Advertisment

கருணாநிதி பற்றி பழனிசாமி கூறிய கருத்து ஏன் தவறானது?

ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி தான் 1969ம் ஆண்டில் அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு நெடுஞ்செழியனை ஏமாற்றி முதல்வர் பொறுப்பேற்றார் என்று பதில் கூறினார்.

author-image
WebDesk
New Update
கருணாநிதி பற்றி பழனிசாமி கூறிய கருத்து ஏன் தவறானது?

 Arun Janardhanan

Advertisment

Why EPS is wrong in drawing a Karunanidhi comparison : வி.கே சசிகலா முன்பு தவழ்ந்து வந்து தான் முதல்வர் ஆனார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதற்கு தக்க பதிலடி தரும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி தான் 1969ம் ஆண்டில் அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு நெடுஞ்செழியனை ஏமாற்றி முதல்வர் பொறுப்பேற்றார் என்று பதில் கூறினார்.

நெடுஞ்செழியன் யார்?

வெகுஜன மக்களின் தலைவரோ அல்லது அமைப்பாளாரோ இல்லை. ஆனாலும் கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவர். அவருடைய பேச்சு திறமையாலும் அறிவினாலும் அறியப்பட்டவர். அண்ணாதுரைக்கு பிறகு அவர் தான் முதல்வராக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அண்ணா துரை முதல்வராக இருந்த போது நாவலர் தான் அடுத்த முதல்வராக வருவார் என்பதை தம்பி வா, தலைமை ஏற்க வா என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்ணாதுரை அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சராக கருணாநிதி இருந்தபோதிலும் திமுகவின் முதல் 5-6 தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்படவில்லை. 1949ஆம் ஆண்டு திமுக நிறுவப்பட்ட போது வட சென்னையில் உள்ள ராயபுரத்தில் ராபின்சன் பூங்காவில் எடுக்கப்பட்ட பிரபலமான புகைப்படத்தில் அவர் இல்லை. அது நாவலர் என்று அவருடைய போட்டியாளர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டியது உண்டு.

கருணாநிதியின் வளர்ச்சி

பழனிசாமி கூறியதற்கு மாறாக, அண்ணாவின் மறைவுக்கு பிறகு அதிகார மாற்றம் மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் நடைபெற்றது. க்களை அணிதிரட்டவும், கட்சிக்காக பணம் திரட்டவும், குறிப்பாக திரைப்படத் துறையுடனான அவரது தொடர்புகள் மற்றும் அவரது மூலோபாய திறன்களுக்காகவும் ஒரு அடிமட்டத் தலைவரின் உருவத்தின் காரணமாக கருணாநிதி ஒரு தலைவராக உருவெடுத்தார். அவரின் உயர்ந்த மற்றும் அறிவார்ந்த நடை நாவலரை காட்டிலும் பாதுகாப்பான தேர்வாக கருணாநிதி அறியப்பட்டார்.

அண்ணாவின் ஆட்சியின் போது கல்வித்துறையை நாவலர் கவனித்துக் கொண்டிருந்த போதும், கருணாநிதி மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவராகவே கருதப்பட்டார். மேலும் கருணாநிதி, பிரபலமான எம்.ஜி.ஆர். உட்பட திமுகவின் முக்கியமான இரண்டாம் மட்ட தலைவர்களின் ஆதரவை பெற்றிருந்தார். கருணாநிதியின் ஏற்றம் ஜனநாயக தன்மையற்றது என்று நுட்பமாக கூறலாம். ஆனாலும் நாவலர் அண்ணாவிற்கு பிறகு பொறுப்பேற்றிருந்தால் திமுக இவ்வளவு காலம் இருந்திருக்காது என்று குறிப்பிட்டார்.

பழனிசாமி Vs கருணாநிதி

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டது போன்று கருணாநிதி அதிகாரத்திற்காக எதையும் செய்யவில்லை. 201`7ம் ஆண்டு வி.கே. சசிகலா, பிப்ரவரி மாதம் பழனிசாமி மற்றும் டி.டி.வி தினகரன் தலைமையிலான வி.கே சசிகலா பிரிவு அதிமுக எம்எல்ஏக்களை பல நாட்கள் ஒன்றாக இணைத்து, பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக வருவதை தடுத்தனர்.

கருணாநிதி முதல்வரான பிறகு 1969ம் ஆண்டில் நாவலர் கருணாநிதியின் அமைச்சரவையில் இணைந்தார். கருணாநிதியுடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக உருவான போது தான் எம்.ஜி.ஆரை கருணாநிதி ஓரம் கட்டினார் என்ற வதந்திகள் வெளியான போது , கருணாநிதி நாவலரையும் அப்படித்தான் ஓரங்கட்டினார் என்று கூறினார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment