2015ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக அதிக மழைப் பொழிவுக்கு காரணம் என்ன?

ஆனால் 1976ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் அதிகமாக 45.2 செ.மீ மழை பதிவானது. 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அன்று 25 செ.மீ கனமழையும் , நவம்பர் 12ம் தேதி அன்று 33 செ.மீ மழையும் சென்னையில் பதிவானது.

Chennai rains

Arun Janardhanan

சனிக்கிழமை இரவு சென்னையில் பெய்த கனமழை காரணமாக 40க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிகம் நடைபெறும் இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக பெய்த கனமழை 2015ம் ஆண்டுக்கு பிறகு பெய்த அதீத கனமழையாக சனிக்கிழமை இரவு பெய்த கனமழை பதிவாகியுள்ளது.

ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழை

சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக தியாகராயநகர், வியாசர்பாடி, அடையாறு, வேளச்சேரி, ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. ஜவஹர்லால் நேரு நகர், மாதாவரம், தொண்டையார்பேட்டை சாலை, வடக்கு ட்ரங்க் ரோடு, ராயபுரம், தேனாம்பேட்டை, காதர் நவாஸ் கான் சாலை, வேளச்சேரியின் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னைப் புறநகர் பகுதிகளில் சோழிங்கநல்லூரின் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

சென்னை புழல் ஏரியில் இருந்து ஞாயிறு காலை 11 மணி அளவில் 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1.30 மணி அளவில் நீர் வெளியேற்றப்பட்டது. கரையின் இரு ஓரங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

2015ம் ஆண்டுக்கு பிறகு பதிவான அதீத கனமழை

சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம் மற்றும் புறநகரில் மீனம்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஞாயிறு காலை 08:30 மணி அளவில் முறையே 21.5 செ.மீ மற்றும் 11.3 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது.

2015ம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் பெய்த கனமழையின் ஒரு பகுதியாக சென்னையில் 24 மணி நேரத்தில் 24.6 செ.மீ கனமழை பதிவானது. இதற்கு முன்பு 2005ம் ஆண்டு 14.2 செ.மீ மழை 2005ம் ஆண்டு நவம்பரில் பதிவானது.

ஆனால் 1976ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் அதிகமாக 45.2 செ.மீ மழை பதிவானது. 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அன்று 25 செ.மீ கனமழையும் , நவம்பர் 12ம் தேதி அன்று 33 செ.மீ மழையும் சென்னையில் பதிவானது. அதனை தொடர்ந்து அதிகமாக மழை பதிவானது 2005ம் ஆண்டு தான்.

சென்னைக்கு மழையை தரும் வடகிழக்கு பருவமழை

சென்னையின் பருவமழை பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையால் தான் கிடைக்கிறது. அக்டோபர் மத்தியில் துவங்கும் கிழக்கு காற்று மூலம் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே இந்த மழை பெய்யும். பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 10 முதல் 20 தேதிகளில் துவங்கும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் முதன்மை பருவமழை என்றும் அழைக்கப்படுகிறது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையை மற்ற அனைத்து மாநிலங்களும் நம்பியிருக்கும் போது, தமிழகத்திற்கு தேவையான மழையை வடகிழக்கு பருவமழையே வழங்குகிறது. தென்மேற்கு பருவமழை, நீண்ட கோடைகாலத்திற்குப் பிறகு, நிலத்தடி நீர்மட்டத்தை பராமரிக்க தமிழகத்திற்கு உதவுகிறது. வடகிழக்கு பருவமழை நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது.

தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் வருடாந்திர மழையில் 60% மழையையும், உள் தமிழக மாவட்டங்கள் 40 முதல் 50% மழையையும் வடகிழக்கு பருவமழை மூலம் பெருகின்றன.

உருவான குறைந்த அழுத்த தாழ்வு நிலை

வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய தாழ்வு அழுத்த நிலை வட தமிழகத்தை நோக்கி வரும் என்றும் வருகின்ற நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ வரை மேல் காற்று சுழற்சி நிலவி வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதியில் நவம்பர் 9ம் தேதி அன்று புதிய தாழ்வு நிலை உருவாகும். அடுத்த 48 மணி நேரத்தில் அது வடக்கு தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி முதல் கடலில் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழகக் கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் காற்று வீசக்கூடும் என்றும் கணித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 10ம் தேதி அன்று இடியுடன் கூடிய மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why chennai received heaviest rainfall since 2015

Next Story
புயல்களுக்கு இப்படித்தான் பெயர் வைப்பார்களா ? அடுத்து உருவாக இருக்கும் 7 புயல்களுக்கு பெயர் தயார் !Cyclone Fani Name Fact Checking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com