scorecardresearch

Obesity: உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஏன் விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும்?

ஒபிசிட்டி ( Obesity) என்று அழைக்கப்படும் உடல் பருமன் பிரச்சனை பல நோய்களுக்கு காரணமாக அமைக்கிறது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டு, முதுகுவலி மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆபத்தாக அமைக்கிறது. இப்பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

Obesity: உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஏன் விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும்?

அமெரிக்காவில் உள்ள 14 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உடல் பருமன் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பரிந்துரைகள் பல பெற்றோர்களுக்கும், நிபுணர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவை மிகவும் இளம் குழந்தைகளுக்கு கூட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சையும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக உருவாகி வரும் உடல் பருமன் பற்றிய அறிவியல் புரிதலில் இருந்து வழிகாட்டுதல்கள் உருவாகப்பட்டுள்ளது. டைப் 2 வகை சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டு, முதுகுவலி புற்றுநோய் உள்பட பல பாதிப்புகளுக்கு உடல் பருமன் ஒரு ஆபத்து காரணியாகும். முடிந்த அளவு இப்பிரச்சனைக்கு சீக்கிரம் சிகிச்சையளிப்பதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம்.

இங்கே சிறுவயதில் உடல் பருமன் குறித்த சில கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் நிபுணர்கள் ஏன் அதை விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.

உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி புதிய வழிகாட்டுதல்கள் என்ன கூறுகின்றன?

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸின் பரிந்துரைகள் உடல் பருமன் என்பது மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மையின் விளைவு மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகிறது. உடல் பருமன் என்பது மரபியல் உட்பட பல பின்னிப்பிணைந்த காரணங்களைக் கொண்ட ஒரு நாள்பட்ட நோயாகும்.

உடல் பருமன் மிகவும் வலுவான மரபுவழி பண்புகளில் ஒன்றாகும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள். பல தசாப்தங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகள், தனித்தனியாக வளர்க்கப்படும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் பொதுவாக ஒரே மாதிரியான உடல் வடிவங்கள் மற்றும் எடையுடன் வளர்வதைக் காட்டியது. தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் உயிரியல் பெற்றோரின் அதே வடிவங்கள் மற்றும் எடைகளைக் கொண்டுள்ளனர்.

பொதுவாக ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாத இடத்தில் குழந்தைகள் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமைக்கிறது. உடல் பருமன் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தங்களது சுற்றுப்புறத்தில் கிண்டல், கேலிகளுக்கு ஆளாகின்றனர். அது அதிக உணவு, சமூக தனிமைப்படுத்தல், சுகாதார சேவைகளைத் தவிர்த்தல் மற்றும் உடல் செயல்பாடு குறைதல் என்று சுகாதாரப் பாதையை மேலும் சிக்கலாக்குகிறது என்று அகாடமி கூறுகிறது.

அதிக எடை மற்றும் உடல் பருமனை நிபுணர்கள் எவ்வாறு வரையறுக்கிறார்கள்?

இவை உடலின் நிறை குறியீட்டெண், எடை மற்றும் உயரத்தின் அளவீடு மூலம் வரையறுக்கப்படுகின்றன. அதாவது பி.எம்.ஐ கொண்டு வகுக்கப்படுகிறது.

அதிக எடை என்பது 85-வது சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் பி.எம்.ஐ-யை குறிக்கிறது, ஆனால் அதே வயது மற்றும் பாலினத்திலுள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு 95 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. உடல் பருமன் என்பது ஒரே வயது மற்றும் பாலினத்திலுள்ள குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு 95வது சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருப்பது ஆகும்.

குழந்தைகளின் உடல் பருமன் எப்போது இத்தகைய பிரச்சனையாக மாறியது?

1980 மற்றும் 90களில் பிரச்சனையாக மாறியது. நிபுணர்கள் இதுகுறித்தான 1960-களின் தரவுகளில் ஆறுதல் அடைந்தனர், இது 5% குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உடல் பருமன் இருப்பதைக் குறிக்கிறது அப்போது அது தீவிர பிரச்சினையாகத் தெரியவில்லை.

ஆனால் 1980-களில் தேசிய தரவு விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 2000 ஆண்டில் இது மூன்று மடங்காகவும், 2018 இல் நான்கு மடங்காகவும் அதிகரித்தது. தொற்றுநோய் தொடங்கியதும் இதுபற்றி நிபுணர்களின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பெரும்பாலும் பிக் ஃபுட், குறைவான உடற்பயிற்சி அல்லது புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் பற்றாக்குறை போன்றவற்றை மேற்கோள் காட்டியது.

இப்போது என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன?

வாழ்க்கை முறை தலையீடுகள் சிலருக்கு வேலை செய்யாது என்று இல்லை. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், அதிக எடை மற்றும் பருமனான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு “தீவிரமான நடத்தை மற்றும் வாழ்க்கை முறை சிகிச்சை” வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது, இது மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சையின் மிகவும் பயனுள்ள தலையீடு ஆகும்.

மூன்று முதல் 12 மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 26 மணிநேரம் நேரில் சிகிச்சை அளிப்பது மிகவும் பயனுள்ள திட்டங்களில் அடங்கும். சிகிச்சையானது ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு மற்றும் பழக்கவழக்க மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எதிர்பார்த்த முடிவு? பிஎம்ஐயில் 1 முதல் 3 புள்ளிகள் குறைவு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Why experts are urging swifter treatment for children with obesity

Best of Express