பாஜக.வில் குஷ்பு: யாருக்கு லாபம்?

நடிகை குஷ்பு ட்விட்டரில், குறிப்பாக பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்களுக்கு எதிராக கடுமையாக போராடி வந்த நிலையில், அவரை பாஜகவுக்குள் செல்ல வைத்தது எது?

Khushbu Sundar, kushboo joins bjp, Khushbu Sundar joins BJP, குஷ்பு பாஜகவில் இணைந்தார், குஷ்பு, குஷ்பு சுந்தர், காங்கிரஸ், பாஜக, BJP Khushbu Sundar, Khushbu Sundar Congress BJP, BJP Khushbu Sundar, Express Explained,

காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக ஊடகங்களில் உரத்து குரல் கொடுத்துவந்த தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பு திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தார். குஷ்பு இதற்கு முன்பு, குறிப்பாக பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்களுக்கு எதிராக ட்விட்டரில் அவர் சோர்வில்லாமல் வைத்த விமர்சனங்களை பார்க்கும்போது அவர் பாஜகவில் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அவர் ஒவ்வொரு ‘எதிரிக்கும்’ தனித்தனியாக பதிலளிப்பார். அவர் தனது மோசமான ட்வீட்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பெயர் குறிபிட்டு ட்வீட் செய்தார். அவரைப் பற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “அவர் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியின் ஒரு அசாத்தியமான போராளி. அவர் ஒரு நட்சத்திர பிரச்சாரகர், ஒரு உண்மையான கூட்டத்தை இழுப்பவர் மற்றும் பொது கூட்டங்களிலும் தேர்தலின்போதும் சக்திவாய்ந்த சொற்பொழிவாளர்” என்று கூறினார்.

யார் இந்த குஷ்பு?

இவர் மும்பையில் மேற்கு அந்தேரியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் ஒரு கடின உழைப்பாளி, பகுத்தறிவாளர். அவர் தன்னை ஒரு நாத்திகர் என்று அழைத்துக்கொண்டாலும் அவர் கடவுள் நம்பிக்கை அல்லது தெய்வ நம்பிக்கைகளுக்கு எதிராக எந்தவிதமான கடும் செயலையும் வெளிப்படுத்தவில்லை. குஷ்புவின் நண்பரான நடிகர் ஒருவர் அவரைப் பற்றி நகைச்சுவையாக, ‘அவருடைய பிரச்சினை என்னவென்றால், அவர் எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு வேலைக்காரி’ என்று கூறினார்.

மேலும் அவர், “அவர் தனது கருத்தியல் சார்ந்த வாதங்களில் எளிமையாக இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய வேலையில் ரொம்ப தீவிரமாக இருந்தார். அவருக்கு காங்கிரஸ் ஒரு நல்ல இடமாக இருந்தது. திமுககூட அவருக்கு ஏற்ற இடமல்ல. ஆனால், அக்கட்சி அவரை தோல்வியடையச் செய்தது. அவர் பாஜக தனக்கு துடிப்பான வேலைகளை வழங்கலாம் என்று அவர் நம்பலாம். நேற்றுவரை அவருடைய நம்பிக்கைகள், கருத்துகள் வேறுபட்டு இருந்தடு. ஆனால், அவருக்கு ஒரு நல்ல தளம் அவசியமாக இருந்தது” என்று கூறினார்.

நடிகை குஷ்பு பிரபலமானவராக இருந்தாலும் அவரை அரசியல்வாதியாக மாற்றியது எது?

நடிகை குஷ்பு தமிழ்நாட்டில் பிரபலமாக அறியப்பட்டவர். ஒரு அரசியல்வாதியாக மாற விரும்பிய குஷ்பு அவர் ஒருபோதும் ஒரு சாதாரணை அரசியலற்ற பிரபலமாக இருந்ததில்லை. அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு, திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்த தனது கருத்துக்களுக்காக ஒரு தமிழ் பத்திரிகை நேர்காணலில் – 2005ல் – ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். “திருமணத்தின்போது, பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து நம் சமூகம் வெளியே வர வேண்டும்…” என்ற குஷ்புவின் கருத்து சர்ச்சைக்கு வழிவகுத்தது. இதனால், அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2010ம் ஆண்டின் முற்பகுதியில் உச்ச நீதிமன்றத்தால் 2 டஜன் வழக்குகளுக்கு அவர் தீர்வு காணும் வரை, அந்த வழக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கு அவருக்கு சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனது.

குஷ்பு திமுகவில் சேர்ந்தபோது, மறைந்த கருணாநிதி, குஷ்பு திரைப்படங்களில் முற்போக்கான பார்வைகளுக்கு பெயர் பெற்றவர் என்று கூறினார். சமூக சீர்திருத்தவாதியான பெரியார் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மையாக நடித்தவராகவும் குஷ்பு கொண்டாடப்பட்டார்.

கருணாநிதியின் மகனும் தற்போதைய திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினால் அவர் ஓரங்கட்டப்பட்டதால், குஷ்பு திமுகவிலிருந்து ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்தது வெற்றிகரமானதாக அமைந்தது. அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவர் பதவியில் இருந்து விலகும் வரை, குஷ்புவின் அரசியல் திறமைகளை 2 ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்திக்கொண்டார். . 2014 மக்களவைத் தேர்தல் மற்றும் மே 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நட்சத்திர பிரச்சார பேச்சாளராக இருந்தார். தென் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக அவர் செய்த வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு மூத்த திமுக தலைவர்கள் கூட அவரை வாழ்த்தியிருந்தனர்.

இப்போது பயனடையப் போவது யார் குஷ்புவா அல்லது பா.ஜ.க.வா?

குஷ்பு அவர் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், அவர் தனது அரசியல் வழ்க்கையில் ஓப்பீட்டளவில் அதிர்ஷ்டமில்லாதவராக இருந்தார். அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக தலைவரும் அப்போது முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி முன்னிலையில் சென்னையில் திமுகவில் இணைந்தார். இதுதான் அவரது முதல் அரசியல் பிரவேசம். 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான பெண் நடிகர்களில் ஒருவரான அவர், மிகவும் பிஸியான திரைப்பட வாழ்க்கைக்குப் பிறகு அவர் அரசியல் உலகில் பெற்ற முதல் அங்கீகாரம் இது. ஒரு காலத்தில் நடிகை குஷ்புக்காக ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர், 2014-ல் அவர் திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சி ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கிய காலகட்டம் என்பதால் அவருடைய வருகை பலரால் பாராட்டப்பட்டது. அந்த நேரத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் தேசியக் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

இருப்பினும், அவர் திமுகவை விட்டு வெளியேறியபோது இருந்த காரணங்கள் போல, இப்போது காங்கிரசுக்கும் அதே போன்ற காரணங்கள் இருந்தன. அவர் ஒரு பிரபலமாக மாறிய அரசியல்வாதியைவிட அதிக பிரபலமாக இருந்தபோதிலும், அவர் இரு கட்சிகளின் சக்திவாய்ந்த தலைவர்களால் ஓரங்கட்டப்பட்டார். வழக்கமாக நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அரசியல்வாதிகளிடமிருந்து, அவர் பொது கூட்ட பேச்சுகள், அரசியல் மதிப்பீட்டு பேச்சுகள், அவரது அரசியல் மொழி, பேச்சுத்திறன் எதுவானாலும் அதில், குஷ்பு எப்போதும் வித்தியாசமாக இருந்தார். மேலும், அவர் காட்டிய முதிர்ச்சி ஒரு அரசியல்வாதியின் வயதைத் தாண்டியிருந்தது.

காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஒரு குழப்பமான ஜனநாயகத்தை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகளிலிருந்து அவருடைய கருத்து சற்று வேறுப்பட்டு இருந்தாலும் கூட, அவருடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த காங்கிரஸ் அவருக்கு இடமளித்தது. ஆனால், திமுகவில் அவருடைய அரசியல் வாழ்க்கையைத் தோல்வியடையச் செய்த பல காரணங்களில் ஒன்று அவரது அரசியல் கருத்துகள் என்று கூறப்படுகிறது. கருணாநிதியின் வாரிசு பற்றி அவரிடமிருந்து வெளிப்பட்ட கருத்து மு.க.ஸ்டாலினுக்கு எரிச்சலூட்டியது உள்பட அவருடைய அரசியல் கருத்துகள் கூறப்படுகிறது.

குஷ்புவின் நண்பர் ஒருவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியைப் போல இல்லாமல், திமுக, பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகளைப் போல, தலைவர்களும் தொண்டர்களும் கட்சி எல்லைக்கு அப்பால் செல்வதைத் தடுக்கும் கடுமையான ஒழுக்க விதிகளைக் கொண்டுள்ளன. பாஜகவுடனான அவரது முந்தைய கருத்து வேறுபாடுகளை இப்போது தீர்க்க முடிந்தாலும், குஷ்புவின் உண்மையான இயல்பான எதிர்வினைகள் அவரை பாஜகவில் மேலும் பாதிக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.

தமிழக பாஜாவின் மூத்த தலைவர் ஒருவர், குஷ்புவின் முடிவைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தெரியாது. அவர் தான் தமிழ்நாட்டில் பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகராகப் போகிறேன் என்று கூறினார். “அவருக்கு வெற்றிபெறக்கூடிய எம்.எல்.ஏ சீட் அளிக்கப்பட்டு எம்.எல்.ஏ-வாக்கப்படுவார். அல்லது நேரம் வரும்போது அவரை மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஆக்கப்படுவார்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why did khushbu sundar join bjp from congress

Next Story
இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன?What is Blue Flag certification, awarded to 8 Indian beaches
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com