மும்பை - கர்நாடகா பகுதி ஏன் கிட்டூர் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

சமீபத்தில் ஹைதராபாத்-கர்நாடகா பகுதியை கல்யாண கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்திருந்தோம். தற்போது மும்பை-கர்நாடகா பகுதியை கிட்டூர் கர்நாடகா என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று பொம்மை கூறினார்

சமீபத்தில் ஹைதராபாத்-கர்நாடகா பகுதியை கல்யாண கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்திருந்தோம். தற்போது மும்பை-கர்நாடகா பகுதியை கிட்டூர் கர்நாடகா என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று பொம்மை கூறினார்

author-image
WebDesk
New Update
Karnakata, kittur karnataka, mumbai - karnataka region renamed

Darshan Devaiah BP

Mumbai-Karnataka region been rechristened as Kittur Karnataka : 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மும்பை - கர்நாடகா பகுதி கிட்டூர் கர்நாடகா என்று திங்கள் கிழமை அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உத்தர கர்நாடகா, பெலகவி, தர்வாட், விஜயபூரா, பாகல்கோட், கதக் மற்றும் ஹாவேரி மாவட்டங்கள் அடங்கிய பகுதி கிட்டூர் கர்நாடகா என்று அழைக்கப்படும் என்று பெங்களூரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி. முத்துசாமி கூறினார்.

கன்னட ஆதரவு அமைப்புகளின் கோரிக்கை

Advertisment

நவம்பர் 1ம் தேதி அன்று கர்நாடகா உதயமான 66வது ராஜ்யோத்சவா நாளன்று, முதல்வர் பசவராஜ் பொம்மை மும்பை கர்நாடகா பகுதி புதிய பெயரில் அழைக்கப்படும் என்று கூறினார். எல்லை தகராறுகள் அடிக்கடி வெளிப்படும்போது பழைய பெயரைத் தக்கவைத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. சமீபத்தில் ஹைதராபாத்-கர்நாடகா பகுதியை கல்யாண கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்திருந்தோம். தற்போது மும்பை-கர்நாடகா பகுதியை கிட்டூர் கர்நாடகா என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று பொம்மை கூறினார். சுதந்திரத்திற்கு முன் பாம்பே பிரசிடென்சியின் கீழ் இருந்த பகுதிக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநிலத்தில் உள்ள கன்னட ஆதரவு அமைப்புகள் நீண்ட காலமாக எழுப்பி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை-கர்நாடகாவை கிட்டூர் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்வதன் மூலம் பாஜக அரசாங்கம் முந்தைய பாம்பாய் மாகாணத்திற்கும் காலனித்துவ கால பெயருடன் 1956ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கர்நாடகாவில் வந்த பகுதிகளின் உறவுகளில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்ள விரும்புகிறது.

கர்நாடக மாநிலம் இணைந்த பிறகு எல்லைப் பிரச்சனைகள் ஆரம்பமாகின. அந்த சர்ச்சைகள் இப்போது தீர்ந்தாலும், அவ்வப்போது சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன… இனி வட கர்நாடகா பகுதியை மும்பை-கர்நாடகா என்று அழைப்பதில் என்ன பயன்” என்று பொம்மை கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்ட்ராவின் பிராந்திய உரிமை கோரல்கள்

Advertisment
Advertisements

மகாராஷ்டாவுடனான எந்த ஒரு பிணைப்பையும் துண்டித்துக் கொள்வதற்காகவே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னட ராஜ்யோத்சவா நிகழ்வின் போது மகாராஷ்ட்ரா எகிகாரன் சமதி கருப்பு தினத்தை கடைபிடிக்கும். அவர்கள் மொழி மற்றும் மாநிலங்களின் மறுசீரமைப்பின் போது பெலகாவியின் சில பகுதிகள் மகாராஷ்டிராவிலிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டன. அப்படி பிரிக்கப்பட்டதில் பெலகவி மகாராஷ்ட்ராவில் இருந்து பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெலகாவி, உத்தர கன்னடா, பிதார் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில் உள்ள 814 கிராமங்கள் மற்றும் பெலகாவி, கார்வார் மற்றும் நிப்பானி ஆகிய நகரங்களை உள்ளடக்கிய கர்நாடக எல்லையில் 7,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு மகாராஷ்டிரா உரிமை கோரியுள்ளது. இந்தப் பகுதிகள் அனைத்தையும் இணைக்க மகாராஷ்டிரா விரும்புகிறது.

பல்மொழி மாகாணமாக விளங்கிய பம்பாய், இன்றைய கர்நாடகாவின் விஜயபூரா, பெலகவி, தர்வாட், உத்தர கன்னடா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் 1956ன் கீழ் பெலகவி மற்றும் பம்பாயின் 10 தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு மைசூர் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கர்நாடகா என்ற பெயர் 1973ம் ஆண்டு சூட்டப்பட்டது.

2012ம் ஆண்டு கர்நாடக அரசு சுவர்ண விதான சௌதாவை பெலகவியில் துவங்கியது. இது மாநிலத்தில் சட்டமன்றமான விதான சௌதாவைப் போன்றே உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிரா மற்றும் எம்இஎஸ்ஸின் எந்தவொரு பிராந்திய உரிமைகோரல்களையும் நிராகரிப்பதற்காக மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநில சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை சுவர்ண விதான சவுதாவில் நடத்துகிறது.

கிட்டூர் பெயர் காரணம் என்ன?

ராணி சென்னம்மா (1778-1829) ஆட்சி செய்த வட கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று தாலுகாவான கிட்டூரின் பெயர் தான் தற்போது இந்த பகுதிக்கு சூட்டப்பட்டுள்ளது. ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு 40 ஆண்டுகள் முன்பே இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்.

கிட்டூர் ராணி சென்னம்மாவின் பெயரை இப்பகுதிக்கு வைக்க பாஜக முடிவு செய்ததற்கு முக்கியமான காரணம் சென்னம்மா லிங்காயத்து சமூகத்தின் உள்பிரிவான பஞ்சமசலி என்ற சமூகத்தை சேர்ந்தவர். சில மாதங்களாக இடஒதுக்கீடு பட்டியலில் 2A-OBC பிரிவில் சேர்க்கக் கோரி வரும் பஞ்சமசாலிகளுக்கும் பாஜக அரசுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று கர்நாடக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஹைதராபாத்-கர்நாடகா பகுதியின் பெயரை எடியூரப்பா மாற்றினார்.

2019ம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான அரசு ஹைதராபாத் - கர்நாடகா பகுதியை கல்யாண கர்நாடகா என பெயர் மாற்றம் செய்தார். இப்பகுதி ஹைதராபாத் நிசாம் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. கடைசி நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் பகதூர் தனது ராஜ்ஜியத்தை இந்திய யூனியனுடன் இணைக்க மறுத்ததால், இப்பகுதி சுதந்திரத்திற்குப் பிறகும் ஹைதராபாத் நிசாமின் கீழ் இருந்தது. செப்டம்பர் 17, 1948 அன்று, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் நிசாமையும் அவருடைய ராணுவத்தையும் சரணடைய கேட்டுக் கொண்டார். . பிதார், பல்லாரி, கலபுராகி, கொப்பல், ராய்ச்சூர் மற்றும் யாத்கிர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதி, அதன் பின்தங்கிய நிலை காரணமாக அரசியலமைப்பின் (பிரிவு 371 ஜே) கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கல்யாண என்ற பெயர் கல்யாண இராச்சியத்தில் இருந்து வந்தது, இது 12 ஆம் நூற்றாண்டின் சரண இயக்கத்தின் மையமாக இருந்தது மற்றும் வசன சாகித்திய சமயத்தை பிரசங்கம் செய்தது. லிங்காயத் துறவியும் பக்தி இயக்கத்தின் முக்கிய நபருமான பசவண்ணா என்பவரால் இந்த சமயம் பின்பற்றப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: