Anjali Marar
Why did cyclones give October a miss : அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல்கள் உருவாக ஏதுவான காலம். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு புயல் கூட உருவாகவில்லை.
ஆண்டுக்கு 80 வரையில் உலகெங்கும் புயல்கள் உருவாகும். வடக்கு இந்திய பெருங்கடல் என்று அழைக்கப்படும் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் 5 புயல்கள் ஏற்படும். இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகள் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் புயல்களால் பாதிப்பிற்கு ஆளாகும் பகுதி. மழை, புயல் காற்று ஆகியவை மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் எப்போதும் ஏற்படும் நிகழ்வாக உள்ளது. வடக்கு இந்திய பெருங்க்டலில் ஏற்படும் புயலானது பை-மோடல் வகையை சேர்ந்தவை. அதாவது இரண்டு காலங்களில் ஏற்படும் ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலும் (பருவமழைக்கு முந்திய காலம்) அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் (பருவமழைக்கு பிந்திய காலம்). இதில் மே மற்றும் நவம்பர் மாதம் புயல்கள் உருவாக ஏற்ற காலமாக உள்ளது.
குறைந்த அழுத்தம், காற்றுழுத்த தாழ்வு மண்டலம், 31 முதல் 61 கி.மீ வேகத்தில் கடலிலும், நிலத்திலும் வீசம் புயற்காற்று அக்டோபர் மாதத்தில் மிகவும் பொதுவானவை. பெருங்கடல் இடையூறுகள் தெற்கு சீன கடலில் இருந்து வங்க கடலுக்குள் நுழைகிறது பின்பு அது இந்திய பெருங்கடலை நோக்கி நகர்கிறது. பொதுவாக, அக்டோபரில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல் இடையூறுகள் சாதாரணமானவை என்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். ஆனால் இந்த வருடம் புயலை உருவாக்க தீவிரமான சூழல் ஏதும் நிலவவில்லை. இருப்பினும் மூன்று புயல் இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றில் இரண்டு ஆந்திரா, தெலுங்கானா, வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவில் பரவலான மழைக்கு வழி வகுத்தது.
To read this article in English
1891ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டு வரை அக்டோபர் மாதங்களில் இதுவரை 42 முறைகள் புயல் உருவாகவில்லை. கடந்த 130 வருடங்களில் 1950 முதல் 1954 ஆண்டுகள் வரையில் அக்டோபர் மாதத்தில் புயல்கள் உருவாகியது இல்லை என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் பூமத்திய ரேகை பசுபிக் பெருங்கடலில் லா நினா பலவீனமாக இருப்பதன் காரணமாகவே புயல்கள் ஏற்படவில்லை என்று கூறுகிறது. லா நினா சராசரி கடல் மேற்பரப்பின் வெப்பநிலையை விட வெப்பம் குறைவாக இருப்பதாகும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த சூழல் நிலவுகிறது. மேடன் ஜூலியன் ஆஸிலேசன் சாதகமான சூழலில் இருப்பதால், குறைந்த அழுத்தம் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. எம்.ஜே.ஒ என்பது கிழக்காக நகரம் வானிலை சுழற்சி நிகழ்வாகும். இது மழை, காற்று, கடற்மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் மேகத்திரள்களை பாதிக்கும். இதன் சுழற்சி 30 முதல் 60 நாட்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வெவ்வேறு வளிமண்டல மட்டங்களுக்கு இடையே கடந்த மாதம் காற்று மிகவும் அதிகமாக வீசியது. அதிக மற்றும் குறைந்த வளிமண்டல மட்டங்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க காற்றின் வேக வேறுபாட்டின் காரணமாக உருவாக்கப்பட்ட செங்குத்து காற்று வெட்டு – குறைந்த காற்று அழுத்தம் புயலாக மாறுவதை தடுத்தது.
புயல்கள் உருவாக சாதகமாக இருக்கும் மாதங்களில் மிகவும் முக்கியமானது நவம்பர் ஆகும். தற்போது இந்திய வானிலை ஆய்வு நிலையம், இரண்டு கடல்களிலும் புயல்கள் ஏதும் உருவாகவில்லை என்று கூறியுள்ளனர். கூடுதலாக எம்.ஜே.ஓ. தற்போது தான் வடக்கு இந்திய பெருங்கடலை கடந்து கிழக்கு பக்கமாக சென்றது. எனவே இந்த மாதத்திலும் புயல்கள் உருவாக சாதகமான சூழல் ஏதும் ஏற்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Why did cyclones give october a miss