Advertisment

பாலஸ்தீனத்தில் யூத தேச அரசை காந்தி எதிர்த்தது ஏன்?

ஐரோப்பாவில் யூத மக்களின் அவல நிலை குறித்து மகாத்மா காந்தி ஆழ்ந்த அனுதாபத்துடன் இருந்தார். ஆனால், அவர் சியோனிஸ்டுகளுக்கு எதிரானவர். அவருடைய வாதம் என்ன?

author-image
WebDesk
New Update
Jewish and Gandhi

பாலஸ்தீனத்தில் யூத தேச அரசை காந்தி எதிர்த்தது ஏன்?

ஐரோப்பாவில் யூத மக்களின் அவல நிலை குறித்து மகாத்மா காந்தி ஆழ்ந்த அனுதாபத்துடன் இருந்தார். ஆனால், அவர் சியோனிஸ்டுகளுக்கு எதிரானவர், பாலஸ்தீன அரபு மக்கள் ஏற்கனவே வசித்து வந்த பாலஸ்தீனத்தில் பலவந்தமாக யூதர்களுக்கென ஒரு அரசை உருவாக்கும் முயற்சிக்கு எதிரானவர். அவருடைய வாதம் என்ன?

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Why Gandhi opposed a Jewish nation-state in Palestine

நவம்பர் 26, 1938 அன்று ஹரிஜன் இதழில் மகாத்மா காந்தி எழுதினார், “இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கு அல்லது பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமானது போன்ற அதே அர்த்தத்தில் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் கட்டுரை - 'யூதர்கள்' - பல ஆண்டுகளாக தீவிர விவாதத்திற்கு உட்பட்டிருக்கிறது. சிலரால் அவரது அப்பாவித்தனத்திற்கு சான்றாக இது மேற்கோள் காட்டப்பட்டது. மற்றவர்கள் விளைவுகளைப் பொருட்படுத்தாமல், அகிம்சையின் மீதான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பின் மேலும் சான்றாகக் கருதுகின்றனர்.

யூத மக்களிடம் ஆழ்ந்த அனுதாபத்துடன் இருந்த காந்தி

வரலாற்று ரீதியாக தங்கள் மதத்திற்காக அநியாயமாக துன்புறுத்தப்பட்ட யூத மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் கொண்டிருப்பதாக மகாத்மா எப்போதும் தெளிவுபடுத்தினார்.

"எனது அனுதாபங்கள் அனைத்தும் யூதர்களிடம் உள்ளன ... அவர்கள் கிறிஸ்தவத்தின் தீண்டத்தகாதவர்களாக இருந்துள்ளனர். கிறிஸ்தவர்களால் அவர்கள் நடத்தப்படுவதற்கும் இந்துக்கள் தீண்டத்தகாதவர்களை நடத்துவதற்கும் இடையே உள்ள ஒற்றுமை மிகவும் நெருக்கமானது. தங்களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற நடத்தையை நியாயப்படுத்துவதற்காக இரண்டு நிகழ்வுகளிலும் மத அனுமதி கோரப்பட்டுள்ளது” என்று காந்தி ‘யூதர்கள்’ (The Jews) இதழில் எழுதினார்.

“யூதர்கள் மீதான ஜெர்மனியின் துன்புறுத்தலுக்கு இணையாக வரலாற்றில் இல்லை” என்றும் அவர் எழுதினார். மேலும், அந்த நேரத்தில் (இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்பு) அடால்ஃப் ஹிட்லரை சமாதானப்படுத்தும் பிரிட்டனின் கொள்கையில் தனது கவலையை வெளிப்படுத்தினார். மனிதநேயத்திற்காகவும், யூத மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும், ஜெர்மனியுடனான போர் கூட முற்றிலும் நியாயப்படுத்தப்படும் என்று மகாத்மா அறிவித்தார்.

“மனிதகுலத்தின் பெயரிலும், மனிதனுக்காகவும் ஒரு நியாயமான போர் எப்போதாவது நடந்தால், ஜெர்மனிக்கு எதிரான ஒரு போர், ஒரு முழு இனத்தையும் வேண்டுமென்றே துன்புறுத்துவதைத் தடுக்க, அது முற்றிலும் நியாயப்படுத்தப்படும்” என்று காந்தி எழுதினார்.

பாலஸ்தீனத்தில் சியோனிச அரசை காந்தி ஆதரிக்கவில்லை.

“யூதர்களை அரேபியர்கள் மீது திணிப்பது தவறானது, மனிதாபிமானமற்றது… பாலஸ்தீனம் யூதர்களுக்கு ஓரளவு அல்லது முழுவதுமாக அவர்களின் தேசிய தாயகமாக மீட்டெடுக்கப்படும் வகையில் பெருமைமிக்க அரேபியர்களைக் குறைப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்” என்று காந்தி எழுதினார்.

பாலஸ்தீனத்தில் ஒரு சியோனிச அரசை உருவாக்குவதற்கான அவரது எதிர்ப்பு இரண்டு முக்கிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக, பாலஸ்தீனம் ஏற்கனவே அரபு பாலஸ்தீனியர்களின் தாயகமாக இருந்தது, யூதர்களின் குடியேற்றமத்தை பிரிட்டன் தீவிரமாக செயல்படுத்தியதன் அடிப்படையில் வன்முறையானது.

“ஒரு மதச் செயலை [பாலஸ்தீனத்திற்குத் திரும்பும் யூதர்களின் செயல்] கத்திமுனையிலோ அல்லது வெடிகுண்டு உதவியுடன் செய்ய முடியாது” என்று அவர் எழுதினார். யூதர்கள் பாலஸ்தீனத்தில் அரேபியர்களின் நல்லெண்ணத்துடன் மட்டுமே குடியேற முடியும் என்று காந்தி உணர்ந்தார், அதற்காக அவர்கள் பிரிட்டிஷ் கத்திமுனையைக் கைவிட வேண்டும்” என்று கூறினார்.

இரண்டாவதாக, யூதர்களின் தாயகம் என்ற எண்ணம் உலகில் வேறு எங்கும் அதிக உரிமைகளுக்காக அவர்கள் போராடுவதற்கு அடிப்படைக்கு எதிரானது என்று காந்தி உணர்ந்தார் (அந்த நேரத்தில் இந்த நிலைப்பாட்டை பகிர்ந்து கொள்வதில் அவர் தனித்துவமாக இல்லை).

“யூதர்களுக்கு பாலஸ்தீனத்தைத் தவிர வேறு இடம் இல்லையென்றால், அவர்கள் குடியேறிய உலகின் பிற பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற எண்ணத்தை அவர்கள் விரும்புவார்களா?” என்று காந்தி எழுதினார். மேலும், யூதர்களின் தேசிய தேசிய இடத்துக்கான உரிமைகோரல் யூதர்களை ஜெர்மனி வெளியேற்றத்திற்கு ஒரு வண்ணமயமான நியாயத்தை அளிக்கிறது என்று காந்தி எழுதினார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்ரேல் மீதான காந்தியின் நிலைப்பாடு

மகாத்மா காந்தியின் நிலைப்பாடு எந்த வகையிலும் தனித்துவமானது அல்ல. அரபு உலகம் முழுவதும் உள்ள தலைவர்களும் அதற்கு அப்பால் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் பிரிட்டனின் பாலஸ்தீன நிர்வாகம் மற்றும் 1917-ன் பால்ஃபோர் பிரகடனத்தால் திகைத்தனர், இது யூதர்களுக்கு பிரிட்டிஷ் ஆணையில் தாயகம் என்று உறுதியளித்தது. மறைந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கோஸ்ட்லர், ஒரு யூதரே, பிரகடனத்தைப் பற்றி எழுதினார்:  “ஒரு தேசம் இரண்டாவது தேசத்திற்கு இந்த நாடு மூன்றாவது நாடு என்று உறுதியளித்தது.” என்று எழுதினார்.

காந்தியின் கருத்துகளும் அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது பல தசாப்தங்களாக புதிய நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதற்கு காரணமாக இருந்தது.  “பல வழிகளில், நேரு இந்த கண்ணோட்டத்தை மகாத்மா காந்தியிடமிருந்து பெற்றார்” என்று முன்னாள் இந்திய தூதர் சின்மயா கரேகான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரித்த ஐநா தீர்மானம் 181-க்கு எதிராக இந்தியா வாக்களித்தது. 1950-ல் இஸ்ரேல் அரசை அங்கீகரித்தாலும், பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் கீழ் 1992 வரை அதிகாரப்பூர்வ ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்படவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment