Advertisment

தொழிற்சாலை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத அளவு டிசம்பரில் சரிவை சந்தித்தது ஏன்?

டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத அளவு 0.4 சதவீதமாக சரிந்தது. உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? எண்கள் எதைக் குறிக்கின்றன?

author-image
WebDesk
New Update
தொழிற்சாலை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத அளவு டிசம்பரில் சரிவை சந்தித்தது ஏன்?

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, தொழில்துறை உற்பத்தி டிசம்பர் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத அளவு 0.4 சதவீதத்திற்கு சரிந்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தியானது, IIP எனப்படும் தொழில்துறை உற்பத்தி குறியீடு மூலம் அளவிடப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு 1.3 சதவீத வளர்ச்சியையும், 2020 டிசம்பரில் 2.2 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது.

Advertisment

உற்பத்தி சரிய என்ன காரணம்?

டிசம்பர் IIP ஆனது, உற்பத்தி, மூலதனப் பொருட்கள், நுகர்வோர் நீடித்த பொருட்களின் வெளியீடு ஆகியவற்றன் காரணமாக கீழே சென்றுள்ளது. 2019 டிசம்பரில் காணப்பட்ட தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட ஐஐபியின் பொதுவான குறியீட்டு நிலை அதிகமாக தான் இருந்தது. ஆனால், ஒமிக்ரான் மாறுபாட்டால் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொழிற்சாலை உற்பத்தியில் அடுத்த மாதம் பாதிப்பை காணலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

டிசம்பரில் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவானது உற்பத்தி வெளியீட்டில் காணப்பட்ட எதிர்மறை வளர்ச்சி தான். அதன் 0.1 சதவீதம் தான், IIP இன் எடையில் 77.6 சதவிகிதம் பிரதிபலிக்கிறகு. உற்பத்தி வெளியீடு கடந்த மாதம் 0.8 சதவீதம் வளர்ச்சியையும், ஓராண்டிற்கு முன்பு 2.7 சதவீதம் வளர்ச்சியையும் கொண்டிருந்தது.

பலவீனமான நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவை தொழில்துறை உற்பத்தியை பாதிக்கின்றன. முதலீட்டின் குறியீடான மூலதனப் பொருட்கள், ஒரு மாதத்திற்கு முன்பு 2.0 சதவிகிதமும், ஒரு வருடத்திற்கு முன்பு 2.2 சதவிகிதம் வளர்ச்சியில் குறைவு ஏற்பட்ட நிலையில், டிசம்பரில் மட்டும் 4.6 சதவிகிதம் வளர்ச்சியை சரிவை சந்தித்தது.

நுகர்வோருக்கான நீடித்த பொருட்கள் உற்பத்தி , ஒரு மாதத்திற்கு முன்பு 5.4 சதவிகிதமும், ஒரு வருடத்திற்கு முன்பு 6.5 சதவிகிதமும் வளர்ச்சி பெற்ற நிலையில், டிசம்பரில் 2.7 சதவீதமாக சுருங்கியது. அதே சமயம், நுகர்வோருக்கான குறுகியகால பொருள்கள் உற்பத்தி, ஒரு மாதத்திற்கு முன்பு 0.5 சதவிகிதமும், ஒரு வருடத்திற்கு முன்பு 1.9 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் 0.6 ஆக இருந்தது.

சுரங்க உற்பத்தி ஒரு மாதத்திற்கு முன்பு 4.9 சதவிகிதமும், ஒரு வருடத்திற்கு முன்பு 3 சதவிகிதமும் குறைந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் சுரங்க உற்பத்தி 2.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது.

மின் உற்பத்தி ஒரு மாதத்திற்கு முன்பு 2.1 சதவிகிதமும், ஒரு வருடத்திற்கு முன்பு 5.1 சதவிகிதமுமாகவும் பதிவு செய்திருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் 2.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், ஐஐபி கடந்த ஆண்டு இதே காலத்தில் 13.3 சதவீத குறைந்ததற்கு எதிராக 15.2 சதவீதம் வளர்ந்தது.

எண்கள் எதைக் குறிக்கின்றன?

பார்க்லேஸின் தலைமை இந்திய பொருளாதார நிபுணர் ராகுல் பஜோரியா கூறுகையில், "குறுகிய கால ஓமிக்ரான் அலை மற்றும் இயக்கம் கட்டுப்பாடுகள் ஜனவரியில் தொழில்துறை உற்பத்தியை மேலும் பாதிக்கலாம். தொற்று நோய் பரவலை விரைவாக தடுப்பது, ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதுதான், பிப்ரவரி முதல் பொருளாதார மீட்சியை மீண்டும் தொடங்கும் என்று அர்த்தம் என்றார்.

இந்தியா மதிப்பீடுகளின்படி, தொழில்துறை உற்பத்தியின் தொடர்ச்சியான மாதாந்திர தரவு, மீண்டும் மீட்சி பெற வேண்டுமானால், இதுவரை வழங்கப்பட்டதை விட, நுகர்வுத் தேவைக்கு கொள்கை வகுப்பாளர்களின் கவனம் தேவை என்பதை தெளிவுபடுத்துகிறது என தெரிவிக்கிறது.

இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்ஹா கூறுகையில், "மூலதனப் பொருட்களில் தொடர்ந்து பலவீனம் இருப்பது நல்லதல்ல. தனியார் கார்ப்பரேட் முதலீடு அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறிகள் இருந்தாலும், ஐஐபி தரவுகளில் அது இன்னும் பிரதிபலிக்கவில்லை என்றார்.

ICRAவின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், " மூலதனப் பொருட்கள் யோஒய் விதிமுறைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டன. அதே போல் கோவிட்-க்கு முந்தைய நிலையுடன் தொடர்புடையது. இது முதலீட்டுச் சுழற்சியில் உள்ள தற்காலிகத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. எதிர்பார்த்தப்படியே, சமீபத்திய RBI வெளியீடு Q2 FY2022 இல் 68% திறன் பயன்பாட்டைக் குறிக்கிறது. இது மூன்றாவது அலை இருந்தபோதிலும் தற்போதைய காலாண்டில் 71-72% ஆக மேம்படும். ஆனால் பிரைவேட் கேபெக்ஸ் சுழற்சியில் வளர்ச்சியை தூண்டுவதற்கு போதுமானதாக இல்லை என்றார்.

ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலை என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி, வியாழன் அன்று தனது பணவியல் கொள்கையில், முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது.

அதாவது,நீடித்த அடிப்படையில் வளர்ச்சியை உயிர்ப்பிக்கவும்,தக்கவைக்கவும் ஒரு இணக்கமான நிலைப்பாடு" மற்றும் பொருளாதாரத்தில் கோவிட்-19 இன் தாக்கத்தைத் தொடர்ந்து குறைக்கவும், அதே நேரத்தில் பணவீக்கம் முன்னோக்கி செல்லும் இலக்கிற்குள் இருப்பதை உறுதிசெய்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment