Baby Shark Video tops YouTube views Tamil News: மனதை ஈர்க்கும் ட்யூன் மற்றும் வண்ணமயமான காட்சிகள் கொண்ட இந்த 'பேபி ஷார்க்' பாடல், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் பல பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கவர்ந்தது. இந்த பாடல், யூடியூபில் ஏழு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டு அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறி, கடந்த திங்களன்று ஓர் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த பேபி ஷார்க் வீடியோ, லூயிஸ் ஃபோன்ஸி மற்றும் டாடி யாங்கீ ஆகியோரால் இயற்றப்பட்ட புவேர்ட்டோ ரிக்கன் பாப் பாடலான 'டெஸ்பாசிட்டோ'வை வென்றுள்ளது.
இந்தப் பாடல் எதைப் பற்றியது?
ஒரு நிமிடம் 21 வினாடிகள் கொண்டிருக்கும் இந்தப் பாடலில் மீண்டும் மீண்டும் வரும் “டூ-டூ-டூ-டு-டு-டு-டு-டு” பல்லவி, திரும்பத்திரும்ப நம்மைக் கேட்கத தூண்டுகிறது. எளிதான நடன அசைவுகளைப் பெற்றிருக்கும் இந்தப் பாடல், குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக ஐந்து வயதிற்குப்பட்டவர்கள் இதற்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். பாடலின் அசல் எழுத்தாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது ஓர் பிரபலமான அமெரிக்க கேம்ப்ஃபயர் பாடல் என்று கூறப்படுகிறது. பலமுறை இந்தப் பாடல் பல்வேறு விதமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும், சியோலை தளமாகக் கொண்ட பிங்க்ஃபாங் எனும் தயாரிப்பு நிறுவனத்தால் ரீமிக்ஸ் செய்யப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்ட இந்த பேபி ஷார்க் பாடல்தான் அனைவராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது. 10 வயதான கொரிய-அமெரிக்கப் பாடகர் ஹோப் செகோயின் பாடிய இந்தப் பாடலின் ஆங்கில பதிப்பின் வீடியோ, 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. இது அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவின் சாதனையை முறியடித்தது.
பொதுக் களத்தில் உள்ள இந்த பாடல் பிங்க்ஃபோங்கிற்கு சொந்தமானதல்ல என்றாலும், 2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் குழந்தைகளின் பாடலாசிரியர் ஜொனாதன் ரைட் மீது வழக்குத் தொடர்ந்தது. அவர் 2011-ம் ஆண்டு இந்தப் பாடலைப் போன்ற ஒத்த பதிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடல் எவ்வளவு பிரபலமானது?
2019-ம் ஆண்டு ஜனவரியில் பில்போர்டு ஹாட் 100-ல், 32 வது இடத்தை இந்தப் பாடல் இடம் பிடித்தது. மேலும், இங்கிலாந்தின் சிறந்த 40 பாடல்கள் பட்டியலிலும் இடம் பிடித்தது. யூடியூப் ஸ்ட்ரீம்களிலிருந்து மட்டும் பிங்க்ஃபாங் நிறுவனம் சுமார் 2 5.2 மில்லியன் (ரூ.38.66 கோடி) சம்பாதித்துள்ளது. இந்த பாடல் முதலில் தென்கிழக்கு ஆசியாவிலும், பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வைரலாகியது. இந்தப் பாடல், நேரடி சுற்றுப்பயணம், பொருட்கள், புத்தகங்கள் மற்றும் பலவற்றின் விளம்பரங்களுக்குத் தூண்டியது. மேலும் லூயிஸ் ஃபோன்ஸி இந்தப் பாடலை மறு உருவாக்கம் செய்தார். கோவிட்-19 தொற்றுநோயின்போது கை கழுவுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்தப் பாடல் மாற்றியமைக்கப்பட்டது.
வைரல் இன்டர்நெட் ட்ரெண்ட்
2018-ம் ஆண்டில், #BabySharkChallenge டிக்டாக்கில் வைரல் கன்டென்ட்டாக மாறியது. மேலும், இங்கிலாந்தின் சிறந்த இசை அட்டவணையில் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டபோது, நகைச்சுவை நடிகர் ஜேம்ஸ் கார்டன் அதனை 'தி லேட் லேட் ஷோவில்' இடம்பெறச்செய்தார். மேலும், சோஃபி டர்னர் மற்றும் ஜோஷ் க்ரோபனுடன் இணைந்து ஹிட் பாடலாக்கினார். "வாழ்நாளில் ஒரு முறை, ஒரு தலைமுறையை வரையறுக்கும் பாடல் ஒன்று வரப்போகிறது" என்று அவர் இந்தப் பாடலை அறிமுகப்படுத்தினார்.
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நேஷனல்ஸ் பேஸ்பால் அணியும் அதை ஒரு கீதமாக எடுத்துக்கொண்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் கொண்டாட்டங்களின் போது பெரும்பாலும் இசைக்கத் தூண்டியது.
அதுமட்டுமின்றி, இந்தப் பாடல் சட்ட அமலாக்க நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டது. ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில், வீடற்ற மக்கள் ஓர் பொதுப் பகுதியில் கூடிவருவதை ஊக்கப்படுத்த அதிகாரிகள் இந்த பாடலை மீண்டும் மீண்டும் இசைத்தனர்.
ஓக்லஹோமாவில் உள்ள மூன்று சிறைத் தொழிலாளர்கள், கைதிகளின் கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். அவர்கள் கைதிகளைக் கைவிலங்கு செய்து கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதோடு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேபி ஷார்ட் பாடலைக் கேட்டு நிற்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மாவட்ட வழக்கறிஞர் டேவிட் ப்ரேட்டர், இந்தக் பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது, "ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தைச் சேர்த்திருக்கலாம்" என்று கூறியிருந்தார்.
யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட மற்ற வீடியோக்கள்
பேபி ஷார்க்கைத் தவிர, தற்போது, யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்து வீடியோக்களில் டெஸ்பாசிட்டோ அடங்கும். இது யூடியூபில் ஏழு பில்லியன் வியூஸ்களை பெற்ற முதல் வீடியோ. ஆங்கில பாடகர்-பாடலாசிரியர் எட் ஷீரனின் 'ஷேப் ஆஃப் யூ', அமெரிக்கன் ராப்பர் விஸ் கலீஃபாஸ் 'சீ யூ அகெயின்', மற்றும் வாய்வழி குழந்தைகளின் நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட ரஷ்ய அனிமேஷன் தொலைக்காட்சி தொடரான மாஷா அண்ட் பியரின் 'ரெசிபி ஃபார் டிசாஸ்டர்' எபிசோட் போன்றவை அடங்கும்.
மேலும், அதுவரை யூடியூபில் அதிக வியூஸ்களை பெற்றிருந்த ஜஸ்டின் பீபரின் 'பேபி' பாடலை, தென் கொரிய பாடலான சைஸின் 'கங்னம்' ஸ்டைல் முறியடித்தது. இந்தப் பாடல்தான் யூடியூபில் ஒரு பில்லியன் பார்வைகளைக் கொண்ட முதல் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.