பஞ்சாப் அட்வகேட் ஜெனரலாக தியோல் நியமனம் சர்ச்சை ஆவது ஏன்?

நான்கு மூத்த காவல்துறை அதிகாரிகள் சைனி மீது வைத்த புகாரை புறக்கணித்து ஏன் அகாலி ஆட்சியின் போது அவர் டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டார் என்று கில் கேள்வி எழுப்பியிருந்தார்.

Deol appointment as Punjab Advocate General

Deol appointment as Punjab Advocate General : அமர் ப்ரீத் சிங் தியோல் பஞ்சாப் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் பார்வையில் காங்கிரஸ் கட்சியை காயப்படுத்தக் கூடும் என்ற சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. பஞ்சாப் முன்னாள் டிஜிபி சுமேத் சைனி மற்றும் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஜி பரம்ராஜ் சிங் உமரனங்கல் ஆகியோருடன் தொடர்புடையவர் தியோல்.

அமரிந்தர் சிங்கின் அரசு 2015ம் ஆண்டு காவல்துறையின் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் முக்கிய முடிவெடுக்க தவறிவிட்டது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் நெருக்கடியில் இருந்த போது தியோல், சைனிக்கு ஆதரவாக இம்மாத ஆரம்பத்தில் ஊழல் புகார் ஒன்றில் வாதாடினார். இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சைனி மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. சைனி, தியோலின் உதவியுடன் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் இருந்து முன் ஜாமீன் பெற்றார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் மட்டும் அல்ல சைனி மற்றும் உமரனங்கல் ஆகியோர் தொடர்புடைய 2015ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு வழக்கிலும் தியோல் அவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். , அவை மீண்டும் மாநிலத்தில் நடந்த தியாக சம்பவங்கள் தொடர்பான மிகவும் சென்சிட்டிவான வழக்குகள் ஆகும்.

ஒரு காலத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்ட சக்திவாய்ந்த அதிகாரிகள்

சைனி மற்றும் உமரனங்கல் எஸ்.ஏ.டி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின் போது மிகவும் சக்தி வாய்ந்த அதிகாரிகளாக இருந்தனர். மிலிடன்சி காலங்களில் இருவரும் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டனர். 2015 கோடக்புரா மற்றும் பெஹ்பால் காலன் போலீஸ் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் அரங்கேறும் வரை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் இருவருக்கும் அனைத்தும் சரியாகவே சென்று கொண்டிருந்தது.

சைனி மற்றும் உமரனங்கல் எவ்வாறு அரசியல் ரீதியாக தீண்டாதவர்களாக மாறினார்கள்?

நீதிபதி ரஞ்சித் சிங் ஆணையம் காலான் துப்பாக்கிச்சுடுதல் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி 2018 அன்று பஞ்சாப் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் திர்பாத் ரஜிந்தர் சிங் பஜ்வா என்ற அமைச்சர் பஞ்சாபிகள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு முகலாயர்களை விட சைனி மோசமாக இருப்பதாக கூறினார். “நான் சைனியின் பெயரைச் சொன்னால், சமூகத்தின் ஒரு பகுதி நமக்கு எதிராக மாறும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. நான் அந்த பிரிவை வருத்தப்படுத்தக்கூடாது. எனக்கு அப்படி ஒரு ஆலோசனையை வழங்கியவர்களிடம் நான் கேட்கின்றேன், சைனி மோட்டர் வழக்கில் காணாமல் போன வினோத் குமார் மற்றும் அசோக் குமார் ஆகியோர் யார்?

லூதியானாவின் கோட்வாலி காவல் நிலையத்தில் , காவலர்களின் பாதுகாப்பில் இருந்த வினோத் குமார், அவருடைய மைத்துனர் அசோக் குமார், ஓட்டுநர் முக்தியார் சிங் ஆகியோர் காணாமல் போனார்கள். 1994ம் ஆண்டு பிப்ரவரி 23 முதல் மார்ச் 3ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்களின் உடல்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபி சுமேத் சிங் சைனி. அப்போது அவர் லூதியானாவின் எஸ்.எஸ்.பி.யாக பணியாற்றினார்.

சீக்கிய கலவரத்தின் போது முக்கிய பொறுப்பில் இருந்த சைனி போன்ற அதிகாரிகள் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க ஆதரிப்பது ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை பாதிக்கும் என்று தன்னுடைய சொந்த கட்சி உள்ளிட்ட, சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளையும் நோக்கி பாஜ்வா ஒரு அரசியல் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்மிந்தர் சிங் கில் முகநூலில் ஒரு நீண்ட பதிவில், 1992ம் ஆண்டு பஞ்சாபில் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பியாந்த் சிங் இருந்த போது, ஆகஸ்ட் மாதம், நள்ளிரவில் மொஹாலியில் உள்ள அவரது வீட்டில் சுமேத் சைனி நடத்திய சோதனையின் போது தனது 73 வயது மாமா எவ்வாறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார் என்று விளக்கினார்.

நான்கு மூத்த காவல்துறை அதிகாரிகள் சைனி மீது வைத்த புகாரை புறக்கணித்து ஏன் அகாலி ஆட்சியின் போது அவர் டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டார் என்று கில் கேள்வி எழுப்பியிருந்தார்.

உமரனங்கலுக்கு ஆதரவாகா ஆஜரான வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டது எப்போது?

2020ம் ஆண்டு குருத்வாரா நீதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட சத்னம் சிங் கலேர் சைனிக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கில் அவருக்காக ஆஜரானதற்காக சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டார். 2017 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, எஸ்ஏடி சைனி போன்ற அதிகாரிகளிடம் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள முயன்றது. அதன் ஆட்சியில் சுமேத் சைனியை பஞ்சாப் டிஜிபியாக நியமித்தது தவறு என்று கூட அது பதிவு செய்தது.

ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்கக் கோவிலின் சமூக சமையலறையில் காணிக்கை அளித்த உமரனங்கல்லை கௌரவித்த அதிகாரிகள் மீது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why deol appointment as punjab advocate general has raised eyebrows

Next Story
விவசாயிகள் போராட்டம்: 10 மாதம் கடந்தும் வீரியம் குறையாதது ஏன்?Farmers protest Bharat Bandh agitation Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X