முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவில் திருவள்ளுவர் வெள்ளை ஆடை அணிந்தவராகவும், ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர். இந்த பிரச்னை தமிழக அரசியல் தலைவர்கள் இடையே பிளவை ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. அது ஏன் என்பது இங்கே பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: Why the Tamil Nadu CM and Governor’s posts on Thiruvalluvar Day sparked a row, again
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி நிற உடையில் உள்ள திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்து ‘பாரத சனாதன பாரம்பரியத்தின் மதிப்பிற்குரிய கவிஞர், சிறந்த தத்துவஞானி மற்றும் பிரகாசமான துறவி’ என்று வர்ணித்தார்.
இதற்கு மாநிலத்தில் ஆளும் தி.மு.க. ஆளுநர் அலுவலகம் ‘காவிமயமாக்கல்’ முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியதால், இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்ட புகைப்படத்தில் திருவள்ளுவரின் நெற்றியிலும் மேல் கையிலும் திருநீர் பூசப்பட்டும், கழுத்தில் பூசை மணிகளும் கட்டப்பட்டிருப்பதைக் காட்டியது. இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மற்றொரு பதிவில், திருவள்ளுவரை வெள்ளை ஆடையில் சித்தரித்திருந்தார்.
ஆளுநரின் பதிவை விமர்சித்த தி.மு.க எம்.பி கனிமொழி, “திருக்குறளில் மத அடையாளங்கள் இல்லை, திருவள்ளுவர் மீது சனாதனம் அல்லது இந்துத்துவா அடையாளங்கள் அல்லது வேறு எந்த மதத்தையும் திணிக்க முடியாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குறள் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட, மனித நேயம் பேசும் ஒன்று.” எனறு கூறினார்.
திருவள்ளுவரின் பிரதிநிதித்துவப் பிரச்னையில் தமிழக அரசியல் தலைவர்கள் கட்சி ரீதியாக பிளவுபடுவது இது முதல் முறையல்ல. அது ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்.
திருவள்ளுவர் யார்?
திருவள்ளுவர் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பண்பாட்டு ஆளுமை. அவர் வாழ்ந்த காலத்தை சரியாகக் குறிப்பிடுவது எளிதல்ல, அவர் கிமு 5-ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்திருக்கலாம். தமிழர்களால் வள்ளுவர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது ‘திருக்குறள்’, 1,330 இரண்டடி குறள்களின் தொகுப்பாகும். திருக்குறள் ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் இன்றியமையாத பகுதியாக உள்ளது - அதே வழியில், பகவத் கீதை அல்லது ராமாயணம் பாரம்பரிய வட இந்திய இந்து வீடுகளில் இருக்கிறது.
திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழர்களால் பண்டைய துறவி, புலவர் மற்றும் தத்துவஞானி என்று போற்றப்படுகிறார். தமிழர்களின் பண்பாட்டு வேர்களைக் கண்டறிவதில் அவர் ஒரு இன்றியமையாத ஆணிவேர்; வார்த்தைக்கு வார்த்தை அவரது குறளைக் கற்றுக் கொள்ளவும், அன்றாட வாழ்க்கையில் அவருடைய போதனைகளைப் பின்பற்றவும் அவைகள் கற்பிக்கப்படுகின்றன.
2020-ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருவள்ளுவரை மேற்கோள் காட்டினார்:
“பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் அணி என்ப” இது நோயற்ற, செல்வம், நல்ல பயிர்கள், மகிழ்ச்சியுடன், பாதுகாப்பு இருக்கும் ஒரு நாட்டிற்கு தேவையான "ஐந்து அணிகள் என்று குறிப்பிடப்படுகிறது.
திருவள்ளுவரின் ஆடையின் நிறம் ஏன் முக்கியமானது?
திருள்ளுவரின் சித்தரிப்புகள், அவரது உடைகள் உட்பட, இந்த விஷயத்தில் வரலாற்று தகவல்கள் இல்லாத போதிலும், காலப்போக்கில் பல்வேறு அரசியல் குழுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பண்டைய தமிழ் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற ஓய்வுபெற்ற ஐஐடி பேராசிரியரான எஸ்.சுவாமிநாதன் முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: “திருவள்ளுவூர் வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் சிறிய ஆதாரங்களில் இருந்து, பல அறிஞர்கள் பெரும்பாலும் அவர் ஒரு ஜைனரோ அல்லது ஒரு இந்துவோ அல்லது திராவிடரோ அல்ல என்று முடிவு செய்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றிலோ அல்லது பண்டைய இலக்கியங்களிலோ எந்த ஒப்பீடும் இல்லாத அவரது அசாதாரண இலக்கியமான திருக்குறள் மட்டுமே நாம் கண்டறிய முடியும்.
வெள்ளை ஆடை அணிந்த திருவள்ளுவர் படம் என்று கூறப்படுவது சமீபகால கற்பனை. திருவள்ளுவரின் உருவமோ படமோ முன்பு இல்லை. திருக்குறளை இயற்றிய பண்டைய துறவி ஒருவரா அல்லது பல ஆண்டுகளாக பலரின் தொகுப்பா என்பது கூட நமக்குத் தெரியாது. இயேசுவைப் போலவே திருவள்ளுவரின் உருவத்தை அவர் இறந்து பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கினோம்.
கடவுளை நம்பாத திராவிட கட்சிகள் திருவள்ளுவரின் சித்தரிப்பில் இருந்து இந்து அடையாளங்களை நீக்கிவிட்டதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா 2019-ல் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். “ஒரிஜினல் திருவள்ளுவருக்கு விபூதி மற்றும் அனைத்து இந்து அடையாளங்களும் இருந்தன. திராவிடர் கழகமும், தி.மு.க-வும்தான் அவரது தோற்றத்தைத் தங்களின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டது” என்று கூறிய அவர், துறவியின் வரிகளும் வாழ்க்கையும் சனாதன தர்மத்தைப் போலவே இருப்பதாக வாதிட்டார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் பதிவு குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி கூறுகையில், திருவள்ளுவர் அல்லது திருக்குறள் குறித்த அடிப்படை புரிதல் இல்லாததையே இப்பதிவு பிரதிபலிக்கிறது என்றார்.“திருவள்ளுவரை துறவி என்று யாரும் சொல்லவில்லை, அவர் திருமணமானவர் என்ற கருத்தும் உள்ளது, இல்லற வாழ்க்கையைப் பற்றி அவரை விட அழகாகவும் கவிதையாகவும் எழுதியவர்கள் யாரும் இல்லை. திருக்குறளைப் படித்துப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்ற தமிழர்களாகிய நாம் அவரை ஒரு துறவியாகப் பார்த்ததில்லை” என்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.