Advertisment

போராட்ட களத்தில் விவசாயிகள் ஏன் பகத் சிங் பற்றி பேசுகின்றனர்?

பகத் சிங்கை நினைவு கூறும் பல்வேறு நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போராட்ட களத்திலும் ரங் தேச பசந்தி சோலா பாடல் ஒலிக்கிறது

author-image
WebDesk
New Update
Why are protesting farmers invoking Bhagat Singh to take on Centre?

Why are protesting farmers invoking Bhagat Singh to take on Centre : மார்ச் 23 அன்று ஷாஹீத்-இ-அசாம் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் 90 வது தியாக தினத்தை குறிக்கும் வகையில் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளை நோக்கி சென்றனர். விவசாயிகளின் போராட்டங்கள் நடைபெறும் இந்த இடங்களில், இளைஞர்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கும் விவசாயிகளின் நலன் குறித்த பகத்சிங்கின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தில் பகத்சிங்கிற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

Advertisment

இதுவரை நடந்துவரும் போராட்டத்தில் பகத் சிங்கின் மரபு என்ன பங்கு வகித்துள்ளது?

தியாகிகளை தியாகிகள் நினைவு தினத்தின் போது மட்டும் விவசாயிகள் நினைவில் கொள்வதில்லை. பஞ்சாப் மற்றும் டெல்லியில் 10 வருடங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் ​​பகத் சிங் பற்றிய விவரிப்பு ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்து வருகிறது. டெல்லி மற்றும் பஞ்சாப் கிராமங்களில் விவசாய தலைவர்கள் தங்களின் உரையாடல்களின் போது பகத் சிங் குறித்து அடிக்கடி பேசி வருவது வழக்கம். அவரைப் பற்றி பேசி வருவது மட்டும் அல்லாமல் பெண்களும் இளைஞர்களும் மஞ்சள் நிற துப்பட்டா மற்றும் டர்பன்களை அணிந்து, அதனை புரட்சியின் அடையாளமாக கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள், பகத் சிங் எப்போதும் மஞ்சள் நிற டர்பன் அணியவில்லை என்று கூறிய பின்பும் அவரின் அனைத்து புகைப்படங்களிலும் அந்த டர்பன் காணப்படுகிறது.

அவருடைய புகைப்படத்தை இளைஞர்கள் டி-சர்ட்களில் வைத்துள்ளனர். இன்குலாப் ஜிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். பகத் சிங்கை நினைவு கூறும் பல்வேறு நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போராட்ட களத்திலும் ரங் தேச பசந்தி சோலா பாடல் ஒலிக்கிறது. பகத் சிங், ராஜ்குரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் மரணிக்கும் போது ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அவருடைய நண்பர்கள் எழுதிய இந்த பாடலை சிறையில் இருக்கும் கைதிகள் பாடியதாக கூறப்படுகிறது.

விவசாயிகளின் நலன் குறித்து பகத் சிங்கின் பார்வை என்ன?

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் டிசம்பர் 19, 1929ம் ஆண்டு முழுமையான சுதந்திர தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட பிறகு இளம் பகத்சிங் முழுமையான சுதந்திரத்திற்கான நிகழ்ச்சி நிரலை எழுதினார். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முழுமையான சுதந்திரத்தை எப்படி அடைய முடியும் என்று எழுதினார் என என்று பகத் சிங்கின் மருமகனும், ஷாஹீத் பகத் சிங் நூற்றாண்டு அறக்கட்டளையின் தலைவருமான பேராசிரியர் ஜக்மோகன் கூறினார். அதில் 'ஜாகிர்தாரி' (நிலப்பிரபுத்துவம்) முடிவுக்கு வர வேண்டும், விவசாயிகள் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். விவசாயி தங்கள் பயிரின் முழு விலையையும் பெறுவதில்லை.

நிலப்பிரபுகளின் கொள்ளைகளால் மோசமான சந்தை நிலவரம் உள்ளது என்று அவர் எழுதினார். அவர் மரணம் அடைந்து 90 ஆண்டுகள் ஆன பிறகும் ஜகிர்தார் நிலைமை இன்றும் நிலவுகிறது. நம்முடைய நிலங்களை நிலப்பிரபுகள் பெற்றுக் கொண்டதை போல தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன. தற்போது கடன்களை தள்ளுபடி செய்யவும், குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறவும் விவசாயிகள் போராடுகின்றனர்.

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து நிலங்களை விடுவித்தல், பயிர்களுக்குரிய நியாயமான விலையை தருதல், கடன்களை தள்ளுபடி செய்தல் இவை அனைத்தையும் செய்தால் பிறகு விஞ்ஞானப்பூர்வமான விவசாய முறைக்கு மாறுவோம். விவசாயிகள் மிகவும் மதிக்கத்தக்க வாழ்க்கையை மேற்கொள்ள நாம் கூட்டுறவு விவசாய முறையை நோக்கி நகர்ந்து கொள்ள வேண்டும்.

அவரைப் பொறுத்தவரை, பல வரிகளுக்கு பதிலாக, பகத் சிங் விவசாயிகள் மீது ஒரு வரியை முன்மொழிந்தார். "இன்று என்ன நடக்கிறது, அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளின் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இது விவசாய மேம்பாடு என்ற பெயரில் உலக வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது… .இப்போது உலக வங்கி மற்றும் கார்ப்பரேட்டுகள் போன்ற பெரிய நிறுவனங்கள் அந்தக் கால ஜாகிர்தார்களைப் போன்றவை, இந்தியா இன்னும் அதிலிருந்து விடுபடவில்லை இப்படி இருந்தால் பகத்சிங் கூறிய முழுமையான சுதந்திரத்தை நாம் எப்படி அடைய முடியும் என்று பேராசியர் ஜக்மோகன் கூறினார்.

போராட்டத்தின் போது பகத் சிங் குறித்து பேசுவது குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்?

பி.கே.யூ பொது செயலாளர் ஜக்மோகன் சிங், அவரை பற்றி பேசுவது மிகவும் ஏற்புடையது. மிகவும் சிறிய வயதிலேயே போராட்டங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். அவர் ஒரு புரட்சியாளராக இருந்தார், இன்று எங்கள் எதிர்ப்பு ஒரு புரட்சிக்கு குறைவாக இல்லை. அவர் ஒரு இளைஞர் ஐகானாகக் காணப்பட்டார், இதன் காரணமாக எங்கள் புரட்சிகர போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்கின்றனர். முழுமையான சுதந்திரம் குறித்த அவரது யோசனை அன்று இருந்ததைப் போலவே இன்றும் பொருத்தமாக இருக்கிறது.

ராஜ்குரு, சுக்தேவ், கர்த்தார் சிங் சரபாவின் பங்களிப்பு குறைவாக இல்லை, ஆனால் பகத்சிங்கின் சித்தாந்தமும் எழுத்துக்களும் இளைஞர்களால் புரட்சிக்கு ஒத்ததாகக் காணப்படுகிறது, மக்களால் தியாகத்தின் சுருக்கமாகக் கருதப்படுகிறார். பேராசிரியர் ஜக்மோகன் மேலும் கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்தில் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர், தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்ணயிக்கப்பட்ட நேரங்கள் இருக்க வேண்டும் என்றும் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ உழைப்பு போதுமானதாக இருக்க வேண்டும் என்றும் பகத்சிங் தனது எழுத்துக்களில் முன்மொழிந்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.

1920 களின் நடுப்பகுதியில் பகத் சிங் நிறுவிய நௌஜ்வான் பாரத் சபா, நாடு முழுவதும் பல மாநிலங்களில் அதன் அலகுகளைக் கொண்டுள்ளது. பகத் சிங் அப்போது என்ன கண்டாரோ அதே தான் தற்போதும் நிலவுகிறது. ஏகாதிபத்யதிற்கு எதிராக அவர் எழுதினார். இந்த மூன்று சட்டங்களும் ஏகாதிபத்ய கொள்கைகளுக்கும், தனியார்மயமாக்கலுக்கும் இட்டுச்செல்கிறது. இது மேலும் வேலையில்லா திண்டாட்டங்களையும் உருவாக்கும். மேலும் இந்த சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் தனியார்மயமாக்கல் மாதிரியை மத்திய அரசு பின்பற்றுவதை தடுக்கும் என்று ரூபிந்தர் சிங் சௌந்தா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farmers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment