்க தன்னிச்சையாக ஒத்துக் கொண்டதும் தற்போதைய விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணியாக உள்ளன.

சில்லறை விற்பனையில் ஏற்படும் தாக்கங்கள் என்ன? 

கடந்த ஆண்டு தொடக்கத்தில் லிட்டருக்கு ரூ.19.98 ஆக இருந்த மத்திய கலால் வரியை, மத்திய அரசு ரூ.32.98 ஆக உயர்த்தியது. அதே நேரத்தில், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.31.83 ஆக உயர்த்தியது. கொரோனா போதுமுடக்க நிலையால் ஏற்பட்ட பொருளாதார சூழலால், வருவாயை அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது.

வருவாயை அதிகரிக்க மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. டெல்லி அரசு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தியது.16.75 சதவீதமாக இருந்த டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை 30 சதவீதமாக  மே மாதம் உயர்த்தியது.

இருப்பினும், தற்போது கலால் வரி விகிதங்களைக் குறைக்கும் திட்டம் எதையும் மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை என்று  பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமீபத்தில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Explained: Why are petrol, diesel rising?

Petrol Diesel Price
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment