சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அச்சங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளன. தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு முதல்முறையாக விலை உயந்துள்ளது. இது எப்படி நடந்தது, அது இந்தியாவ்ல் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
கச்சா எண்ணெய் விலை ஏன் அதிகரிக்கிறது?
மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி வசதிகொண்ட ராஸ் தனுரா, கடலில் இருந்து ஒரு ட்ரோனால் ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதிக்கு அருகில் தாக்கப்பட்டது என்று அறிவித்தது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், ஏற்கெனவே அக்டோபர் மாதத்திலிருந்து உயர்ந்து வரும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, அந்நாட்டின் கச்சா எண்ணெய் விநியோகங்களின் பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக பீப்பாய்க்கு 70.7 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் எவ்வாறு பாதிக்கிறது?
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 70 டாலருக்கு மேல் அதிகமாக இருந்தால், ஏற்கெனவே, உச்சபட்ச வாகன எரிபொருட்களின் விலையை எதிர்கொண்டிருக்கிற இந்திய நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மற்றொரு சுற்று விலை உயர்வை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலை உற்பத்திகளின் சர்வதேச விலை மற்றும் மாநில மற்றும் மத்திய வரிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயையும் டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 11 ரூபாயையும் உயர்த்தியுள்ளன. கச்சா எண்ணெய் விலை பிப்ரவரி மாத இறுதியில் ஒரு பீப்பாய்க்கு 40 டாலரில் இருந்து 66 டாலராக உயர்ந்ததன் விளைவாக இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியது.
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலையை 9 நாட்களாக அப்படியே வைத்திருக்கின்றன. இந்த ஆண்டில் 3 மாதங்களுக்குள் மிக அதிகமாக 26 முறை விலை உயர்வைக் கண்டது. கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டால், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மீண்டும் விலை உயர்வைத் தொடங்க வேண்டியிருக்கும்.
இந்தியா மற்ற நாடுகளுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?
உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் கச்சா எண்ணெய் விலை கோவிட்டுக்கு முந்தைய அளவுக்கு மீண்டு வருவதால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய நுகர்வோர் அதிக வரிகளின் சுமைகளையும் தாங்கி வருகின்றனர்.
கோவிட் -19 தொடர்பான பொதுமுடக்கத்தின்போது வருவாயை அதிகரிப்பதற்காக மத்திய அரசு 2020 ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.13 ஆகவும் டீசலுக்கு ரூ.16 ஆகவும் உயர்த்தியது. பல மாநிலங்களும் மாநில விற்பனை வரிகளை அதிகரித்தன.
ராஜஸ்தான், மேற்கு வங்கம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நுகர்வோர் மீது உயரும் விலையின் சுமையை குறைக்க மாநில வரிகளை குறைத்துள்ள நிலையில், இரு எரிபொருட்களின் கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. மத்திய மற்றும் மாநில வரிகள் தற்போது பெட்ரோலின் அடிப்படை விலையில் சுமார் 162 சதவீதமும், தேசிய தலைநகரில் டீசலின் அடிப்படை விலையில் 125 சதவீதமாக உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"