Explained: கொரோனா பரிசோதனை; கவலை அளிக்கும் தவறான நெகட்டிவ் முடிவுகள்
கொரோனா நோயாளிகள் சிலருக்கு மீண்டும் மீண்டும் மறு பரிசோதனை செய்தவிதம் கவலை அளிப்பதாக உள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்த சில நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது முறை பரிசோதனையில் கொரோனா பாஸிட்டிவ் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா நோயாளிகள் சிலருக்கு மீண்டும் மீண்டும் மறு பரிசோதனை செய்தவிதம் கவலை அளிப்பதாக உள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்த சில நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது முறை பரிசோதனையில் கொரோனா பாஸிட்டிவ் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா நோயாளிகள் சிலருக்கு மீண்டும் மீண்டும் மறு பரிசோதனை செய்தவிதம் கவலை அளிப்பதாக உள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்த சில நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது முறை பரிசோதனையில் கொரோனா பாஸிட்டிவ் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisment
புனேவில், 60 வயதுக்கு மேலான பெண் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தது. அடுத்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் தொற்று நோயால் மோசமாக பாதிக்கப்பட்டு இறந்தார்.
இவை புதிய நோய்த்தொற்றுகளா? என்றால், முதலில் இந்த நோயாளிகள்தங்களை வைரஸிலிருந்து விடுபடவில்லை என்பதற்கான சாத்தியத்தை மருத்துவர்கள் மறுக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வைரஸ் காட்டப்படவில்லை. இது தவறான நெகட்டிவ் என்று அழைக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
கொரோனா வைரஸ் (கோவிட்-19) தவறான நெகட்டிவ் பரிசோதனை நடப்பது ஏன்?
எந்த ஒரு ஆய்வக பரிசோதனையும் 100% துல்லியமானது அல்ல என்று ஆண்ட்வெர்ப் டிரோபிகல் மருத்துவக் கழகத்தின் இயக்குனரும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் மார்க்-அலைன் விடோவ்ஸன் கூறினார். இவர் தவறான நெகட்டிவ் பரிசோதனைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
"மரபணு பொருளைக் கண்டறிவதன் அடிப்படையிலான சோதனைகள் மிகவும் நுட்பமானவை. ஆனால், ஆம் சில நேரங்களில் நெகட்டிவ்வாக இருக்கிறது” என்று டாக்டர் விட்டௌஸன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கு காரணம், “மாதிரி சரியாக எடுக்கப்படததால் இருக்கலாம் அல்லது சோதனை கருவி மோசமாக இயக்கப்பட்டிருக்கலாம் அல்லது நேரங்களில் வெறுமனே வைரஸ் வெவ்வேறு அளவுகளில் சிந்தக்கூடும். மேலும், மாதிரி எடுக்கும்போது மூக்கில் இல்லாதிருந்திருக்கலாம். நோய்த்தொற்று நுரையீரலில் இருந்தால் மூக்கில் எடுக்கப்படும் மாதிரியால் கண்டறிய முடியாது. பாஸிட்டிவ் பரிசோதனை இருந்த பின் நெகட்டிவ் உறுதிப்படுத்துவதற்கு 24 மணி நேர இடைவெளிவிட்டு 2 நெகட்டிவ் மாதிரிகளைக் கொண்டிருக்க வேண்டும்." என்று விட்டௌசன் கூறினார்.
டாக்டர் விட்டௌசன் 2003-ம் ஆண்டில் சார்ஸ் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வில், சுவாசகுழாய் மாதிரியில் நெகட்டிவ்வாக இருக்கலாம், ஆனால் மலத்தில் பாஸிட்டிவ்வாக இருக்கும். எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வைரஸ் மூக்கில் இல்லாவிட்டாலும் கூட உடலில் இருக்கலாம் என்று தெரியவந்தது.
யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஹார்லன் எம் குரூம்ஹோல்ஸ் தி நியூயார்க் டைம்ஸில் ஒரு கருத்தை எழுதினார். அதில், ஆரம்பத்தில் எடுக்கப்படும் மாதிரி எப்போதும் ஒரு துல்லியமான சோதனையை வழங்க போதுமான மரபணு பொருட்களை சேகரிக்காது. பரிசோதனையின் போது பல அறிகுறிகளைக் காட்டாத நோயாளிகளுக்கு இந்த சிக்கல் அடிக்கடி எழக்கூடும்.
தொற்று நோய்களைத் தடுப்பது குறித்து மகாராஷ்டிரா மாநில தொழில்நுட்பக் குழுவின் தலைவர் டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறுகையில், இதில் இன்னும் பாடம் படிப்பதற்கான அறிகுறியாகும் என்று கூறுகிறார்.
எச்சரிக்கை தேவை
மருத்துவ அமைப்பில் தவறான நெகட்டிவ் முடிவுகள் வீதத்தில் வரையறுக்கப்பட்ட பொது தரவுகளுடன், பாதுகாக்கப்பட்ட முறையில், நாம் ஒவ்வொரு பரிசோதனை முடிவுகளையும் நெகட்டிவ்வாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் சலுங்கே கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news