Advertisment

நாம் ஏன் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடுகிறோம்?

ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர்தான் கி.மு முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் காலண்டரை சீர்திருத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
happy new year 2021, happy new year, happy new year, happy new year 2021 wishes, January 1, happy new year 2021 images, புத்தாண்டு, நியூ இயர், ஜனவரி 1, புத்தாண்டு கொண்டாட்டம், நாம் ஏன் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டைக் கொண்டாடுகிறோம், new year 2021, new year 2021 images, new year 2021 wishes, January 1, why january 1 is new year, history of january1,new year 2021, new year 2021, new year 2021 wishes

கி.மு 45-ல் தான் முதன்முதலில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டின் தொடக்கமாக கருதப்பட்டது. அதற்கு முந்தைய ரோமானிய நாட்காட்டிப்படி, புத்தாண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி 355 நாட்களைக் கொண்டிருந்தது. கூடுதலாக, 27 நாட்கள் அல்லது 28 நாட்கள் இடைக்கால மாதம் என சில நேரங்களில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் இடையே செருகப்படும்.

Advertisment

ரோமானிய சர்வாதிகாரி ஜூலியஸ் சீசர் தான் கி.மு முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் காலண்டரை சீர்திருத்தினார். ஆனால், ஜூலியன் நாட்காட்டி பிரபலமடைந்தாலும், ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் கிபி 16-ம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்தவத்தின் வருகையுடன், ஜனவரி 1 புத்தாண்டின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டது. அதே சமயம், டிசம்பர் 25-ம் தேதி வரும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய மத கருத்துகளைக் கொண்டு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கருதப்பட்டது.

ஜூலியஸ் சீசரின் தரப்பில் தவறான கணக்கீடு பிரச்சினையும் இருந்தது. இதன் காரணமாக புத்தாண்டு நாள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தது. போப் கிரிகோரி ஜூலியன் நாட்காட்டியை சீர்திருத்தி, ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக தரப்படுத்திய பிறகுதான், அது மெதுவாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டு வழக்கமானது.

ஜூலியஸ் சீசர் உருவாக்கிய நாட்காட்டி

ஆரம்பகால ரோமானிய நாட்காட்டி கிமு 8 ஆம் நூற்றாண்டில் ரோம் அரசை நிறுவிய ரோமுலஸ்-ஆல் உருவாக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து ஆட்சிக்கு வந்த நுமா பொம்பிலியஸ், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களை சேர்த்து 12 மாத ஆண்டாக மாற்றினார்.

ஆனால், சந்திரனின் சுழற்சியைப் பின்பற்றிய இந்த நாட்காட்டி, பருவங்களுடன் அடிக்கடி ஒத்துப்போகவில்லை. மேலும், பண்டைய ரோமின் திருத்தந்தைகள் கவுன்சில் உறுப்பினர்கள் அல்லது நாட்காட்டியை மேற்பார்வையிடும் கடமையுடன் நியமிக்கப்பட்ட பாதிரியார்களின் குழு உறுப்பினர், தேர்தல் தேதிகளில் தலையிட அல்லது அரசியல் காலத்தை நீட்டிப்பதற்காக நாட்களைச் சேர்த்ததாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டது.

publive-image

ஜூலியஸ் சீசர் கி.மு 46-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் நாட்காட்டியை சீர்திருத்த முயன்றார். அதற்காக அவர் அலெக்ஸாண்டிரிய வானியலாளர் சோசிஜெனஸின் ஆலோசனையைப் பெற்றார். எகிப்தியர்கள் செய்ததைப் போல சந்திரனின் சுழற்சியை அகற்றிவிட்டு சூரியனைப் பின்தொடருமாறு சோசிஜெனஸ் பரிந்துரைத்தார். அதன்படி, ஆண்டுக்கு 365 ¼ நாட்கள் என்று கணக்கிடப்பட்டது.

இதில் சுவாரஸ்யமாக, ஜூலியஸ் சீசர் கி.மு 46-ம் ஆண்டிற்கு 67 நாட்களைச் சேர்த்தார். இதனால், கி.மு 45-ல் புதிய ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தொடங்கியது. இரண்டு முகங்களைக் கொண்டவர் என்று நம்பப்படும் ஜானஸ் என்ற ரோமானிய கடவுளைக் கௌரவிப்பதற்காக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அவருக்கு இரண்டு முகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது - அதில் ஒன்று கடந்த காலத்தையும் மற்றொன்று எதிர்காலத்தையும் பார்க்கிறது. அதன்பிறகு, பண்டைய ரோமானியர்கள் ஜானஸுக்கு அர்ப்பணித்து ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

இருப்பினும், கிறித்துவம் பரவியவுடன், ஐரோப்பாவின் பல பகுதிகளில் ரோமானிய கடவுளைக் கொண்டாடுவது ஒரு தெய்வ வழிபாடு சடங்காகக் காணப்பட்டது. அதன்படி, இடைக்கால ஐரோப்பாவில் கிறிஸ்தவ தலைவர்கள் புத்தாண்டின் தொடக்கத்தை டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) அல்லது மார்ச் 25 (அறிவிப்பு விழா) போன்ற அதிக மத முக்கியத்துவம் கொண்ட ஒரு நாளில் கொண்டாட முயன்றனர்.

சூரிய ஆண்டின் நாட்களைக் கணக்கிடுவதில் ஜூலியஸ் சீசர் மற்றும் சோசிஜெனஸ் செய்த பிழையும் இருந்தது. சீசர் கணக்கிட்ட 365.25-க்கு மாறாக சூரிய நாட்காட்டியில் உள்ள நாட்களின் உண்மையான எண்ணிக்கை 365.24199 ஆகும். இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் 11 நிமிட இடைவெளி இருந்தது, இது 1582-ம் ஆண்டில் சுமார் 11 நாட்களைக் கூட்டியது. இந்த குறைபாடு போப்பின் கொள்கை கவலையாக இருந்தது; ஜூலியன் நாட்காட்டி தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால், கோடையில் ஈஸ்டர் கொண்டாடப்பட்டிருக்கும்” என்று வரலாற்றாசிரியர் கோர்டன் மோயர் தனது ‘தி கிரிகோரியன் காலண்டர்’ கட்டுரையில் எழுதுகிறார். அதன்பிறகு, இடைக்கால கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாட்காட்டியை தரப்படுத்துவதற்கான முயற்சி தொடங்கியது.

போப்பாண்டவர் பதிமூன்றாம் கிரிகோரி உருவாக்கிய காலண்டர்

சீர்திருத்தம் எளிதானது அல்ல. போப் கிரிகோரி இந்த நோக்கத்திற்காக வானியலாளர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் மதகுருமார்களைக் கொண்ட ஒரு சிறந்த குழுவைக் கூட்டினார். அது எதிர்கொண்ட முக்கிய சவால், கிட்டத்தட்ட ஒவ்வொரு சிவில் நாட்காட்டியையும் பாதிக்கிறது. இது ஆண்டின் இறுதியில் தொக்கி நிற்கும் ஒரு பகுதியைக் கையாள்கிறது.

publive-image

ஜூலியன் நாட்காட்டியின் தவறான கணக்கீட்டை சரிசெய்வதற்காக, கிரிகோரியன் நாட்காட்டியில் பணியாற்றிய இத்தாலிய விஞ்ஞானி அலோசியஸ் லிலியஸ், ஒவ்வொரு நான்காவது வருடமும் ஒரு லீப் ஆண்டாக இருக்கும் என்ற் ஒரு புதிய முறையை உருவாக்கினார். ஆனால், 400-ல் வகுபடாத நூற்றாண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டன. உதாரணமாக, 1600 மற்றும் 2000 ஆண்டுகள் லீப் ஆண்டுகள். ஆனால், 1700, 1800 மற்றும் 1900 வகுபடவில்லை. இந்த திருத்தங்கள் முறைப்படி பிப்ரவரி 24, 1582-ல் போப்பாண்டவர் புல் (Bull) ஆல் நிறுவப்பட்டது. இது மதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களிடையே கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது.

நாட்காட்டி சீர்திருத்தத்திற்கான மத எதிர்ப்பு சாராம்சத்தில் கத்தோலிக்க மதத்திற்கு எதிரானது. “இது சீர்திருத்த யுகம்; புராட்டஸ்டன்ட் நாடுகள் புதிய நாட்காட்டியை நிராகரித்தன. ரோமின் அதிகார வரம்பிற்குள் தங்கள் கலகத்தனத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான போப்பாண்டவர் திட்டம் இது என்று கண்டனம் செய்தனர்.” என்று மோயர் எழுதுகிறார். பதிமூன்றாம் கிரிகோரி எதிர் சீர்திருத்தத்தின் கடுமையான ஊக்குவிப்பாளராக இருந்ததால் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது அல்ல என்று அவர் கூறுகிறார்.

இதன் விளைவாக, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் போன்ற கத்தோலிக்க நாடுகள் புதிய முறையை விரைவாக ஏற்றுக்கொண்டன. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற புராட்டஸ்டன்ட் நாடுகள் 18-ம் நூற்றாண்டின் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டன. 1752-ம் ஆண்டில் இங்கிலாந்து புதிய நாட்காட்டியை ஏற்றுக்கொண்டபோது தெருக்களில் ஒரு கலவரம் நடந்ததாக சில கணக்குகள் தெரிவிக்கின்றன. 1923-ல் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட கடைசி ஐரோப்பிய நாடு கிரீஸ் ஆகும்.

அமெரிக்காவில் உள்ள ஐரோப்பிய காலனிகள் தங்கள் தாய் நாடுகள் ஏற்றுக்கொண்டபோது, புதிய நாட்காட்டியை ஏற்றுக்கொண்டாலும், ஐரோப்பா அல்லாத உலகின் பெரும் பகுதிகளும் 20-ம் நூற்றாண்டின் போக்கில் அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கின. உதாரணமாக, ஜப்பான் தனது பாரம்பரிய சந்திர நாட்காட்டியை விடுத்து 1872-ல் கிரிகோரியன் நாட்காடிக்கு மாற்றியது. அதே நேரத்தில், இதை 1912-ல் சீனா ஏற்றுக்கொண்டது.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் பாரம்பரிய நாட்காட்டி கிரிகோரியன் காலெண்டருடன் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், சைத்ரா மாதத்துடன் (மார்ச் 21/22) தொடங்கும் சக நாட்காட்டி பெரும்பாலான அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக கிரிகோரியன் நாட்காட்டியுடன் பயன்படுத்தப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Happy New Year
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment