மத்திய அரசு கோவிட்-19 நிவாரணத்தின் ஒரு பகுதியாக நாட்டில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்காக நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளை மாற்றப்போவதாக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். முதலில் மார்ச் 4-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மோசடி நடத்தை தொடர்பான விதிகள் தவிர, நிறுவனங்கள் சட்டத்தின் அனைத்து விதிகளிலிருந்தும் குற்றவியல் அபராதங்களை நீக்க 2018 முதல் அரசாங்கம் மேற்கொண்ட பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நகர்வு இருக்கும்.
முன்னர் கூட்டு குற்றங்களாக பல குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அதாவது சிறைத்தண்டனை அல்லது தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்ட குற்றங்களில் சிறைத்தண்டனை நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில குற்றங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளன. மற்றவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்களின் (என்.சி.எல்.டி) வரம்பிலிருந்து உள்ளக மத்தியஸ்த அமைப்பு நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஏன் இந்த மாற்றம்?
இந்த நடவடிக்கை 2018 முதல் வணிகத்தை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் பெரிய முயற்சிகளில் ஒரு பகுதியாகும். சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்ட குற்றங்களில் சி.எஸ்.ஆர் அறிக்கைகளை தாக்கல் செய்வதில் தாமதம் அல்லது என்.சி.எல்.டி.யின் உத்தரவுகளுக்கு இணங்க உறுப்பினர்களின் பதிவை சரிசெய்யத் தவறியது போன்ற நிர்வாக குற்றங்கள் அடங்கி உள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு முயற்சிதான் குற்றமற்றதாக்கும்(decriminalisation) நடவடிக்கை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) விதிகளை மீறுவது தொடர்பான நிறுவனச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தங்களை அறிமுகப்படுத்தி, மீறுபவரக்ளை சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியது. ஆனால், தொழில்துறையினரின் கருத்துகளுக்குப் பிறகு இந்த திருத்தம் செயல்படுத்தப்படவில்லை. நிறுவனங்கள் சட்டம் திருத்த மசோதா 2020, சி.எஸ்.ஆர் விதிகளிலிருந்து குற்றவியல் பொறுப்பை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.
“2014-ம் ஆண்டில் நிறுவனங்கள் சட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம் நல்ல இணக்கத்திற்காக இன்னும் நிறைய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், சிவில் மற்றும் கிரிமினல் அபராதங்களுடன் பல தண்டனை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன” என்று டெலோயிட் இந்தியாவின் பங்குதாரர் மது சூடான் கங்கனி கூறினார். அதனால், இணக்க நிலைகள் மேம்பட்டதோடு, வணிகத்தை எளிதாக்குவதற்கான அவசியத்தை அரசாங்கம் உணர்ந்ததால், அரசாங்கம் குற்றவியல் விதிகளை தளர்த்தத் தொடங்கியது.
மாற்றம் என்ன?
நிறுவனங்கள் சட்டம் 2018-ம் ஆண்டு திருத்தத்திற்கு முன்னர் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கூட்டு குற்றங்களின் எண்ணிக்கை 81 இருந்த நிலையில் அவை 31 ஆக குறைந்துள்ளது. இந்த குற்றங்கள் பல தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் மூலம் வழக்குத் தொடரப்பட வேண்டியதிலிருந்து நிறுவன பதிவாளரால் கையாளப்பட வேண்டும். இந்த குற்றங்களுக்கான அபராதங்களை தீர்மானிக்க நிறுவன பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. மேலும், நிறுவனங்கள் இந்த முடிவுகளுக்கு மேல்முறையீடு செய்ய அல்லது மாற்றங்களை கோர பெருநிறுவன விவகார அமைச்சகம் MCA) பிராந்திய இயக்குநரிடம் (RD) முறையிடலாம். இந்த நடவடிக்கை நொடித்து போனது. மேலும், பிற உயர் முன்னுரிமை விஷயங்களைக் கையாளும் வழக்குகளைச் சமாளிக்க என்சிஎல்டிகளின் அலைவரிசையை விடுவிக்க உதவியாக இருக்கும். உள்ளக மத்தியஸ்த அமைப்பு நடைமுறையில் கையாளப்பட வேண்டிய மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 2018-இல் 18 ஆக இருந்த நிலையில், சமீபத்திய முன்மொழியப்பட்ட திருத்தத்தில் 58 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
நிபுணர்களின் கூற்றுப்படி, நிறுவனங்களில் உள்ள விதிமுறைகளை குறிப்பாக தணிக்கையாளர்கள் தொடர்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முன்னணி தணிக்கை நிறுவனத்தில் உள்ள ஒரு தணிக்கையாளர் கூறுகையில், தணிக்கையாளர்களின் அலட்சியம் போன்ற பிரச்சினைகளுக்கான குற்றவியல் பொறுப்பை நீக்குவதை நோக்கி நகர்வதை கார்ப்பரேட் நிறுவனங்கள் விவகார அமைச்சகம் அறிவித்ததாகக் கூறினார்.
கம்பெனி சட்டக் குழுவானது தனது அறிக்கையில், தணிக்கை நிறுவனங்களை மறுதொடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்துவதற்கான விஷயத்தை எடுத்துக்கொள்வதாகக் கூறியது. இருப்பினும், கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தற்போது ஐ.எல் அண்ட் எஃப்எஸ் ஊழலில் பங்கெடுத்ததாகக் கூறப்படும் தணிக்கை நிறுவனங்களான டெலாய்ட் மற்றும் கே.பி.எம்.ஜி இணை நிறுவனமான பி.எஸ்.ஆர் & கோ நிறுவனங்களை தள்ளிவைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.