‘நியூயார்க் டூ டெல்லி’… 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமான சேவையை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தொடங்கியது ஏன்?

2007இல் தொடங்கப்பட்ட சிக்காகோ-டெல்லி நேரடி விமான சேவையை, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு நிறுத்தியது.

FILE PHOTO: An American Airlines Airbus A321-200 plane takes off from Los Angeles International airport (LAX) in Los Angeles, California, U.S. March 28, 2018. REUTERS/Mike Blake/File Photo/File Photo/File Photo/File Photo

உலகின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், நியூயார்க் -டெல்லி நேரடி விமான சேவை சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது. அதன் முதலாவது விமானம் நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு கடந்த வாரம் வந்து சேர்ந்தது.

2007இல் தொடங்கப்பட்ட சிக்காகோ-டெல்லி நேரடி விமான சேவையை, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு நிறுத்தியது.

ஏன் இந்த வழிதடத்தில் விமான சேவை இயக்கப்படுகிறது?

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தற்போது இந்த வழித்தடத்தை மீண்டும் இயக்கியுள்ளது, இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் தேவையை காட்டுகிறது. குறிப்பாக, இருநாடுகளும் சர்வதேச பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சூழலிலிருந்தது தான்.

இதுகுறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஒழுங்குமுறை மற்றும் சர்வதேச விவகாரங்களின் துணைத் தலைவர் மோலி வில்கின்சன் கூறுகையில், ” உலக நாடுகளுக்கு இடையிலான பயணத்தை எளிதாக்குவதும் மூலம், புதிய வழித்தடங்களும், விருப்பங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இது, சர்வதேச பயணத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

இதற்கிடையே, ஜனவரி 4 ஆம் தேதி துவங்க இருந்த அமெரிக்கன் ஏர்லைன்சின் பெங்களூரு-சியாட்டில் சேவை இரண்டு மாதங்கள் கழித்தே துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை வருவதன் மூலம், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் உலகளாவிய மற்றும் இந்திய தலைமையகத்தை இணைக்கும் பாலமாக அமையும் என கூறப்படுகிறது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான மற்ற சேவைகள் என்ன?

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தவிர, ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம், இந்தியாவை நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசி போன்ற அமெரிக்க நகரங்களுடன் இணைக்கிறது.

அதே போல், யுனைடெட் ஏர்லைன்ஸின் விமானச் சேவை, டெல்லியிலிருந்து நெவார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களை இணைக்கிறது.

2019 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான தனது சேவைகளைத் தொடங்கிய டெல்டா ஏர்லைன், கோவிட்-19 காரணமாக மார்ச் 2020 இல் விமானங்களை நிறுத்தியது. தற்போது, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், இன்னும் டெல்டா தனது சேவையை தொடங்கவில்லை.

நேரடி சேவை இல்லாத விமான பயணத்தை ம்க்கள் விரும்புகிறார்களா?

நேரடி விமான சேவைகள் இல்லாமல், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பயணிக்கும் பயணிகள் பொதுவாக துபாய், அபுதாபி மற்றும் தோஹா போன்ற இடங்களில் இணைப்பு விமானங்களில் பயணத்தை மேற்கொள்வார்கள்.

ஆனால், தொற்று நோய் காலத்திற்கு பிறகு, நேரடி விமான சேவைக்கே மக்கள் விரும்புவதாக விமான போக்குவரத்து அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக,வேறு நாட்டில் விமான நிலையங்களில் மாறுகையில், தொற்று பரவுவதற்கான வாய்ப்பிருப்பதாக பயணிகள் அஞ்சுகின்றனர். அதே சமயம், வெவ்வேறு நாடுகள் இடையில் பொருத்தமற்ற பயணி விதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why has american airlines resumed india ops after a decade

Next Story
ஜார்க்கண்டில் மூத்த மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கைது; யார் இந்த கிஷாந்தா?Prashant Bose alias Kishanda, who Kishanda, Kishanda arrest in Saraikela on Friday, மாவோயிஸ்ட் தலைவர் கைது, மாவோயிஸ்ட் மூத்த சித்தாந்தவாதி கைது, கிஷாந்தா, ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கிஷாந்தா கைது, Kishanda’s wife Sheiladi, veteran Maoist ideologue Kishanda, Kishanda wife four others arrested, Jharkand police, Jharkand
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express