Advertisment

கல்வி பயில்வதே நோக்கமாக இருக்க வேண்டும்; ஹிஜாப் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு

உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கல்லூரியின் புதிய ஆடைக் கட்டுப்பாடு மாணவர்களின் "கல்வி ஆர்வத்தை" கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டது என்று கூறியது. ஏன் என்பது இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bombay high court

பம்பாய் உயர் நீதிமன்றம். (விக்கிமீடியா காமன்ஸ்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Omkar Gokhale

Advertisment

பம்பாய் உயர் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூன் 26) செம்பூரில் உள்ள என்.ஜி ஆச்சார்யா மற்றும் டி.கே மராத்தே கல்லூரியின் ஒன்பது மாணவிகள் ஹிஜாப்களை தடைசெய்யும் கல்லூரியின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.

ஆங்கிலத்தில் படிக்க:

அரசு கல்லூரிகளில் மாநில அரசின் ஹிஜாப் தடையை ஊர்ஜிதப்படுத்திய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்சின் 2022 தீர்ப்பை பம்பாய் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, "முழு உடன்பாட்டை" வெளிப்படுத்தியது.

ஆடை கட்டுப்பாட்டு விதிகள்

செம்பூர் கல்லூரி இந்த ஆண்டு மே மாதம் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை வெளியிட்டது, இது ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டில் நடைமுறைக்கு வர இருந்தது. கடந்த ஆகஸ்டில், ஹிஜாப் அணிந்த பல ஜூனியர் கல்லூரிப் பெண்கள், பரிந்துரைக்கப்பட்ட சீருடைக்கு இணங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்டில் கல்லூரி சர்ச்சையைக் கண்டது.

பர்தா, நிகாப், ஹிஜாப் அல்லது பேட்ஜ்கள், தொப்பிகள் அல்லது ஸ்டோல்ஸ் போன்ற எந்த மத அடையாளங்களும் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாது என்று புதிய ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள் தெளிவாகக் கூறுகிறது. ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள் ஆண்களுக்கு பேண்ட் உடன் கூடிய அரை மற்றும் முழுச் சட்டையும், பெண்களுக்கு "வெளிப்படையாக தெரியாத இந்திய/மேற்கத்திய அனைத்து ஆடைகளும்" என்று பரிந்துரைத்தது.

மாணவர்களின் வாக்குவாதம், நிர்வாகத்தின் பதில்

பாதிக்கப்பட்ட ஒன்பது பெண்கள் கல்லூரியின் அறிவுறுத்தல்கள் "தன்னிச்சையானது மற்றும் பாரபட்சமானது" என்று கூறி, உயர் நீதிமன்றத்தை அணுகினர். அத்தகைய கட்டுப்பாடுகளை வழங்குவதற்கு கல்லூரிக்கு "அதிகாரம் இல்லை" என்று அவர்கள் கூறினர், மேலும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின்படி நிகாப் மற்றும் ஹிஜாப் ஒரு "அத்தியாவசியமான மத நடைமுறை" என்று வாதிட்டனர்.

கல்லூரியின் கட்டுப்பாடுகள் "தங்கள் கல்விக்கான அணுகலைத் தடுக்கின்றன" மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) (கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை) மற்றும் பிரிவு 25 (மத சுதந்திரத்திற்கான உரிமை) ஆகியவற்றின் கீழ் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். எஸ்.சி (SC), எஸ்.டி (ST), ஓ.பி.சி (OBC) மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு உயர்கல்விக்கான அணுகலை அதிகரிப்பதற்காக 2012 ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு (உயர் கல்வி நிறுவனங்களில் சமபங்கு உயர்வு) விதிமுறைகளை மீறுவதாகவும் அவர்கள் கூறினர்.

எவ்வாறாயினும், இந்த ஆடைக் கட்டுப்பாடு மதம் மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் என்று கல்லூரி நிர்வாகம் வாதிட்டது. மாணவர்களின் மதத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதே விதிகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்றும், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் பெண்களுக்கு ஹிஜாப் அல்லது நிகாப் அணிவது "அத்தியாவசியமான மத நடைமுறை அல்ல" என்று கூறிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 2022 தீர்ப்பை கருத்தில் கொண்டோம் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியது. இது உள் விவகாரம் என்றும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கான உரிமையின் ஒரு பகுதி என்றும் கல்லூரி கூறியது.

மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதிகள் அதுல் எஸ் சந்துர்கர் மற்றும் ராஜேஷ் எஸ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கல்லூரி வழங்கிய ஆடைக் கட்டுப்பாடு "கல்வி நலனே முக்கியம்" என்றும், "பிரிவு 19(1) (a) மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 25ன் விதிகளை மீறும் வகையில் இல்லை என்றும் கூறியது.”

"அதை வழங்குவதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்றால், ஒரு மாணவரின் உடை அவரது மதத்தை வெளிப்படுத்தக்கூடாது, இது மாணவர்கள் தங்கள் பெரிய ஆர்வமுள்ள அறிவு மற்றும் கல்வியைப் பெறுவதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு படியாகும்" என்று பெஞ்ச் கூறியது.

"ஹிஜாப் அல்லது நிகாப் அணிவது மனுதாரர்களின் இன்றியமையாத மதப் பழக்கம்" என்பதை நிராகரித்த பெஞ்ச், கான்சுல் இமான் மற்றும் சுனன் அபு தாவூத் (ஹதீஸ் கலெக்சன்) ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர கோரிக்கையை ஆதரிக்க வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. 

"ஜாதி, மதம், இனம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தும்" என்பதால், அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல்களை மீறவில்லை என்று பெஞ்ச் கூறியது. ஒரு மாணவன் தனக்கு விருப்பமான ஆடையைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி உரிமைகளுக்கும், அதன் வளாகத்தில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கான ஒரு நிறுவனத்திற்கும் இடையில், கல்லூரியின் 'பெரிய உரிமைகளுக்கு' எதிராக ஒரு நபர் தனது உரிமைகளைத் திணிக்க முயல முடியாது என்று பெஞ்ச் கூறியது.

“மாணவர்கள் தங்கள் கல்வித் தொழிலின் முன்னேற்றத்திற்கான தகுந்த அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு கல்வி நிறுவனத்திற்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதற்கான வலியுறுத்தல் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளது மற்றும் மனுதாரர்களின் தேர்வு மற்றும் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படாது,” என்று பெஞ்ச் கூறியது.

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புடன் உடன்பாடு

தீர்ப்பை எழுதிய நீதிபதி சந்துர்கர், 2022 ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் வெளிப்படுத்திய கருத்துக்கு "முழு உடன்பாடு" தெரிவித்தார், "ஆடைக் கட்டுப்பாட்டின் பரிந்துரையானது பள்ளி/கல்லூரியில் உள்ள மாணவர்களிடையே ஒரே சீரான தன்மையை அடைவதை நோக்கமாகக் கொண்டது, அதாவது ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் ஒருவரின் மதத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் ஆகும்," என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

"அனைத்து மாணவர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு அரசியலமைப்பு மதச்சார்பின்மைக்கு சேவை செய்வதற்காக அவர்களை ஒரே மாதிரியான வகுப்பாகக் கருதுவதாகும்" என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியது.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அக்டோபர் 2022 இல், இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது, அது இப்போது பெரிய பெஞ்சிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன் தொடரப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mumbai Hijab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment