காங்கிரஸ் கட்சியின் கூட்டுத் தலைமைக்கு நிறுவன ரீதியான பொறிமுறையை (institutional mechanism) உருவாக்க வேண்டும் என்பதையே 23 காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதம் முன்மொழிந்தது. பொதுவாக, இதுபோன்ற கோரிக்கைகளை இத்தகைய அழுத்தத்துடன் 10 ஜன்பாத் இல்லத்தில் ஒலிப்பதில்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை, அதன் முதல் குடும்பம் புனிதமானது, அவர்கள் பரிந்துரைக்காத வரை கட்சியின் தலைமை பணிக்கு மற்றவர்கள் வருவது சிரமம் என்ற சிறு வாக்கியம் கூட கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று பொருள் கொள்ளப்படும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கன்சல்டிங் எடிட்டர் கூமி கபூர் தெரிவித்தார்.
பின், அனுபவமுள்ள அரசியல்வாதிகள் ஏன் இத்தகைய முடிவை எடுத்தனர்?
கட்சியின் எதிர்காலம் குறித்த உண்மையான அக்கறை இந்த அபாயகமரான அரசியல் நகர்வுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும், தாங்கள் பழைய காங்கிரஸ் ஒழுங்கின் (old order) மிச்ச சொச்சம் என்பதும், ராகுல் காந்தி முறையாக பொறுப்பேற்கும்போது சிறிய பங்களிப்புடன் செயல்படுவோம் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
"ஒரு விதத்தில் இந்த கடிதம், அவர் திட்டமிட்டிருந்ததை விட முன்னதாகவே தலைமை பதவிக்கு திரும்ப ராகுல் காந்தியை உந்தப்படுத்தலாம்" என்று கபூர் எழுதுகிறார். ராகுல் காந்தி இறுதியில் கட்சித் தலைவராக திரும்புவார் என்ற கருத்து காங்கிரஸ் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எப்போது திரும்புவார் என்பதுதான் இங்குள்ள ஒரே கேள்வி.
கட்சிப் பணிகளை மேற்கொள்ள, தனக்கு நிபந்தனையற்ற முழுசுதந்திரம் அளிக்கப்படும் என்ற உறுதிமொழிக்காக ராகுல் காந்தி தற்போது பின்வாங்கி கொண்டிருக்கிறார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
சோனியா காந்தியைப் போன்று, அனைத்து தரப்பினர் மத்தியிலும் படிப்படியாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது, அனுபவம் வாய்ந்த தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது போலல்லாமல், ராகுல் காந்தி மூத்த பழைய தலைவர்கள் மீத ஆழ்ந்த சந்தேகம் கொண்டவர். கொள்கை மற்றும் அடையாளத்தில் சமரசம் செய்து கொண்டவர்கள் என்றும், முந்தைய நிலையை பேணிக் காப்பவர்கள் என்றும் ராகுல் காந்தி கருதுகிறார்.
தற்போது வரை, ராகுல் காந்தி கட்சியின் பொறுப்பில் இருந்து வெளியேறியதாக தெரிவித்து வந்தாலும், கடந்த சில மாதங்களில் அனைத்து முக்கிய நியமனங்களும் அவரால் ஒப்புதல் வழங்கியுள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கள், காங்கிரசின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக கருதப்படுகின்றன என்று ஆசிரயர் தனது கட்டுரையில் தெரிவித்தார்.
"வெளிப்படைத் தன்மை ஏதுமின்றி, ராகுல் காந்தியின் கையில் இருந்த அதிகப்படியான அதிகாரத்துவம் தான், கடிதம் எழுதுவதற்கான உத்வேகத்தை உருவாக்கியது. இந்த கிளர்ச்சியாளர்களைப் போலவே, கட்சியில் அமைதியாக இருக்கும் பெரும்பான்மை காங்கிரஸ் உறுப்பினர்கள் நிபந்தனையற்ற முறையில் மீண்டும் ராகுல் காந்தி தலைவர் பணிக்கு வருவது குறித்து தயக்கம் காட்டி வருகின்றனர் என்று ஆசிரியர் தனது கட்டுரையில் எழுதினார்.
காங்கிரஸ் தலைவர்களின் தற்போதைய கிளர்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கப்படும். ஆனால் கூட்டுத் தலைமை தொடர்பாக கடிதத்தில் உள்ள பரிந்துரைகள், காங்கிரஸ் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் வெளிப்டையான விவாதங்கள் போன்ற கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுமா ?
இதுபோன்ற ஆலோசனைகளை தலைமை ஒதுக்கி வைக்குமாயின், 135 ஆண்டுகால கட்சி இருத்தலியல் நெருக்கடியை (existential crisis) நோக்கி நகர்கிறது என்றும், இந்த தேசம் தகுதியான எதிர்க்கட்சியை பெறாது என்றும் ஆசிரியர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil