Tora Agarwala
Why Assam needs a census of indigenous Muslim groups : அசாம் மாநில சிறுபான்மை நலத்துறையினர் மற்றும் வளர்ச்சித்துறையும் இணைந்து அசாம் இஸ்லாமியர்களான “கொரியா, மொரியா, தெஷி, மற்றும் ஜுலா” இனத்தவர்களுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பினை நடத்த உள்ளது. இது தொடர்பாக இந்த இன இஸ்லாமியர்கள் தலைவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளார் சிறூபான்மைத்துறை அமைச்சர் ரஞ்சித் தத்தா. இவர்களின் நலத்திற்காக உருவாக்கப்படும் கொரியா, மொரியா, தேஷி மற்றும் ஜூல்ஹா வளர்ச்சித்துறை ஆணையம் ஒன்றும் அசாமில் உருவாக்கப்பட உள்ளது.
To read this article in English
அசாமின் பூர்வகுடி இஸ்லாமியர்கள்
கடந்த ஆண்டு அசாம் பட்ஜெட்டின் போது ,அசாம் மாநில பூர்வகுடி இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்காக Development Corporation for Indigenous Muslims என்ற நிர்வாகத்துறை உருவாக்கப்பட்டது. இது இம்மக்களின் வளர்ச்சிக்காகவும், சமூக-பொருளாதார ரீதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டத்து. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 6ம் தேதி சிறுபான்மை நலத்துறையினர் “இந்த பூர்வகுடி இஸ்லாமியர்களின்” மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கான மெமோவினை வெளியிட்டது.
எந்தெந்த இனக்குழுவை சேர்ந்தவர்கள் இந்த வாரியத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்யப்படுவார்கள்?
இந்த கொரியா, மொரியா மற்றும் தேஷி இனமக்களுக்கும் இந்த நிலத்திற்குமான தொடர்பு நூற்றாண்டு வரலாற்றினை கொண்டது என்கிறார் அரிஸோனா பல்கலைகழகத்தில் பணியாற்றும் வரலாற்று ஆசிரியர் யாஸ்மின் சாய்கியா. அசாம் பகுதியில் சுமார் 600-700 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமியர்கள் வந்துவிட்டனர். அஹோம் ராஜ்ஜியத்துக்கு முன்பே இங்கு இஸ்லாமியர்கள் வந்ததிற்கான ஆதாரங்கள் உள்ளது. 13ம் நூற்றாண்டில், பக்தியருதீன் கல்ஜி படையெடுப்பிற்கு பிறகு, அங்கு இஸ்லாமிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் இன்னும் உள்ளது. வடக்கு கௌஹாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட கனை பரஷில் போவா சில் கல்வெட்டும் இதை உறுதி செய்கிறது.
கொரியா
இவ்வின மக்களின் வரலாறு அஹோம் ராஜ்ஜியத்திற்கு முன்பு செல்கிறது. இவர்களின் பெரும்பாலானோர் இஸ்லாமிய வீரர்களாக போரில் பங்கேற்க வந்தவர்கள். போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இவர்கள் உள்ளூர் மக்களுடன் இணைந்து தங்களின் வாழ்க்கையை வாழ துவங்கினார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் அசாம் மக்களின் வாழ்வியலோடு அதிக அளவு ஒன்றிப்போகிறது என்று கூறுகிறார் அஜிஸூல் ரஹ்மான் (All Assam Goriya-Moriya Deshi Parishad அமைப்பின் பொதுச்செயலாளர்) எட்வார்ட் கெய்ட்ஸின் “எ ஹிஸ்டரி ஆஃப் அசாம்” என்ற புத்தகத்தில் கொரியா இன மக்கள், வங்கதேசத்தின் மஹாமதன் ராஜ்ஜிய தலைநகரான கௌர் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மொரியா
மொரியா இன மக்கள் மிகவும் லேட்டாகவே வந்தவர்கள். 1500ம் ஆண்டுகளின் போது தான் அவர்கள் அசாமிற்கு வந்துள்ளனர். கைவினைப் பொருட்கள் செய்வதில் மிகவும் தேர்ச்சி அடைந்தவர்கள் என்கிறார் ரஹ்மான்.
ஜூல்ஹா
இவ்வின மக்கள் பிகார் மற்றும் உ.பி-யை சேர்ந்தவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் போது அம்மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார் பேராசிரியர் சைகியா. டின்சுகியா மற்றும் லிடோ வரை ரயில்கள் வந்த போது இம்மக்களும் வந்தனர். இவர்கள் குடிசை அமைப்பார்கள், கயிறு திரித்தல், நெய்தல் போன்ற வேலைகளை மேற்கொண்டனர். ஆனால் ஜோர்ஹத் மற்றும் கோலகாட் பகுதியில் குடியமர்த்தப்பட்ட, தேயிலை தோட்ட தொழிலாளர்காக பணியாற்றும் ஜூல்ஹாக்கள் குறித்து மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார் அம்மாநில சிறுபான்மைத்துறை அமைச்சர்.
தெசி
இவ்வின மக்கள் கீழ் அசாமில் இருந்து, பிரிக்கப்படாத கோல்பாரா மாவட்டத்தில் இருந்து, வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கோச் ராஜ்போங்ஷி ஆட்சி காலத்தில், 13ம் நூற்றாண்டில் இம்மக்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினார்கள். பழங்குடி இனத்தலைவர் அலி மெக் என்பவர் இஸ்லாமுக்கு மாற அவரைத் தொடர்ந்து பலரும் இஸ்லாமுக்கு மாறினார்கள். கோச் ராஜ்போங்ஷி பாஷையில் இருந்து பெரிய மாற்றம் தாராத தெசி மொழியை தான் இம்மக்கள் பேசுகின்றார்கள். இம்மக்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம் இருக்கும் என்றூ அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாததால் யார் எந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்று உறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத இஸ்லாமியர்கள் யார்?
இந்த கணக்கெடுப்பில் மியா முஸ்லீம்கள் இணைக்கப்படவில்லை. இவர்களின் மூதாதையர்கள் கிழக்கு வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். அசாம் மாநிலம் பிரிட்டிஷ் இந்தியாவுடன் 1826ம் ஆண்டு இணைக்கப்பட்டது. 1850ம் ஆண்டு முதல்மைமென்சிங், பாப்னா மற்றும் தாக்காவில் இருந்து நிறைய மக்கள் அசாமில் குடியேற துவங்கினார்கள். 1971ம் ஆண்டு வங்க தேசம் உருவாக்கப்பட்ட பிறகும் கூட பலர் இந்தியாவில் குடியேறினார்கள். இந்த சட்டத்திற்கு புறம்பான குடியேற்றத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் குடியேறிய மக்களையும் சந்தேக கண் கொண்டு காண வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
பாரக் பள்ளத்தாக்கில் இருக்கும் இஸ்லாமியர்கள் குறித்த எந்தவிதமான முடிவினையும் இன்னும் அரசு எடுக்கவில்லை. ஷைல்ஹெத் மாவட்டம் பிரிக்கப்படாத வங்கத்தின் ஒரு அங்கமாக இருந்தது. ஆனால் தற்போது இதன் பெரும் பகுதி வங்க தேசத்தில் உள்ளது. பங்கால், மைமல், கிரான், மற்றும் கச்சாரி இஸ்லாமியர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அவர்களின் வரலாற்று ஆதாரங்களை அறிவதற்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அசாம் சிறுபான்மையினர் வளார்ச்சி ஆணையத்தின் சேர்மன் சயீத் முமுனுல் அவோவல்.
இந்த சிறுபான்மை மக்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடிப்பின் படி அசாமில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 34.22% (அதாவது மூன்றில் ஒரு பாதி மக்கள்) பேர் இஸ்லாமியர்கள். இந்த இஸ்லாமிய மக்களில் அதிக பெரும்பான்மை கொண்டவர்கள் மியா இஸ்லாமியர்கள். ஆனால் இந்த மக்களின் துல்லியமான எண்ணிக்கையை அறிந்து கொள்ள அதிகப்படியான ஆராய்ச்சிகள் தேவை என்று கூறுகிறார் அப்துல் மன்னன். மாவட்ட வாரியான மக்கள் தொகை குறித்த தகவல்கள் மட்டுமே உள்ளது. ஆனால் அசாமில் பெங்கால் பேசும் இஸ்லாமியர்கள், அசாமி பேசும் இஸ்லாமியர்களை விட அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக கீழ் அசாமில்.
இந்த மக்களின் இனத்தினை எதன் அடிப்படையில் உறுதி செய்வார்கள்?
உறுதி செய்வதற்கான மீடியம் குறித்து இது வரையிலும் பேசவில்லை. ஆனால் கொரியா மற்றும் மொரியா மக்களை அவர்கள் பேசும் வார்த்தைகள் கொண்டு அடையாளம் கண்டுவிடலாம். மேலும் அவர்கள் வாழிடத்தை வைத்தும் கண்டறிந்து கொள்ள இயலும். ஜூலா இனத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் பொதுவாக நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பூர்வகுடிகளும் உள்ளனர். சில இடங்களில் இடம் பெயர்ந்த மக்களும் உள்ளனர். சிலர் அசாமி பேசுகின்றார்கள். சிலர் பெங்காலி பேசுகின்றார்கள். உங்களால் அவர்களை எப்படி அடையாளப்படுத்த முடியும் என்று கேள்வி கேட்கின்றார் ஹஃபிஸ் அகமது. கடந்த முறை நடைபெற்ற இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நான் ஜூலா இனத்தை சேர்ந்தவர் என்று பதிவிட்டேன் ஏன் என்றால் என்னுடைய மூதாதையார்கள் நெசவு செய்து வந்தனர். ஆனால் நான் பெங்காலி பேசும் மியா இனத்தையும் சேர்ந்தவன். இப்போது நான் எங்கே நிற்கின்றேன் என்றும் அவர் கேட்கிறார்.
தெசி இன மக்கள் பொதுவாக மத-மொழி அடிப்படையில் வேறுபட்ட பிரிவினர். இவர்கள் பழங்குடி இனத்தினர் இல்லை. துப்ரியில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் தெசி மொழியில் பேசுகிறார்கள். அவர்களை எப்படி பிரிப்பது. கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளை நாம் எப்படி வரையறை செய்வது என்று கேட்கிறார் சுல்தானா.
இந்த கணக்கெடுப்பின் பயன் என்ன?
அசாம் மக்களின் அரசியலமைப்பு, சட்டமன்ற மற்றும் நிர்வாக பாதுகாப்புகள், கலாச்சார, சமூக, மொழியியல் அடையாளம் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது அசாம் உடன்படிக்கை 1985-ன், 6வது பிரிவு. தற்போது மத்திய அரசு, அசாம் மக்கள் யார் என்பதை வரையறை செய்ய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை பூர்வீக அசாம் இஸ்லாமியர்களின் நலனை உறுதிபடுத்துவதோடு அவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகையையும் வழங்க வழி செய்யலாம் என்கிறார் அவொவல்.
மக்களின் கருத்து என்ன?
இந்த முடிவினை கொரியா மொரியா தேஷி பரிசாத் அமைப்பு வரவேற்றுள்ளது. இதன் பொதுச் செயலாளர் ரஹ்மான் கூறுகையில் இது அடையாளம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் என்று கூறியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை எங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்சனைக்கு இதனால் ஒரு முடிவு பிறக்கும் என்றும் அவர் கூறினார்.
சுல்தானா “இந்த நடவடிக்கைகளால் ஒருவரின் இனத்தின் வேரினை அறிந்து கொள்ள முடிந்தால் நல்லது தான். தெசி இனத்தினற்கு தன்னுடைய கம்யூனிட்டியின் வரலாறு தெரியாது, ஆனால் இதனை பயன்படுத்தி ஒரு குழுவை மற்றொரு குழுவுக்கு எதிராக திருப்பக் கூடாது என்று கூறியுள்ளார்.
ஹஃபீஸ் அகமது கூறூகையில் “இது மியா இனத்தினை மேலும் ஒதுக்கும் வகையில் இருக்கும். பெங்காலி மொழி பேசும் அசாம் மக்கள் 19ம் நூற்றாண்டில் இருந்து இங்கு தான் இருக்கின்றார்கள். வளர்ச்சி தான் முக்கிய நோக்கம் என்றால் சார் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு இந்த வளர்ச்சி வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.