Nushaiba Iqbal
Why asset sale targets are important : கடந்த ஆண்டு நிதி அறிக்கை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் இலக்கை ரூ. 2.1 லட்சம் கோடியாக அறிவித்தார். வருடாந்திர இலக்குகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கமான இலக்கு தொகையை காட்டிலும் இது மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. கொடுக்கப்பட்ட அளவை கருத்தில் கொண்டு, அரசு நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க இது முக்கியமான ஒன்றாகும். எவ்வாறாயினும், பொது சொத்துக்களின் விற்பனையின் மிகக் குறைவான வேகம் அரசாங்கம், குறிப்பிட்ட இலக்கை அடைய வாய்ப்பில்லை என்பதைக் குறிக்கிறது.
டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் (disinvestment) என்றால் என்ன?
ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் போன்ற பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு முதலீடு செய்துள்ளது. பெரும்பான்மை பங்குகளை கொண்டிருப்பதால் (52% பங்குகள்) மத்திய அரசு இந்த பொதுத்துறை நிறுவனங்களிடம் இருக்கும் பங்குகளை விற்று பணத்தினை திரட்ட முடியும். இது போன்ற சொத்து விற்பனையின் போது அரசின் பங்குகள் குறையலாம். 2020ம் ஆண்டு எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க முயன்ற போது இப்படியாக நடைபெற்றது. அல்லது நிறுவனத்தின் உரிமை அதிக அளவில் ஏலம் கேட்டவர்களுக்கு மாறலாம். பாரத் அலுமினியம் நிறுவனம் இவ்வாறாக வேதாந்தா குழுமத்தின் கீழ் 2001ம் ஆண்டு சென்றது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
பொதுத்துறை நிறுவனங்கள் ஏன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது?
பரவலாக கூறினால், டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் செய்வதற்கு பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன்ன. ஒன்று அவற்றின் ஒட்டுமொத்த செயலையும் மேம்படுத்துவது. பொதுத்துறை நிறுவனங்களாக, அவை தினசரி அடிப்படையில் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்யும்போது, பொருளாதார மற்றும் கார்ப்பரேட் நலன்களை அரசியல் ரீதியாக மறைக்கும் வாய்ப்புகள் ஏற்படும். பொதுத்துறை நிறுவனம், குறிப்பாக அரசுடன் பரிவர்த்தனை செய்யும் போது இது உண்மையாகிறது. உதாரணமாக தன்னுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அரசிற்கு விற்கும் போது விலையானது சந்தை காரணிகள் தவிர வேறு காரணங்களாலும் பாதிக்கப்படலாம்.
டிஇன்வெஸ்ட்மெண்ட் அல்லது அரசின் பங்குகளை குறைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை திறமையாக மாற்ற முயற்சிப்பது ஆகும். தனியார் அல்லது கார்ப்பரேட் உரிமையானது மிகவும் திறமையான நிர்வாகத்தை ஏற்படுத்தும் என்பதே இதன் அடிப்படை நம்பிக்கை ஆகும்.
இரண்டாவது அரசு நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும். இந்திய அரசு நிரந்தரமாக பட்ஜெட் பற்றாக்குறையை நடத்துகின்றன. வரி வருவாய், அரசின் செலவுகளுக்கு போதவில்லை என்றும் கூறலாம். தீவிர பற்றாக்குறை காலக்கட்டங்களில், அரசு பொத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க முற்பட்டது. பொருளாதார தாராளமயமாக்கத்திற்கு முன்பு, அரசின் சொத்துகளை விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி குடும்பத்தின் வெள்ளியை விற்பனை செய்வதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தாராளாமயமாக்கலுக்கு பிறகு அரசின் பங்குகளை குறைத்தல், குறிப்பாக ராணுவம் போன்ற இடங்களில் - அங்கு அரசாங்கத்தின் இருப்பு தேவையில்லை - டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் வரவேற்ப்பை பெற்றது. இந்த விற்பனை மூலமாக அரசு கடன்களை குறைத்தது மேலும் பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிக்காக முதலீடு செய்தது. கட்டுமானத்துறையில், குறிப்பாக சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், ஏழைகள் மற்றும் தேவையானவர்களுக்கு மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இதில் எப்படி வருவாய் உருவாக்கப்படுகிறது?
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டி.ஐ.பி.ஏ.எம். Department of Investment and Public Asset Management (DIPAM) தான் மத்திய அரசின் பொதுத்துறை முதலீட்டினை நிர்வகிக்கிறது. அனைத்து விற்பனைகளும் இதன் கட்டளைக்கு உட்பட்டது. ஒவ்வொரு வருடமும், நிதி அமைச்சர் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் இலக்கினை நிர்ணயம் செய்கிறார். அதன்படி ஏலம் விடப்படுகிறது. அல்லது எல்.ஐ.சி. போன்று பொது சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனம் பாதி அல்லது முழுமையாக தனியார்மயமாக்கப்படுகிறது.
அனைத்து முதலீட்டு இலக்குகளும் இவ்வாறு பூர்த்தி செய்யப்படுகிறதா? இந்த ஆண்டும் இந்த இலக்குகள் பூர்த்தி ஆகுமா?
கடந்த 15 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைவதற்கான அரசின் செயல்திறனை மேலே இருக்கும் அட்டவணை காட்டுகிறது. சில ஆண்டுகளை தவிர்த்து, அரசு தனக்கு தேவையான பணத்தினை திரட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டது. நடப்பு ஆண்டில் இந்த விவகாரம் மேலும் மோசமாக உள்ளது. சி.ஜி.ஏ. இணைய தரவுகளின் படி இதுவரை 6179 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. இது வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகையில் 3%க்கும் குறைவானது.
புது தில்லியின் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் ரத்தின் ராய் கருத்துப்படி, முதலீட்டு நிலைமைகளில் ஒரு திருப்பம் சாதகமான சந்தை நிலைமைகளில் கூட சாத்தியமில்லை. "சந்தை சாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், மத்திய அரசு தனது முதலீட்டு இலக்குகளை எந்தவொரு கணிசமான வகையிலும் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்பது ஆச்சரியமாக ஆனால் துரதிர்ஷ்டவசமாக" உள்ளது என்று அவர் கூறினார்.
இதனால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?
சி.ஜி.ஏவின் தரவுகள் படி, நவம்பர் மாதத்தில், மத்திய அரசின் பணப்பற்றாக்குறை 35% அதன் இலக்கை அதிகரித்தது. நிச்சயமாக அனைத்து நழுவல்களும் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் வருவாய் பற்றாக்குறையால் ஏற்படுவதில்லை. ஆனால் நவம்பருக்கு பிறகு 97% வரையிலான இலக்குகள் அடைய முடியாத நிலை ஒரு கவலைக்குரிய விசயமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.