Advertisment

கில்கித் - பல்திஸ்தான் : இந்தியா பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நிலப்பரப்பாக விளங்குவது ஏன்?

ஜம்மு & காஷ்மீர் 1947இல் இந்திய யூனியனுடன் சட்டப்பூர்வமான, முழுமையான மற்றும் திரும்பப்பெற முடியாத வகையில் இணைந்ததன் மூலம் கில்கித் மற்றும் பல்திஸ்தான் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று உறுதி அளித்த இந்தியா, இந்த செய்திக் குறிப்பு குறித்து இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gilgit-Baltistan, Gilgit, Baltistan, India, Pakistan

 Nirupama Subramanian

Advertisment

Gilgit-Baltistan : 2009ம் ஆண்டுக்கு முன்பு வரை வடக்கு பகுதிகள் என்று அழைக்கப்பட்டு வந்த கில்கித் மற்றும் பல்திஸ்தான் பகுதிகளை நாட்டின் ஒரு மாகாணமாக இணைப்பதற்கான வரைவு சட்டத்தை பாகிஸ்தானின் சட்டம் நீதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக டான் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் 1947-இல் இந்திய யூனியனுடன் சட்டப்பூர்வமாக, முழுமையாக மற்றும் திரும்பப்பெற முடியாத வகையில் இணைந்ததன் மூலம் கில்கித் மற்றும் பல்திஸ்தான் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று உறுதி அளித்த இந்தியா, இந்த செய்திக் குறிப்பு குறித்து இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை.

சீனா தன்னுடைய பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு அங்கமாக இந்த பகுதியின் வளர்ச்சிக்கு பாரிய அளவு முதலீடு செய்ய உள்ளது என்பதால் சீனா - பாகிஸ்தான் எக்கானமிக் காரிடர் ஒப்பந்தத்தின் வெளிச்சத்தில் இந்தியாவுக்கான இப்பகுதியின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மேலும் கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல்களுக்கு பிறகு, இரண்டு எல்லைப் பிரச்சனைகள் குறித்து சிந்தித்து வருகிறது இந்தியா.

இப்பகுதியின் வரலாறு

கில்கித், முன்னாள் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணத்தின் இந்து ராஜாவான ஹரி சிங்கிடம் இருந்து கில்கித் பகுதியை குத்தகைக்கு வாங்கி நேரடியாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். 1947ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 26ம் தேதி அன்று இந்தியாவுடன் இந்த பகுதியை ஹரி சிங் இணைத்த போது, ஆங்கில தளபதி மேஜர் வில்லியம்ஸ் அலெக்ஸாண்டர் ப்ரவுன் தலைமையில் கில்கித்தில் சாரணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். லடாக்கின் ஒரு பகுதியாக இருந்த பல்திஸ்தானை கைப்பற்றும் முனைப்புடன் சென்ற அவர்கள் ஸ்கார்து, கார்கில், த்ராஸ் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்கள். அதற்கு பின்பு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய ராணுவம் கார்கில் மற்றும் த்ராஸை ஆகஸ்ட் மாதம் 1948- ஆம் ஆண்டு கைப்பற்றியது.

Revolutionary Council of Gilgit-Baltistan என்று அழைக்கப்பட்ட அரசியல் கட்சி, நவம்பர் மாதம் 1ம் தேதி அன்று 1947ம் ஆண்டு, கில்கித் பல்திஸ்தானை சுதந்திர நாடாக அறிவித்தது. நவம்பர் 15ம் தேதி அன்று பாகிஸ்தானுடன் இப்பகுதியை இணைத்துவிட்டதாகவும் கூறியது. இது முழுமையாக நிர்வாகக் கட்டுப்பாட்டின் அளவிற்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதிகளை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டமான ”எல்லைக் குற்றங்கள் ஒழுங்குமுறையின்” (Frontier Crimes Regulation) கீழ் நேரடியாக ஆட்சி செய்ய தேர்வு செய்தது.

1949ம் ஆண்டு ஜனவரி 1 அன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் ஏப்ரல் மாதத்தில் ஆசாத் ஜம்மு காஷ்மீரின் தற்காலிக அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆசாத் ஜம்மு காஷ்மீர் என்பது பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை கைப்பற்ற பாகிஸ்தான் துருப்புகளால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆசாத் ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் கில்கித்-பல்திஸ்தானின் நிர்வாகத்தை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

எல்லை விவகாரம் : முக்கிய ரோந்து பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்ள இந்தியா – சீனா ஒப்புதல்

மாகாணங்களுக்கு அப்பால்

1974ம் ஆண்டு, பாகிஸ்தான் முழுமையாக தனது குடிமை அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டது. அது பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களை பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித்-பல்திஸ்தான் மாகாணங்களாக இணைக்கப்படவில்லை. காஷ்மீர் பிரச்சனையின் தீர்மானம் பொது வாக்கெடுப்புக்கு அழைக்கப்பட்ட ஐ.நா. தீர்மானங்களுக்கு இணங்க வேண்டும் என்ற தனது சர்வதேச வழக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்த பாகிஸ்தான் விரும்பவில்லை என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

1975 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பைப் பெற்றது, இது வெளிப்படையாக சுயராஜ்ய தன்னாட்சி பிரதேசமாக மாறியது. இந்த அரசியலமைப்பு இஸ்லாமாபாத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும் வடக்கு பகுதிகளில் (North Areas) எந்த அதிகார வரம்பையும் கொண்டிருக்கவில்லை. (எல்லை குற்றங்கள் ஒழுங்குமுறை 1997ம் ஆண்டு கைவிடப்பட்டது. ஆனால் 2018ம் ஆண்டு தான் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது) உண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் பாகிஸ்தானின் கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழும், பாதுகாப்பு ஸ்தாபனத்தின் கட்டுப்பாட்டில், காஷ்மீர் கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வருகிறது.

முக்கிய வேறுபாடு என்னவென்றால், பாகிஸ்தான் அரசியலமைப்பை பிரதிபலிக்கும் தங்கள் சொந்த அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பெற்றிருக்கின்றனர். ஆனால் சிறுபான்மை ஷியாக்கள் அதிகம் உள்ள வடக்கு பகுதிகளில் போதுமான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை. குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் அவர்கள் பாகிஸ்தான் நாட்டு பிரஜைகளாக கருதப்பட்டாலும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிடைத்துள்ள அரசியல் அமைப்பு பாதுகாப்பு அம்சங்கள் கில்கித் பல்திஸ்தான் மக்களுக்கு கிடைக்கவில்லை.

முதல் மாற்றங்கள்

புதிய நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் தான் வடக்கு பகுதிகளில் தனது நிர்வாக ஏற்பாடுகளில் மாற்றங்களை பரிசீலிக்கத் தொடங்கியது பாகிஸ்தான். ஏனெனில் இப்பகுதியின் புதிய 9/11 இயக்கவியல் மற்றும் மூலோபய வளர்ச்சிக்காக பெருகிய சீன ஈடுபாடு காரணமாக அரசியலமைப்பு உறுதி சாத்தியமற்றதாக தெரிந்தது. சீனாவின் இந்த திட்டங்களுக்கு கில்கித் - பல்திஸ்தான் மிக முக்கிய பகுதிகளாக இருந்தன. ஏன் என்றால் இந்த பகுதி தான் இது இரு நாடுகளுக்கிடையேயான ஒரே நில அணுகலை வழங்குகிறது.

2009ம் ஆண்டு, பாகிஸ்தான் கில்கித் - பல்திஸ்தான் (அதிகாரம் மற்றும் சுய நிர்வாகம்) உத்தரவு 2009-ஐ அறிமுகம் செய்து வடக்கு பகுதிகள் சட்டமன்ற கவுன்சில் (Northern Areas Legislative Council (NALC)) மாற்றப்பட்டு சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. பழைய பெயரான கில்கித் மற்றும் பல்திஸ்தான் மீண்டும் வழங்கப்பட்டது. என்.ஏ.எல்.சி. என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும். இது இஸ்லமாபாத்தில் இருந்து செயல்படும் காஷ்மீர் விவகாரம் மற்றும் வடக்கு பிராந்தியத்திற்கான அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவே இருந்தது.

சட்டசபை ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே. இது நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உறுப்பினர்களையும் ஒன்பது பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் ஆளும் கட்சி 2010 முதல் இப்பகுதியின் சட்டசபைக்கு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. நவம்பர் 2020 இல், பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாஃப் 33 இல் 24 இடங்களில் வெற்றி பெற்றது.

மாகாண அந்தஸ்த்து

இம்ரான் கானின் அரசாங்கம் கில்கித் - பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 1, 2020 அன்று கில்கித் - பல்திஸ்தானின் சுதந்திர தின அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம், கில்கித் பல்திஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக, காஷ்மீர் பிரச்சனையுடன் பாரபட்சம் காட்டாமல் அறிவிக்க வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

கில்கித்-பல்திஸ்தானை ஒரு மாகாணமாக மாற்றுவதற்கான வரைவு சட்டத்தை விரைவுபடுத்துமாறு இம்ரான் கான் ஜூலை மாதம் தனது சட்ட அமைச்சரிடம் கேட்டார் என்று டான் செய்தி வெளியிட்டுள்ளது. அது இப்போது 26 வது அரசியலமைப்பு திருத்த மசோதாவாக இறுதி செய்யப்பட்டு அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட சட்டம் தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருப்பதால், கில்கித்-பால்டிஸ்தானுக்கு அரசியலமைப்பின் பிரிவு 1-ல் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.

கில்கித்-பல்திஸ்தானுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக சட்டசபையை நிறுவுவதைத் தவிர்த்து, ஒரு தொகுப்பு திருத்தங்கள் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். இது தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டில் பிராந்தியத்தின் பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

1.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கில்கித் - பல்திஸ்தானின் நீண்ட நாள் கோரிக்கை, மாகாண அந்தஸ்த்து வழங்கப்படுவதால் நிறைவேற்றப்படும். ஷியாக்களை குறிவைக்கும் மதவெறி போராளிக் குழுக்களை கட்டவிழ்த்துவிட்டதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக இப்பகுதிகளில் மக்கள் மத்தியில் கோபம் நிலவி வருகிறது, ஆனால் பாக்கிஸ்தான் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தால் இவை அனைத்தும் மேம்படும் என்பதே ஒன்றுபட்ட உணர்வாக இருக்கிறது. சுதந்திரத்திற்காக ஒரு சிறிய இயக்கம் உள்ளது, ஆனால் அது மிகக் குறைந்த இழுவையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் முடிவு சீனாவின் அழுத்தத்திற்கு உட்பட்டது என்று சில அறிக்கைகள் பரிந்துரைத்திருந்தாலும், கில்கித்-பல்திஸ்தானின் தெளிவற்ற நிலை அதன் திட்டங்களின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று எச்சரிக்கையாக இருந்தாலும், இது இந்தியாவின் ஆகஸ்ட் 5, 2019 மாற்றங்களை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்ற ஊகமும் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலின் போது, பாகிஸ்தான் முஸ்லீம் லீக், இம்ரான் கான், இந்தியாவுடன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் படி கில்கித் - பல்திஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இரண்டையும் இணைக்க உள்ளார் என்று குற்றம் சாட்டியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment