இந்திய ரயில்வேயில் நீக்கப்பட்ட 72,000 பணியிடங்களை சேர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, கேரள எம்.பி. சிவதாசன் கடிதம் எழுதியுள்ளார். எந்த பணியிடங்கள் ரயில்வேயிலிருந்து நீக்கப்பட்டன? ரயில்வேயின் முடிவுக்கு என்ன காரணம்?
அதிக பணியிடங்கள்
1.4 மில்லியன் மக்கள் பணிபுரியும் நாட்டின் மிகப்பெரிய வேலை வழங்குனராக இந்திய ரயில்வே உள்ளது. பல ஆட்சேர்ப்பு இயக்ககங்களுடனும் விண்ணப்பங்களை ஈர்க்கிறது. 2019 ஆம் ஆண்டில், விளம்பரப்படுத்தப்பட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்களுக்கு சுமார் 2.4 கோடி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தாண்டு ஜனவரியில், உ.பி., பீகாரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வேலை ஆர்வலர்கள், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான வகைகளுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, பல நாட்களாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பணி வகைகள்
ரயில்வே குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என நான்கு பிரிவிகளில் ஆட்களை எடுக்கின்றனர். விளையாட்டு, கலாச்சார மற்றும் பிற ஒதுக்கீடுகள் மூலமாகவும் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப் சி பதவிகள் என்பது தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற கேடர் பதவிகளாகும், இதில் எழுத்தர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், டிக்கெட் சேகரிப்பாளர்கள் போன்றவர்கள் உள்ளனர்.
குரூப் டி பதவிகளில் பியூன்கள், உதவியாளர்கள், சஃபாய்வால்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அடங்கும்.
நீக்கப்பட்ட பணியிடங்கள்
ஒழிக்கப்பட்ட அனைத்து பணியிடங்களும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு சார்ந்தவை ஆகும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த பணியிடங்கள் தேவையற்றுப்போய்விட்டன என சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த பணியிடங்களில் நியமனங்கள் இருக்காது. தற்போது பணியில் இருப்பவர்களும் ரெயில்வேயின் பிற பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது.
16 மண்டல ரெயில்வே 2015-16 முதல் 2020-21 வரையிலான நிதி ஆண்டுகளில் 56 ஆயிரத்து 888 அத்தியாவசியமற்ற பணியிடங்களை சரண் செய்து ஒப்படைத்துள்ளளன. மேலும்,15,495 பணியிடங்கள் விரைவில் நீக்கப்படவுள்ளது.
வடக்கு ரயில்வேயில் 9,000 க்கும் மேற்பட்ட பதவிகளும், தெற்கு ரயில்வேயில் 7,524 பதவிகளும், கிழக்கு ரயில்வேயில் 5700 பதவிகளும், தெற்கு கிழக்கு ரயில்வேயில் 4,677 பதவிகளும் வேண்டாம் என ஒழிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே நிதி
ரயில்வேயின் மதிப்பிடப்பட்ட வருவாய் செலவினத்தில் 70% அதிகாரிகள், ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்துக்காக செலவிட்டு வந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில், ரயில்வே மறுசீரமைப்பதற்கான குழு, ஊழியர்களுக்கான நிறுவனத்தின் செலவினம் மிக அதிகமாகவும், நிர்வகிக்க முடியாததாகவும் இருப்பதாக கூறியது. ஊழியர்களுக்கான செலவு காரணமாக, ரயில்வே வளர்ச்சி திறன் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. ரயிலில் பயணிப்போரால் கிடைக்கும் வருவாய் பெரிய பங்கு வகிக்கவில்லை என்றாலும், கடந்த நிதியாண்டில் அதன் சரக்கு வருவாய் 24% க்கும் அதிகமாக பதிவு செய்வதை அதிகரிக்க முயற்சி செய்கிறது.
CAG தனது டிசம்பர், 2021 ரயில்வேயின் நிதி அறிக்கையில், மொத்த பட்ஜெட் மற்றும் கூடுதல் பட்ஜெட்க்காக சார்ந்திருப்பதைக் குறைக்க அதன் உள் வளங்களை அதிகரிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil