கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகையில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்?

India Covid-19 numbers: மே மாத தொடக்கத்தில் இருந்து கோவிட்-19 காரணமாக 66,866 பேர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொற்றுநோய் காலத்தில் மிக கொடுமையான மாதமாக அமைந்துள்ளது.

India coronavirus numbers, India Covid-19 numbers, why covid 19 deaths spike, இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணங்கள் அதிகரிப்பது ஏன், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கொரோனா இறப்புகள், கோவிட் 19, coroavirus caseload, india, tamil nadu, maharashtra, uttar pradesh, coronavirus news

India coronavirus numbers explained: இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை ஒரு புதிய உச்சத்தை தொட்டது. நாடு முழுவதும் இருந்து 4,329 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மே 11ம் தேதி ஒரு வாரத்திற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட 4,205 இறப்புகளின் எண்ணிக்கையைத் தாண்டியது.

தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து 12 நாட்கள் ஆகின்றன. அதன் பின்னர் தொற்றுகள் குறைந்து வருகின்றன. இறப்பு எண்ணிக்கை வழக்கமாக இரண்டு வார பின்னடைவைக் கொண்டிருப்பதால், இறப்பு எண்ணிக்கையும் சில நாட்களில் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஏனென்றால், சில மாநிலங்கள் சில நாட்களில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த இறப்புகளை நிறைய மாநிலங்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, மகாராஷ்டிரா திங்கள்கிழமை 1,019 க்கும் மேற்பட்ட இறப்புகளை பதிவு செய்தது. இவற்றில் 289 உயிரிழப்புகள் சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை இடையே நடந்தன. அதற்கு முந்தைய வாரத்தில் 227 உயிரிழப்புகளும், ஒரு வாரத்திற்கு முன்னர் மேலும் 484 உயிரிழப்புகள்ம் நடந்தன. ஆனால், அவை இதுவரை அந்த மாநிலத்தில் சேர்க்கப்படவில்லை. கோவிட் 19 நோயாளிகளிடையே 19 உயிரிழப்புகள் பிற நோய்களால் ஏற்பட்டதாக கணக்கிட்டது.

பிற மாநிலங்களும் இதற்கு முந்தைய நாட்களில் உயிரிழந்ததைத் தெரிவித்தன. உயிரிழப்புகளைப் புகாரளிப்பதில் நிர்வாக ரீதியான பின்னடைவு உள்ளது. இது சில நேரங்களில் பல வாரங்கள் வரை நீடிக்கும். உதாரணமாக, கர்நாடகாவால் அறிவிக்கப்பட்ட 476 இறப்புகள் மார்ச் மாதத்தில் நிகழ்ந்தவை. இவற்றில் பல ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டவை.

தற்போது, ​​மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள் தினமும் சராசரியாக 300 இறப்புகளைப் பதிவு வருகிறது. உத்தரகண்ட் போன்ற ஒப்பீட்டளவில் சிறிய மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 223 பேர் இறந்தனர். ஆனால், அவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள் அதற்கு முந்தைய நாட்களிலில் உயிரிழந்தவர்கள். 12 மாநிலங்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.

இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து, கோவிட் -19 காரணமாக 66,866 பேர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொற்றுநோய் காலத்தின் மிகக் கொடுமையான மாதமாகும். தொற்றுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஏப்ரல் இந்தியாவுக்கு மிக மோசமான மாதமாக இருந்தது. அந்த மாதத்தில் 70 லட்சம் தொற்றுகள் கண்டறியப்பட்டன. ஆனால், உயிரிழப்புகளில் அதன் தாக்கம் இப்போதுதான் உணரப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில், 49,000 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவின் இறப்பு எண்ணிக்கை 85,000க்கு அருகில் உள்ளது. இது வேறு எந்த மாநிலத்தையும்விட மிக அதிகம். அண்டை மாநிலமான கோவாதான் உயிரிழப்பு விகிதத்தில் அதிகபட்ச இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. கோவாவில் இதுவரை ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 1,475 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 1,000க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்ட இரண்டு மாநிலங்கள் இவைதான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why covid 19 deaths are spike in india while caseload going down

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com